பஸ் மாதிரி விமானத்தில் ஸ்டாண்டிங்கில் நின்ற பயணி! யாரு மேல தப்பு தெரியுமா?

மும்பை விமான நிலையத்திலிருந்து வாரணாசிக்கு பறக்க வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் ஸ்டாண்டிங்கில் வந்ததால் அந்த விமானம் பறக்காமல் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது குறித்த விரிவான விபரங்கள் என்ன என்பதை இங்கே காணலாம் வாருங்கள்.

விமான சேவை நிறுவனங்கள் பயணிகளிடமிருந்து விமான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது விமானத்தில் இருக்கும் கொள்ளளவை விட அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் விற்பனை செய்வார்கள். இதன் மூலம் யாராவது பயணிகள் இடையில் விமான டிக்கெட் ரத்து செய்துவிட்டால் அந்த டிக்கெட்டுகளுக்கு பதில் காலி சீட்டுகளை எடுத்துச் செல்லாமல் மற்ற பயணிக்கு இந்த சீட்டுகளை வழங்குவார்கள்.

indigo standing in flight

ஒரு விமானத்தில் எவ்வளவு டிக்கெட்டுகள் கேன்சலாகிறது என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். பெரும்பாலும் கூடுதல் எண்ணிக்கையில் முன்பதிவு செய்யப்பட்டாலும் அதில் விமான டிக்கெட் கேன்சல் செய்யப்படுவதால் பயணிகளுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை.

அப்படியே புக் செய்த அனைவரும் வந்துவிட்டால் கூடுதலாக இருக்கும் பயணியை கண்டுபிடித்து அவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கி வேறு விமான டிக்கெட்டுகளையும் வழங்கி அவர்களை சமாதானப்படுத்தி அவர்களை வேறு விமானத்திற்கு மாற்றி விட வேண்டிய பணி விமான சேவை நிறுவனங்களுக்கு இருக்கிறது. இது 99 சதவீதம் சரியாக நடந்து விடும்.

indigo standing in flight

ஆனால் மும்பையில் நேற்று அதிகாலை 7.50 மணிக்கு மும்பை விமான நிலையத்திலிருந்து வாரணாசிக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று பறக்க தயாராக இருந்தது. இந்த விமானத்தில் ஏற்கனவே புக் செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக ஒரு பயணி ஏறி விட்டதாக தெரிகிறது. பொதுவாக ஏர்போர்டில் போர்டிங் நடக்கும் போதே கூடுதலாக பயணி வருவதை கண்டுபிடித்து உடனடியாக அவர்களுக்கு வேறு விதமான சலுகைகளை விமான சேவை நிறுவனங்கள் வழங்கி விடும்.

ஆனால் சிஸ்டத்தில் ஏற்பட்ட ஏதோ கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கூடுதலாக ஒரு பயணி விமானத்தில் ஏறிவிட்டார். இதை முதலில் விமான பணிப்பெண்களும் கவனிக்கவில்லை. விமானம் சரியாக இருக்கும் இடத்திலிருந்து வெளியே வந்து டாக்ஸி லைன் மூலம் டேக் ஆப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. அப்பொழுது விமானத்திற்கு உள்ளே ஒரு பயணி நின்று கொண்டே இருப்பதை அறிந்த விமான பணிப்பெண் ஒருவர் அவரிடம் சென்று விசாரித்தார்.

அப்பொழுதுதான் தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டு வேறு ஒருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் நின்று கொண்டே வருவதாகவும் கூறியுள்ளார். இதைக்கேட்டு உடனடியாக அதிர்ச்சி அடைந்த விமானப் பெண்ணின் பெண் உடனடியாக பைலட்டிற்கு இந்த தகவலை தெரிவித்தார். உடனடியாக இந்த விமானத்தின் டேக் ஆஃப் நிறுத்தப்பட்டு மீண்டும் வந்த வழியாக கேட்பகுதிக்கு இந்த விமானம் கொண்டு செல்லப்பட்டது.

இந்திய சிவில் விமான அமைச்சகத்திற்கு விமான சேவையில் செய்து வரும் இந்த ஓவர் புக்கிங் மீது விமர்சனம் இருக்கிறது. இதை செய்யக்கூடாது என கூறியும் தொடர்ந்து விமான சேவை நிறுவனங்கள் இதை செய்து வருகிறார்கள். இதனால் விமான சேவை அமைச்சகம் புதிய விதிமுறை ஒன்றை கொண்டு வந்து இதை ஒழுங்கு படுத்தி உள்ளது.

இந்த ஓவர் புக்கிங் காரணமாக ஏதாவது பயணிக்கு விமானத்தில் போர்ட்டிங் மறுக்கப்பட்டால் அவருக்கு அடுத்த 24மணி நேரத்திற்குள் கட்டாயம் அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு விமான டிக்கெட் புக்கிங் செய்து தர வேண்டும். அது மட்டும் அல்லாமல் அவர் டிக்கெட்டுக்காக செலுத்திய பணத்தை 200சதவீதமாக அவரிடம் திருப்பி செலுத்தி விட வேண்டும். மேலும் இவர் டிக்கெட் செலுத்திய பணத்தில் எரிபொருள் செலவையும் திருப்பி செலுத்தி விட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் இப்படியாக ஓவர் புக்கிங் என்ற விஷயத்தை பல்வேறு விமான சேவைகளில் வைத்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் தவறுகள் நடப்பதில்லை.அப்படி நடந்தாலும் விமான சேவை நிறுவனங்கள் அதை சமாளித்து விடுகின்றன. ஆனால் மும்பையில் நேற்று நடந்தது என்பது துரதிஷ்டவசமான சம்பவமாக இருக்கிறது. இதனால் பலருக்கு கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயங்களில் விமான சேவை நிறுவனங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 22, 2024, 14:44 [IST]
English summary
Indigo flight returns mumbai crew spots extra passenger
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+