ஹாலிவுட் படத்தை மிஞ்சிய விமான உரசல் சம்பவம்! டில்லியே ஒரு செகண்ட் ஆடிப்போச்சுன்னா பாத்துக்கோங்க!
டெல்லி விமான நிலையத்தில் சமீபத்தில் இரு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் அளவிற்கு மிக நெருக்கமாக பறந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. இதில் இரு விமானங்களும் மயிரிழையில் விபத்து நேராமல் தப்பி உள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டெல்லி விமான நிலையம் இந்தியாவிலேயே பரபரப்பான விமான நிலையமாக இருக்கிறது. இந்த விமான நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. இதில் ஆயிரக்கணக்கில் பயணிகள் விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர். உள்நாட்டு விமானங்களும் சரி, வெளிநாட்டு விமானங்களும் சரி ஏகப்பட்ட விமானங்கள் இந்த விமான நிலையத்தில் கையாளப்படுகின்றன.

விமானங்களை செயல்படுத்துவதற்காக டெல்லி விமான நிலையத்தில் நான்கு விதமான ரன்வேகள் உள்ளன . ரன்வே எண்கள் 27,28,29 வலது, 29 இடது என நான்கு ரன்வேகள் விமானங்கள் டேக் ஆப் செய்யவும் லேண்ட் செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. டில்லி விமான நிலையத்திற்குள் எந்த விமானம் வர வேண்டும் என்றாலும் அல்லது கிளம்பி செல்ல வேண்டும் என்றாலும் இந்த நான்கில் ஏதாவது ஒரு ரன்வேயை தான் பயன்படுத்த வேண்டும்.
இதில் கடந்த 17-ம் தேதி டில்லி விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் செல்ல இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ321 ரக விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது. அதே நேரத்தில் ராய்ப்பூரில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வரும் அதே இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ் 320 என்ற விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து ஹைதராபாத் கிளம்பும் ஏர்பஸ் 321 என்ற விமான நிலையம் ரன்வே எண் 27ல் இருந்து டேக் ஆஃப் செய்வதற்கு கிரின் சிக்னல் அளிக்கப்பட்டது. இதற்கான சிக்னலை ஏர் டிராபிக் கண்ட்ரோல் துறையினர் முறையாக வழங்கியுள்ளார்கள். இந்த சிக்னல் கிடைத்தால் தான் விமானங்கள் பறக்க வேண்டும்.
இதன் படி விமானி சரியாக விமானத்தை ஓடுபாதையில் செலுத்தி சரியான வேகம் கிடைத்தவுடன் டேக் ஆஃப் செய்தார். விமானம் டேக் ஆஃப் ஆனவுடன் அவர் நேராக இடது பக்கமாக விமானத்தை திருப்பி உள்ளார். இது தான் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் ஆகும்.
ஆனால் அதே நேரத்தில் ராய்ப்பூரில் இருந்து டில்லிக்கு வரும் விமானமான இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 என்ற விமானத்திற்கு ரன்வே எண் 29 வலது ரன்வெயில் லேண்ட் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த விமானம் சரியாக லேண்ட் செய்யும் பகுதியை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத் செல்லும் விமானம் இடது பக்கம் திரும்பியதால் தற்போது பிரச்சனை ஏற்பட்டது.
அதாவது ராய்ப்பூர் விமானம் தரையிறங்கும் பாதைக்கு குறுக்காக ஹைதராபாத் செல்லும் விமானத்தின் பாதை அமைந்துள்ளது. இதை கவனிக்காமல் ஏற்ற டிராபிக் கண்ட்ரோல் அதிகாரிகள் சிக்னலை வழங்கி உள்ளதாக தெரிகிறது. இதனால் இந்த இரு விமானங்களும் கிட்டத்தட்ட விபத்தை ஏற்படுத்துவது போல் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் வகையில் மிக நெருக்கமாக பறந்து உள்ளன.
வழக்கமாக ஒரு விமானத்திற்கும் அடுத்த விமானத்திற்கு அடுத்தடுத்து பறக்கிறது என்றால் குறைந்தபட்சம் விமானத்திற்கு மேல் பகுதியில் கீழ் பகுதியில் 400 அடி இடைவெளி இருக்க வேண்டும் அதே போல பக்கவாட்டில் 1.2 நாட்டிகல் மைல் தொலைவிற்கு இடைவெளி இருக்க வேண்டும். அப்பொழுது தான் விபத்து நடப்பது தவிர்க்கப்படும்.
ஆனால் குறிப்பிட்ட சம்பவத்தில் இரு விமானங்களுக்கும் இடையேயான மேல் கீழாக உயரம் என்பது 800 அடி இருந்தது ஆனால் மிக நெருக்கமான இரு பக்கம் பக்கவாட்டிலான தூரம் என்பது வெறும் 0.2 நாட்டிக்கல் மைலாக தான் இருந்தது. அதாவது இரு விமானங்களும் கிட்டத்தட்ட ஒன்றின் மீது ஒன்று மிக நெருக்கமாக பறந்துள்ளன.
இது ஒரு நொடி டெல்லி ஏர் டிராபிக் கண்ட்ரோல் அலுவலகத்தையே பரபரப்புக்கு உள்ளாகிவிட்டது. நல்ல வேலையாக இரு விமானங்களும் விபத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பித்தது. இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை எந்த பிரச்சனையும் இல்லாமல் இது விபத்தில் ஏற்படாமல் தப்பி சென்றது. ஒரு நொடி காலதாமதமாக இருந்தால் கூட அல்லது சிறிய பிழை ஏற்பட்டிருந்தால் கூட இன்று நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. யார் மீது தவறு என்ற விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. ஆனாலும் இது போன்ற சிறு சிறு தவறுகளால் தான் மிகப்பெரிய அளவில் விபத்துக்கள் நிகழாமல் விமான போக்குவரத்து துறை மிக கண்டிப்புடன் இந்த விவகாரங்களை கையாள வேண்டும். இந்தியாவில் விமான விபத்தை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








