இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
விமான பயணத்தை புதிதாக அல்லது முதல் முறையாக மேற்கொள்வோருக்கே அது பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்கும். வானில் இருந்து பூமியை ரசிக்கலாம். மேலும், கடல் பரப்பின்மீது பறக்கும்போது அந்த கடலின் எல்லை இல்லா நீளத்தை பார்க்கலாம். இது எல்லாம் முதல் முறையாக விமானத்தில் பயணிப்பவர்களுக்கே மட்டுமே புதிதாகவும், அரிதாகவும் தெரியும்.
ஆனால், டவுன் பஸ்ஸைப் போல விமானங்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இது சற்று போரடிக்கும் சம்பவம் ஆகும். இந்த மாதிரியான பயணிகளைக் கருத்தில் கொண்டே பிரபல விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இன்டிகோ (Indigo), இன்-ஃப்ளைட் என்டர்டெயின்மென்ட் (In-Flight Entertainment) எனும் புதிய சேவையை தொடங்க இருக்கின்றது.

அது ஒன்றுமல்ல, விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பயணத்தை பொழுதுபோக்கு நிறைந்ததாக கழிப்பதற்கான ஓர் திட்டம் தான் அது ஆகும். முதல் முறையாக இந்த திட்டத்தை டெல்லி - கோவா வழித் தடத்திலேயே இன்டிகோ தொடங்க இருக்கின்றது. உழைப்பாளர்கள் தினமான மே 1 ஆம் தேதி அன்றே இந்த சேவையை முதல் முறையாக தொடங்கப்பட இருக்கின்றது.
சோதனையோட்டமாகவே இந்த திட்டத்தை இந்த வழித்தடத்தில் அது தொடங்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்டிகோ செயலி வாயிலாகவே இந்த சேவையை அது வழங்க இருக்கின்றது. இந்த திட்டம் வெற்றியடையும் எனும் அனைத்து வழித்தடங்களிலும் இந்த சேவையை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவோம் என இன்டிகோ அறிவித்து இருக்கின்றது.
அதாவது, டெல்லி - கோவா வழித்தடத்தைத் தொடர்ந்து நிறுவனத்தின் மற்ற போக்குவரத்து வழித்தடங்களிலும் விமான பயண பொழுதுப்போக்கு சேவையை இன்டிகோ தொடங்க இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இன்டிகோவின் விமான சேவை நாடு முழுவதும் பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. நிறுவனம் வசம் 350க்கும் அதிகமான விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.
ஒன்றிற்கு 2 ஆயிரத்திற்கும் அதிமான விமான சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்திலும் நிறுவனத்தின் பொழுதுபோக்கு சேவை விரைவில் நடைமுறைப்பட இருக்கின்றது. மூன்று மாதத்திற்கு டிரையல் சோதனையோட்டம் செய்யப்பட இருக்கின்றது. இதற்கு பின்னரே இன்டிகோவின் அனைத்து விமான சேவைகளிலும் பொழுதுபோக்கு திட்டம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.
விமானம் பாதுகாப்பாக வானை எட்டிய பின்னர் இந்த சேவையை பயணிகளால் பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக, விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்ட பின்னர் இன்டிகோவின் பொழுதுபோக்கு சேவையை அதன் இன்டிகோ செயலி வாயிலாக பயணிகளால் பெற்றுக் கொள்ள முடியும்.
அதேவேளையில், இந்த சேவையைப் பெறும் பயணிகள் அவர்களின் சொந்த ஹெட்ஃபோனை பயன்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இன்டிகோ இந்த பொழுதுபோக்கு சேவை வாயிலாக இன்டிகோ செயலியில் படம், காமெடி, பாடல்கள் போன்றக் காணும் வசதியை பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது.
அதாவது, அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்ற வசதியை அதன் அதிகாரப்பூர்வ செயலி இன்டிகோவில் அந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்க இருக்கின்றது. எனவே விமான பயணத்தின்போது பிடித்த சீரிஸ், பாடல் அல்லது திரைப்படத்தை இனி வரும் நாட்களில் இன்டிகோவின் விமான சேவையில் கண்டுகளிக்க முடியும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமான போக்குவரத்து நிறுவனங்கள் பயணிகளை கவரும் விதமாகவும், அவர்களுக்கு மிக சிறப்பான பயண சேவையை வழங்கும் விதமாக புதிய புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்தவகையிலேயே இன்டிகோ நிறுவனம் தன்னுடைய விமான சேவையில் பொழுதுபோக்கு சேவையைக் கொண்டு வர இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இதற்கு விமான பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பேக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இன்டிகோவின் சென்னை வழித்தடத்தில் இந்த சேவை பயன்பாட்டிற்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








