கம்போடியாவில் பைக் சாகச பயணம் செல்ல விரும்புபவர்கள் இங்கே தொடர்பு கொள்ளலாம்!
மோட்டார்சைக்கிளில் சாகச பயணம் செல்ல விரும்புவர்களுக்கு சரியான குழுவுடன் சேர்ந்து செல்வதும், திட்டமிடுதலும் பெரும் பிரச்னையாக உள்ளது. இதுபோன்ற வேட்கை கொண்டோர்க்கு ஏதுவாக பெங்களூரை சேர்ந்த இண்டிமோட்டார்டு நிறுவனம் விசேஷ பயணம் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
Tomb Rider என்ற பெயரிலான இந்த விசேஷ சாகசப் பயணம் கம்போடிய நாட்டில் ஏற்பாடு செய்துள்ளது இண்டி மோட்டார்டு நிறுவனம். கம்போடிய நாட்டின் பாரம்பரியமிக்க இடங்கள் மற்றும் சவால்கள் நிறைந்த பகுதிகள் வழியாக செல்லும் வகையில் வகுக்கப்பட்டுள்ளது. 12ம் நூற்றாண்டை சேர்ந்த கம்போடியா நாட்டின் பழமை வாய்ந்த அப்கோர் வாட் கோயில் மற்றும் ஆள் ஆரவமற்ற கடற்கரை பிரதேசங்கள் வழியாக இந்த பயணம் செல்ல இருக்கிறது.

வரும் மார்ச் 16ந் தேதி கம்போடிய தலைநகர் பெனோம் பென் நகரில் துவங்கி 9 நாட்கள் இந்த பயணம் நடைபெற உள்ளது. இந்த சாகச பயணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு மோட்டார்சைக்கிள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இண்டிமோட்டார்டு அமைப்பு வழங்கும். ஒருவருக்கு ரூ.1.30 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா எக்ஸ்ஆர்250எஸ், பாஜா 250எஸ் மற்றும் செர்ரோ எக்ஸ்டி225 போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த சாகசப் பயணக் குழுவை அனுபவமிக்க வழிகாட்டிகள் வழிநடத்துவர். சொகுசு ஓட்டலில் தங்குவதற்கான வசதி, உணவு, எரிபொருள், உதவி மற்றும் மீட்பு வாகனங்கள், மெக்கானிக், விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வது, கொண்டு வந்துவிடுவது என அனைத்தும் மேற்கண்ட கட்டணத்தில் அடக்கம்.
விமானக் கட்டணம், விசா கட்டணம், ரைடிங் கியர், விபத்து காப்பீடு போன்றவை மேற்கண்ட கட்டணத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழு விபரங்களுக்கு ஆனந்த் தர்மராஜை 0-998 082 9440 என்ற மொபைல் எண்ணிலோ அல்லது [email protected] என்ற இ-மெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








