எல்லை பாதுகாப்பு போலீஸ்க்கு கொடுக்கப்பட்ட ஜிம்னி கார்கள்! ஒன்னு இல்ல, ரெண்டில்ல.. 60 கார்களை கொடுத்திருக்காங்க
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் ஸ்டைலிஸான எஸ்யூவி (SUV) ரக கார் மாடல்களில் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny)-யும் இருக்கின்றது. இந்த காரால் இந்தியாவின் எந்த மாதிரியான சாலை அமைப்பையும் சமாளிக்க முடியும். அதாவது, கரடு - முரடான பாதைகளை இது சுலபமாக கையாளும். மலை பாதை என ஏற்ற ஓர் கார் மாடலே ஜிம்னி ஆகும். இந்த கார் மாடலே இந்தோ - திபெத் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஒன்றல்ல.. இரண்டல்ல.. மொத்தமாக 60 மாருதி சுஸுகி ஜிம்னி எஸ்யூவி கார்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. எல்லையில் உயர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் விதமாகவே ஜிம்னி கார்கள் பாதுகாப்பு வீரர்கள் வசம் வழங்கப்பட்டு இருக்கின்றது. மாருதி சுஸுகி ஜிம்னி கார்கள் சிஏபிஎஃப் (Central Armed Police Force)-இல் இணைவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வாகனத்தை எல்லை பாதுகாப்பு பணியில் களமிறக்குவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், மிக முக்கியமான காரணமாக அதன் ஆஃப்-ரோடு சமாளிக்கும் திறன் உள்ளது. ஆமாங்க, இந்த வசதியை ஜிம்னி கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே தற்போது அதிக எண்ணிக்கையில் அதனை இந்தோ - திபெத் எல்லையில் பாதுகாப்பிற்காக இணைக்கப்பட்டு இருக்கின்றது.
இது அந்த காருக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. தலைநகர் டெல்லியில் உள்ள ஐடிபிபி (Indo Tibetan Border Police)-இன் தலைமையகத்தில் வைத்தே இந்த வாகனத்தை பாதுகாப்பு பணியில் இணைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஐடிபிபி-யைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதுதவிர, மாருதி சுஸுகி நிறுவனத்தின் சார்பிலும் சில முக்கிய அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டனர் என்பது கவனிக்கத்தகுந்தது. ஜிம்னி எஸ்யூவி காரை ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக மாற்றும் பொருட்டு 4X4 தொழில்நுட்பத்தை மாருதி சுஸுகி வழங்கி இருக்கின்றது. இது பாதை மிகவும் மோசமானதாக இருந்தாலும் ஜிம்னியை சுலபமாக இயங்கச் செய்கின்றது.
இதற்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாகவே 103 பிஎச்பி மற்றும் 130 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த ஒற்றை எஞ்சின் தேர்வில் மட்டுமே ஜிம்னி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
அதேவேளையில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு ஆஃப்-ரோடு பயண பிரியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஜிம்னி காருக்கு நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், மஹிந்திரா தார் காருக்கு கிடைக்கின்ற அளவிற்கு அதற்கு வரவேற்புக் கிடைக்கவில்லை என்பதை நாம் இங்கு ஒப்புக் கொண்டாக வேண்டும். இந்த காரில் பெட்ரோல் மட்டுமல்ல டீசல் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. ஆனால், ஜிம்னியில் இந்த ஆப்ஷன் வழங்கப்படவில்லை. இது மிகப் பெரிய பின்னடைவாக உள்ளது.


Click it and Unblock the Notifications








