துபாய் போலீசை தொடர்ந்து லம்போர்கினி கார்கள் வாங்கிய இந்தோனேஷிய போலீஸ்!
உலகின் விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கி ரோந்துப் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர் துபாய் போலீசார். அதே பாணியில் தற்போது இந்தோனேஷிய போலீசார் இரண்டு லம்போர்கினி சூப்பர் கார்களை வாங்கியுள்ளனர்.
லம்போர்கினி அவேன்டேடார் மற்றும் லம்போர்கினி கல்லார்டோ ஆகிய இரு கார்களையும் வாங்கிய கையோடு, அதனை ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பொது மக்கள் பார்வைக்காக நிறுத்தி வைத்துள்ளனர்.

போலீஸ் உடுப்பு
லம்போர்கினி அவென்டேடார் கார் வெள்ளை நிறத்தில் கருநீல வண்ணத்திலும், லம்போர்கினி கல்லார்டோ கார் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டதாகவும் வாங்கியுள்ளனர்.

கருவிகள்
ரோந்து பணியில் ஈடுபடுத்தும் வகையில் பிரத்யேக எச்சரிக்கை விளக்குகள், ஒலிப்பான் மற்றும் ஜிபிஎஸ் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவென்டேடார் சிறப்பம்சங்கள்
அவென்டேடார் கார் மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது. 0- 100 கிமீ வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டிவிடும். 90 லிட்டர் வரை பெட்ரோல் நிரப்பிக் கொள்ள முடியும்.

அவென்டேடார் எஞ்சின்
அவென்டேடார் காரில் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 700 பிஎச்பி ஆற்றலையும் 690 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது.

கல்லார்டோ சிறப்பம்சங்கள்
லம்போர்கினியின் அதிகம் விற்பனையான மாடல். இது மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும். 0- 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரும் 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கை கொண்டுள்ளது.

கல்லார்டோ எஞ்சின்
இந்த காரில் 550 எச்பி ஆற்றலையும், 540 என்எம் டார்க்கையும் வழங்கும் 5.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது யூரோ- 5 எமிசன் அம்சங்களை கொண்டது.


Click it and Unblock the Notifications








