கார்களை பார்க் செய்ய சென்னையில் ரூ4500 கோடி போட்டு தொழில் தொடங்கும் தனியார் நிறுவனம்!

இன்டோஸ்பேஸ் என்ற நிறுவனம் தமிழகத்தில் உள்ள தனது லாஜிஸ்டிக்ஸ் பார்க் தொழிலை விரிவுபடுத்துவதற்காக ரூபாய் 4500 கோடியை முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. லாஜிஸ்டிக் பார்க் என்றால் என்ன இதற்கும் ஆட்டோமொபைல் துறைக்கும் என்ன சம்பந்தம்? இது எப்படி செயல்படுகிறது என்ற விரிவான விவரங்களை தான் இங்கே காண போகிறோம்.

தமிழகத்தில் ஏராளமான வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் எல்லாம் தற்போது இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் வாகனங்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் வாகனங்களை இறக்குமதி செய்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகின்றன.

IndoSpace tamilnadu investment

தமிழகத்தில் பெரிய அளவில் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாம் சொந்தமாக லாஜிஸ்டிக் விஷயங்களை பார்த்து வருகிறார்கள். ஆனால் சில சிறிய நிறுவனங்களும் இருக்கின்றன. வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் சிறிய அளவில் தொழில் செய்யும் நிறுவனங்களும் லாஜிஸ்டிக் தனியார் நிறுவனங்களை நாடி வருகிறார்கள். இப்படியான லாஜிஸ்டிக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இப்படியாக தமிழகத்தில் செயல்படும் நிறுவனம் தான் இண்டோஸ்பேஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இந்நிறுவனம் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே லாஜிஸ்டிக் சேவைகளுக்காக கட்டுமானங்களை உருவாக்கி அதன் மூலம் தனியார் உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு லாஜிஸ்டிக் சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொடர்பான அசல் தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த தொழிலை நடத்தி வருகிறது.

IndoSpace tamilnadu investment

இதில் நிறுவனம் தமிழகத்தில் உள்ள தனது லாஜிஸ்டிக்ஸ் தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. சென்னையில் ஏற்கனவே நிறுவனம் லாஜிஸ்டிக் பார்க் நடத்தி வரும் நிலையில், இன்னும் கூடுதலாக தனது இடத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூபாய் 4500 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது .

இந்நிறுவனம் ஏற்கனவே 88 லட்சம் சதுர அடி அளவில் தமிழகத்தில் கட்டுமானங்களை வைத்துள்ள நிலையில் மேலும் கூடுதலாக 20 லட்சம் சதுர அடி இடத்தை பயன்படுத்தி கட்டுமானங்களை செய்து வருகிறது. கூடுதலாக 46 லட்சம் சதுர அடி இடத்திற்கு எதிர்காலத்தில் கட்டுமானம் செய்ய திட்டமிட்டுள்ளது. மொத்தம் 649 ஏக்கரில் இந்நிறுவனம் தனது தொழிலை விரிவு படுத்துவதற்காக திட்டமிட்டுள்ளது.

IndoSpace tamilnadu investment

இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் அல்லது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடத்தை நிறுவனங்களுக்கு வழங்குகிறது. இது மட்டுமல்லாமல் தனித்தனி உதிரி பாகமாக இறக்குமதி செய்யப்படும் கருவிகளை ஒன்றாக இணைத்து ஒரே கருவியாக மாற்றும் வேலையும் இங்கு நடக்கிறது. இதுபோக பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் உள்ளிட்ட பணிகளும் இங்கு நடத்தப்படுகிறது.

தயாரிக்கப்பட்ட வாகனங்கள் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு ஆர்டர்கள் வர வர எந்தெந்த பகுதியிலிருந்து ஆர்டர் வந்துள்ளதோ அந்த பகுதிகளுக்கு வாகனங்களை அனுப்பி வைக்கும் தொழிலையும் இந்நிறுவனம் செய்து வருகிறது. இதுபோக இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் வாகனங்களுக்கு கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் செய்து கொடுக்கவும் ஆர்டர்களை பிராசஸ் செய்யும் பணியையும் இந்நிறுவனம் செய்து வருகிறது.

பொதுவாக இந்த லாஜிஸ்டிக் நிறுவனங்கள் பெரிய அளவில் நடந்தால் மட்டுமே லாபம். அதனால் சிறிய நிறுவனங்கள் இப்படியான லாஜிஸ்டிக் சேவையை தங்களே வைத்திருக்க மாட்டார்கள். வெளியில் உள்ள லாஜிஸ்டிக் நிறுவனங்களிடம் தான் பெறுவார்கள். அப்படியாக லாஜிஸ்டிக் வழங்கும் நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது மிகப்பெரிய வரவேற்பை பெறுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறைக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. அதிக அளவிலான வாகனங்கள் தயாரிக்கப்பட்ட பின்பு அதை பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அந்த வேலையை இந்நிறுவனங்கள் செய்கிறது தமிழகத்தில் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்கிறது என்றால் தமிழகம் ஆட்டோமொபைல் தயாரிப்பில் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2024, 21:45 [IST]
English summary
Indospace tamilnadu investment 4500 crore manufacturing hub
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X