ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது தாய் மாமா கார்த்திக்கை திருமணம் செய்த பின்பு முதன்முதலாக சென்ற கார் ரைட் குறித்த வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் இவர்கள் குடும்பத்துடன் காரில் கோவிலுக்கு பயணம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டிவி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி தற்போது சினிமாக்களில் நடித்து வரும் நடிகர் ரோபோ சங்கர் மக்கள் மத்தியில் பெரிய பிரபலம் அடைந்தார். இந்நிலையில் சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகள் மூலம் அவரது குடும்பமும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கரின் மகளும் நடிகைமான இந்திரஜா தனது தாய் மாமாவான கார்த்திகை திருமணம் செய்துள்ளார்.

இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்த கையோடு தற்போது முதல் முறையாக குடும்பத்துடன் கோவிலுக்கு காரில் பயணித்துள்ளனர். இதை இந்திரஜா தனது செல்போனில் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த பதிவில் இவர்கள் அனைவரும் சமீபத்தில் அறிமுகமான ஹோண்டா நிறுவனத்தின் எலவேட் காரில் பயணம் செய்து வருவது நமக்கு தெளிவாக தெரிகிறது. இந்த காரை அவர்கள் திருமணத்திற்காக வாங்கி தன் சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ராஜா மற்றும் கார்த்திக் ஆகியோர் பயணித்த இந்த கார் தற்போது பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வீடியோவில் இந்திரஜா-கார்த்திக் தம்பதியினர் பயணிக்கும் காட்சிகளில் இருப்பது ஹோண்டா நிறுவனத்தின் எலவேட் காராகும். இந்த கார் கடந்த சில செப்டம்பர் மாதம் தான் இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் தற்போது ஹோண்டா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. கார்களை விரும்பும் பலர் இந்த காரை விரும்பி தேர்வு செய்கிறார்கள்.
தற்போது ஹோண்டா நிறுவனம் மொத்தம் எட்டு விதமான வேரியண்ட்களில் இந்த காரை விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 11.57 லட்சம் முதல் ரூ 16.42 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. மார்க்கெட்டில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும் நிலையில் இந்த காரும் மார்க்கெட்டில் தனக்கென ஒரு பங்கை பிடிப்பதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இருக்கிறது.

இந்த காரின் சிறப்பம்சங்களை பொருத்தவரை இதன் டாப் வேரியன்டில் லெவல் 2 அடாஸ் சிஸ்டம் இருக்கிறது. மேலும் பாதுகாப்பு அம்சங்களுக்காக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உட்புறம் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இது வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, மார்டனான கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் கொண்டதாக இருக்கிறது .மேலும் இந்த காரில் மேனுவல் மற்றும் சிவிடி கியர் ஆப்ஷன்கள் உள்ளன.
இந்த காரில் இல்லாத விஷயம் என்றால் இன்ஜின் ஆப்ஷனில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. ஹைபிரிட் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இல்லை. மேலும் சில பிரிமியம் அம்சங்களான 360 டிகிரி கேமரா, பேனரோமிக் சன் ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே, வெண்டிலேட்டட் சீட்டுகள் ஆகிய அம்சங்கள் எல்லாம் இல்லை.

இந்திரஜா-கார்த்திக் தம்பதியினர் சென்ற இந்த கார் ஹோண்டா எலவேட் காரின் டாப் வேரியன்ட்களில் ஒன்றான இசட் எக்ஸ் வேரியண்ட் காராக இருக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை சென்னையில் இந்த காரை பதிவு செய்து வாங்கினால் ரூபாய் 18.64 லட்சம் ஆன்ரோடு விலையாக வருகிறது. இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை 15.31 முதல் 16.92 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.
இந்த காரின் பதிவு எண்ணை வைத்து ஆன்லைனில் சோதனை செய்தபோது இந்த காரை கடந்த 21 ஆம் தேதி தான் பதிவு செய்துள்ளனர். புதிதாக கல்யாணத்திற்காக இந்த காரை வாங்கி பதிவு செய்ததாக தெரிகிறது. இந்த கார் கார்த்திக்கின் பெயரில் பதிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. கல்யாணத்திற்காக ரோபோ சங்கர் இந்த காரை அவருக்கு சீதனமாக பரிசளித்திருக்க வாய்ப்பிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனத்தின் எலவேட் கார் இன்று மக்கள் பலரை ஈர்த்துள்ளது. பிரபலங்கள் கூட இந்த காரை வாங்க நினைக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் லுக் தான். இந்த கார் வெளியில் இருந்து பார்க்கும்போது நல்ல பிரிமியமான லுக்கை தருகிறது. இதனால் தான் இந்திரஜா-கார்த்திக் தம்பதியினரும் இந்த காரை வாங்கி இருக்கலாம்.


Click it and Unblock the Notifications









