மழை பெய்தால் பயன்படுத்துங்கள், இல்லாவிடில் லாஃப்டில் மடக்கி வையுங்கள்!!

Written By:

கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் இயல்பு வாழ்க்கை அடியோடு புரட்டி போடப்பட்டிருக்கிறது. சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், படகுகளை வைத்து மீட்டு வரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.மேலும், பல பகுதிகளில் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் சிறைபட்டு கிடக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய ஆடம்பர படகு: உரிமையாளர் பெயர் ரகசியம்

இந்த நிலையில், இதுபோன்று வெள்ளப் பாதிப்புகளின் போது பயன்படுத்துவதற்கும், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதொரு காற்றடைத்த பலூன் படகை ஸ்லோவேனியாவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. விரைவாக மடக்கி விரிப்பதற்கான அம்சங்களுடன் கூடிய இந்த பலூன் படகு மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் கைவசம் வைத்திருப்பது பல வழிகளில் பயன்படும்.

மடக்கி விரிக்கும் வசதி

மடக்கி விரிக்கும் வசதி

Ferry Boat என்று அழைக்கப்படும் இந்த படகை பாய் போன்று சுருட்டி வைத்துக் கொள்ள முடியும். இதனை இயக்குவதும், கட்டுப்படுத்துவதும் மிக எளிதானதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, அதிக பயிற்சி தேவை இருக்காது.

இது 5 மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி

இது 5 மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி

தேவைப்படும்போது சிறிய எலக்ட்ரிக் மோட்டாருடன் இயங்கும் காற்று பம்ப் மூலமாக இந்த பலூன் படகை வெறும் 5 நிமிடங்களில் பயன்பாட்டுக்கு ஏற்றதாக விரிவடைய செய்துவிட முடியும்.

உறுதியானது...

உறுதியானது...

பாய் போன்று சுருட்டி வைக்கக்கூடிய இந்த பலூன் படகு மிகவும் உறுதியானது. மடக்கி வைக்கும்போது வெறும் 295 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இது எந்தளவுக்கு உறுதியானது என்பதை அடுத்த ஸ்லைடில் கண்டு வியக்கலாம்.

 எடை தாங்கும் திறன்

எடை தாங்கும் திறன்

இந்த பலூன் படகு 800செமீ நீளமும், 320 செமீ அகலமும் கொண்டது. எனவே, இந்த படகில் 3 டன் எடை கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் எஸ்யூவியை கூட ஏற்றிச் செல்ல முடியும். அதிகபட்சமாக 5 டன் வரை எடை ஏற்ற முடியுமாம்.

மீட்புப் பணிகளுக்கு ஏற்றது

மீட்புப் பணிகளுக்கு ஏற்றது

சமீபத்தில் சென்னையில் மழை வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த மக்களை மட்டுமின்றி, மாடு மற்றும் அதன் கன்றுகளையும் மீட்புப் படையினர் படகு மூலமாக பத்திரமாக மீட்டனர். அதுபோன்ற, சமயங்களில் இந்த படகு மிகச் சிறப்பான பயன்பாடு உடையதாக இருக்கும். ஏன், உங்களது கார் உள்பட அனைத்து முக்கிய பொருட்களையும் கூட இந்த படகில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முடியும்.

நபர் எண்ணிக்கை

நபர் எண்ணிக்கை

ஒரே நேரத்தில் 50 பேர் வரை செல்ல முடியும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. அதாவது, ஒரு தெருவில் இருக்கும் பெரும்பாலானோரை ஒரே நேரத்தில் மீட்டுவிட முடியும். எனவே, மீட்புப் பணிகளுக்காக அரசாங்கம் சார்பில் வாங்கி வைத்துக் கொள்ள முடியும்.

மீட்பு படகு

மீட்பு படகு

இந்த பலூன் படகில் ஸ்ட்ரெச்சருடன் கூடிய ஒரு சிறிய மீட்புப் படகும் உள்ளது. அதனை வைத்து தண்ணீரில் மூழ்குபவர்களை மிக எளிதாக மீட்டு வந்து இந்த படகில் ஏற்றிவிடலாம்.

தினசரி பயன்பாடு

தினசரி பயன்பாடு

இந்த படகு தினசரி பயன்பாட்டுக்கு மிகவும் ஏற்றதாக குறிப்பிடப்படுகிறது. நீர்நிலைகளை கடந்து தினசரி பணிகளை செய்வோர்க்கு இந்த பலூன் படகு மிகச்சிறப்பானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தனி நபர் பயன்பாடு

தனி நபர் பயன்பாடு

இதுபோன்ற படகுகள் பெரும்பாலும் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்காது. ஆனால், இந்த படகு அனைத்து விதத்திலும் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விலை

விலை

இந்த பலூன் படகிற்கு 6,800 டாலர் விலை முதல் 10,600 டாலர் விலை வரையில் வசதிகளுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

வீடியோ

பலூன் படகின் சிறப்பம்சங்களை விளக்கும் வீடியோ.

பலூன் படகு அறிமுகம் - விபரம்

01. சகல சவுபாக்கிய வசதிகளுடன் உலகின் மிக மிக அழகான ஆடம்பர படகு!

02.பெண்களுக்கான உலகின் முதல் ஆடம்பர படகு!

03.உலகின் டாப் - 20 அதிவேக சூப்பர் படகுகள்!

 
மேலும்... #ஆஃப் பீட்
Story first published: Tuesday, November 24, 2015, 13:11 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark