பாம்பு விஷத்தை போதைக்கு பயன்படுத்தினாரா.. 3 கோடி ரூபால காரை வாங்கிட்டாரு.. பிக்பாஸ் அப்பறம் லைப்பே மாறிருச்சு!
இந்தி பிக்பாஸ்-இல் டைட்டில் வின்னர் பட்டத்தை வென்ற எல்விஷ் யாதவ் புதிதாக மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் உள்ள பிரபலமான யுட்யூபர்களில் எல்விஷ் யாதவ்-ம் ஒருவர் ஆவார். ஏகப்பட்ட சப்ஸ்கிரைபர்கள் இவருக்கு யுட்யூபில் உள்ளனர். ஓர் மிகப் பெரிய ஹீரோவிற்கு இணையான ரசிக பட்டாளமும் இவருக்கு இருக்கின்றது. இத்தகைய நபரே சமீபத்தில் பாம்பின் விஷத்தை போதைக்காக பயன்படுத்தியதாக சர்ச்சையான புகாரில் சிக்கினார். இந்த நபரே தற்போது மீண்டும் தலைப்பு செய்தியில் இடம் பிடித்திருக்கின்றார்.
இந்த முறை எந்த விஷ ஜந்துவின் விஷத்தை போதைக்காக பயன்படுத்தினார் என்று கேக்குறீங்களா?.. அவர் சர்ச்சைக்காக இம்முறை தலையங்கத்தில் இடம் பெறவில்லை, அவர் வாங்கியிருக்கும் புதிய ஆடம்பர காரே அவரை தலையங்கமாக மாற்றி இருக்கின்றது. சுமார் 3 கோடி ரூபாய் ஆடம்பர காரையே அவர் வாங்கி இருக்கின்றார்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 580 இக்யூ (Mercedes-Benz G580 EQ) கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார். இது ஓர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். மேலும், ஜி-வேகன் கார் மாடலின் மின்சார வெர்ஷன்னே இது என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த கார் மாடலின் டெலிவரி பணிகள் சமீபத்திலேயே நாட்டில் தொடங்கின. இது தொடங்கியதும் முதல் ஆளாக தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எம்எல்ஏ-வே இந்த காரை வாங்கினார். இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரோஹித் மைனம்பள்ளி, இவரே அந்த காரை இந்தியாவில் வாங்கிய முதல் ஆள் ஆவார்.
இவரைத் தொடர்ந்தே தற்போது பிக்பாஸ் டைட்டில் வின்னர் எல்விஷ் யாதவ்-ம் இந்த ஆடம்பர எலெக்ட்ரிக் காரை வாங்கி இருக்கின்றார். ஆனால், இவர் எத்தனையாவது ஆளாக இந்த காரை வாங்கியிருக்கின்றார் என்பது தெரியவில்லை. இந்தியாவில் நடைபெற்ற 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' வாயிலாகவே இந்த காரை பென்ஸ் நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது.
இந்த காரின் விலை எப்படி மிக மிக அதிகமாக உள்ளதோ, அதைபோலவே அதில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களும் மிக மிக அதிகம் ஆகும். இரண்டு 12.3 அங்குல அளவுள்ள திரை (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று கிளஸ்டராகவும் செயல்படும்), மின்சாரத்தால் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகள் (இந்த இருக்கை குளிர்ச்சி மற்றும் சூடாகும் வசதிகளைக் கொண்டிருக்கும்), பன்முக ஜோன்கள் கொண்ட கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களைத் தாங்கி இருக்கும்.
அதுதவிர, அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களையும் இந்த காரில் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஆடம்பர அம்சங்களைப் போலவே ரேஞ்ச் தருவதிலும் பென்ஸ் ஜி580 இக்யூ ஓர் சிறந்த காராகக் காட்சியளிக்கின்றது. அதில், ஓர் முழு சார்ஜில் 473 கிமீ ரேஞ்ச் தரக் கூடிய பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 116 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் இந்த சொகுசு எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தி இருக்கின்றனர். இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 587 பிஎஸ் மற்றும் 1,164 என்எம் டார்க்கை வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த எலெக்ட்ரிக் கார் அதிக சொகுசு வசதிகள் நிறைந்தது மட்டுமல்ல அதிக வேகத்திலும் போகக் கூடியதாக உள்ளது. அதன் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கிமீட்டர் ஆகும். இது லிமிட் செய்யப்பட்டு ஸ்பீடு ஆகும். அதேவேளையில், இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5 செகண்டுகளே போதுமானது.


Click it and Unblock the Notifications








