வைரலாகும் பார்க்கிங் வீடியோ... ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தவருக்கு அடித்த ஜாக்பாட்...

வீட்டின் முன்பு இருந்த சிறிய இடத்தில் புதுமையான விதத்தில் காரை பார்க் செய்தவரை மஹிந்திரா நிறுவனத்தின் இயக்குனர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பாராட்டி ட்விட் செய்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வைரலாகும் பார்க்கிங் வீடியோ... ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தவருக்கு அடித்த ஜாக்பாட்...

மஹிந்திரா க்ருப்பின் சேர்மனான ஆனந்த் மஹிந்திரா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவ்வாக இருப்பார் என்பது நம்மில் பல பேருக்கு தெரியும். மேலும் அவற்றில் தன்னை கவரும்படியாக விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக பகிர்ந்தும் கொள்வார்.

வைரலாகும் பார்க்கிங் வீடியோ... ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தவருக்கு அடித்த ஜாக்பாட்...

இந்த வகையில் தற்போது ட்விட்டரில் வைரலாகி வரும் பார்க்கிங் வீடியோ ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். இதில் வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தும் அளவிற்கு இடம் இல்லாதவர் சில தொழிற்நுட்பங்களுடன் புதுமையான விதத்தில் காரை தனது வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளுக்கு அடியில் கச்சிதமாக நிறுத்தியுள்ளார்.

வைரலாகும் பார்க்கிங் வீடியோ... ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தவருக்கு அடித்த ஜாக்பாட்...

பலரது கவனத்தை ஈர்த்து வருகின்ற இந்த வீடியோ, எப்படியோ ஆனந்த் மஹிந்திராவின் பார்வைக்கு வந்துள்ளது. இதனை பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் இவ்வாறான யோசனையை செயல்படுத்தியுள்ள அந்த நபரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

வைரலாகும் பார்க்கிங் வீடியோ... ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தவருக்கு அடித்த ஜாக்பாட்...

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், இதற்கு முன்னரும் பஞ்சாப்பில் இதேபோன்ற கருவிகளுடன் ஒருவர் தனது காரை பார்க் செய்யும் வீடியோவை பார்த்துள்ளேன். ஆனால் இது அதற்கு ஒருபடி மேலே உள்ளது. இந்த நேர்த்தியான வடிவியல் தீர்வு என மிகவும் பிடித்துள்ளது.

வைரலாகும் பார்க்கிங் வீடியோ... ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தவருக்கு அடித்த ஜாக்பாட்...

இதனை வடிவமைத்தவர் எனது தொழிற்சாலை அவுட்லெட்களுக்கும் சில யோசனைகளை வழங்க வேண்டும் என விரும்பி கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். ஒரே ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த வீடியோ சிசிடிவி இடியட்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வைரலாகும் பார்க்கிங் வீடியோ... ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தவருக்கு அடித்த ஜாக்பாட்...

இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள கார் மாருதி ஜென் மாடலாகும். இந்த காரை அந்த நபர் இந்த செயல்பாடுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இயந்திரத்தில் பின்புறமாக ஏற்றுகிறார். சரியாக கார் நின்று கொண்டதை அடுத்து அவர், காரில் இருந்து வெளியே வந்து சுற்றிலும் சரியாக உள்ளதா என்பதை ஒரு வினாடி பார்த்து கொண்டு பிறகு காரை வீட்டை நோக்கி தள்ளுகிறார்.

வைரலாகும் பார்க்கிங் வீடியோ... ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தவருக்கு அடித்த ஜாக்பாட்...

இவ்வாறான புதுமையான பார்க்கிங் முயற்சிகள் அவசியமானதே. ஏனெனில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் தயாரிக்கப்படும் கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. அவற்றை தொழிற்சாலையில் எந்தவொரு சேதமும் இல்லாமல் நிறுத்துவது என்பது சவாலான பணியாக உள்ளது.

வைரலாகும் பார்க்கிங் வீடியோ... ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தவருக்கு அடித்த ஜாக்பாட்...

அதனை காட்டிலும் நகர்புறங்களில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வீட்டின் முன்பு நிறுத்துவது அதை விட சிரமானதாக உள்ளது. பெரிய பெரிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் அடியில் பார்க்கிங் வசதி கொண்டுவரப்படுவதால் பிரச்சனை இல்லை. ஆனால் வீட்டின் முன்பு பெரிய அளவில் இடம் இல்லாதவர்களுக்கு காரை வாங்குவதை விட அதை வீட்டிற்கு நிறுத்தி வைப்பது மிக பெரிய பிரச்சனையாக உள்ளது.

வைரலாகும் பார்க்கிங் வீடியோ... ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை ஈர்த்தவருக்கு அடித்த ஜாக்பாட்...

இவரை போன்று பணம் மற்றும் நேரத்தை செலவழித்து அனைவராலும் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி கொள்ள முடியாததால், இவ்வாறான வசதிகளை குறைந்த செலவில் ஏற்படுத்தி கொடுக்க சில நிறுவனங்கள் புதியதாக தோன்றினால் நன்றாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 12, 2020, 18:30 [IST]
English summary
Anand Mahindra impressed by innovative car parking
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+