மேட்-இன்-இந்தியாவின் முதல் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் கல்வாரி... அறிந்ததும் அறியாததும்..!!

நாட்டிற்கு அர்பணிக்கப்பட்ட கல்வாரி நீர்மூழ்கி கப்பல் பற்றி நாட்டு மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய சிறப்பம்சங்கள்

By Azhagar

இந்தியாவில் முழுவதும் உருவாக்கப்பட்டு, ஃபிரான்ஸ் நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பலை நாட்டிற்கு அர்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

ஃபிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்தை பின்பற்றி மும்பை நகரில் 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்தியா கட்டமைத்து வருகிறது.

Recommended Video

Driverless Auto Rickshaw On Indian Highway
ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

அதில் இரண்டு கப்பல்களின் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில், ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டிற்காக அர்பணித்தார்.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

மின்சாரம் மற்றும் டீசலால் இயங்கும் ஸ்கார்பியன் வகை ஐஎன்எஸ் நீர்மூழ்கி கப்பலை குறித்த சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

6 ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க இந்திய கடற்படை 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் உள்ளது.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

அதன் அடிப்படையில், ஸ்கார்பியன் கிளாஸ் நீர்மூழ்கி கப்பலில் ஒன்று இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்கான கட்டமைப்பு பணி 2006 டிசம்பரில் தொடங்கியது.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

அணு அயூத ஏவுகணை இல்லாத இந்தியாவில் முதல் நீர்மூழ்கி கப்பலாக கல்வாரி கட்டப்பட்டுள்ளது.

இந்த கப்பல் மின்சாரம் மற்றும் டீசலில் இயங்குவதால் நீருக்கு அடியில் இதன் இருப்பை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

துல்லியமாக இலக்கை தாக்கும் வகையிலான நவீன ரக ஆயுதங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் வகையில் இன்று பயன்பாட்டிற்கு வந்துள்ள ஐஎன்எஸ் கல்வாரியின் நீளம் 67.5 மீட்டர் மற்றும் உயரம் 12.3 மீட்டர்.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

கப்பலில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த காம்பாட் சிஸ்டம் மூலம் (SUBTICS or Submarine Tactical Integrated Combat System) கல்வாரியின் ஆயுத அமைப்பு செயல்படும்.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

கடலில் மேற்பரப்பில் இலக்குகளை கண்டறிவதற்கு அகச்சிவப்பு / குறைந்த ஒளி நிலை கேமராக்கள் மற்றும் லேசர் ரேஞ்ச் போன்ற தொழில்நுட்பங்கள் ஐஎன்எஸ் கல்வாரியில் பயன்படுத்தப்படுகின்றன.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

ஸ்கார்பியன் சிரீஸில் இரண்டாவதாக தயாராகி வரும் ஐஎன்எஸ் காந்தாரி தற்போது சோதனையை எதிர்கொண்டு வருகிறது. விரைவில் இதுவும் கப்பற்படையில் சேர்க்கப்படுகிறது.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

ஐஎன்எஸ் கல்வாரி கப்பல் கட்டமைக்கப்பட்டு வந்தபோது, இதனுடைய ரகசிய தகவல்கள் ஆஸ்திரேலியா நாட்டின் ஊடகம் ஒன்றில் வெளியானது.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

ஃபிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்தை பின்பற்றி இது உருவாக்கப்பட்டதால், ரகசிய தகவல்கள் வெளியானது பற்றிய முழு விசாரணை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

கல்வாரி என்றால் மலையாளத்தில் புலி என்று அர்த்தம். வலிமை, செயல்திறன் மற்றும் தேவைகளை பொறுத்து இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு கல்வாரி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

டிசம்பர் 1967ம் ஆண்டில் இந்தியாவில் முதல் நீர்மூழ்கி கப்பல் பயன்பாட்டிற்கு வந்தது. அப்போது அதற்கும் கல்வாரி என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐஎன்எஸ் கல்வாரி- இந்திய கடற்படையின் புதிய வலிமை..!!

ஐஎன்எஸ் கல்வாரி கப்பலை இந்தியாவிற்கு அர்பணித்த போது பேசிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள உறவின் அடையாளமாக இந்த நீர்மூழ்கி கப்பல் இருக்கும் என்றார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Made-In-India INS Kalvari Scorpene Class Submarine Joins Navy. Click for Details...
Story first published: Thursday, December 14, 2017, 11:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X