விஷயம் டாப் சீக்ரெட்! ரகசியமாக இந்தியக் கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை! உச்சக்கட்ட பயத்தில் எதிரிகள்!

இந்தியக் கப்பல் படை இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை ஐஎன்எஸ் முர்முகோ கப்பலின் மூலம் நடுக் கடலிலிருந்து ஏவி வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை எதிரிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

இந்திய ராணுவம் தொடர்ந்து தனது வலிமையை எல்லா விதமான படைகளிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தரைப்படை, கப்பல் படை, விமானப் படை என மூப்படைகளிலம் தன் பலத்தை தொடர்ந்து உலக நாடுகளில் முன்னோடியாக முன்னேறி வருகிறது. இப்படியாகச் சமீபத்தில் கடலில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் புதிதாக ஒரு ஏவுகணை சோதனையை இந்தியக் கப்பல் படை செய்துள்ளது.

INS Mormugao Missile Test

இந்தியக் கப்பல் படையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி சேர்ந்த கப்பல் ஐஎன்எஸ் முர்முகோ, இந்த மாஸகன் யார்டு ஷிப் பில்டர் நிறுவனத்தின் சார்பில் கட்டமைக்கப்பட்ட கப்பல் கோவாவின் முக்கிய துறைமுகமான மும்முகோவின் பெயர் இந்த கப்பலுக்குச் சூட்டப்பட்டது. இந்த கப்பல் ஒரு ஏவுகணை தாங்கிய கப்பலாக உருவாக்கப்பட்டது. இந்த கப்பலில் எப்பொழுதும் தயாராக இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகளைத் தாங்கி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது.

நடுக் கடலில் இந்த ஏவுகணையுடன் இந்த கப்பல் ரோந்து பணியில் இருக்கும். அப்பொழுது எதிரிகளிடமிருந்து ஏதாவது ஏவுகணை தாக்குதல் இந்தியாவை நோக்கி இருந்தால் அந்த ஏவுகணையைக் குறி வைத்து இந்த ஏவுகணை விண்ணில் ஏவி அழிக்க முடிவும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் இது நடுக்கடலில் உள்ள கப்பலில் நிறுத்தப்படுகிறது. இந்தியாவிற்கு ஆபத்து வரும் முன்பே அறிந்து நடுக் கடலிலேயே அந்த ஆபத்தை இந்த ஏவுகணை தடுத்து நிறுத்திவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

INS Mormugao Missile Test

இந்த ஏவுகணைக்கான சோதனை ஐஎன்எஸ் முர்முகோ கப்பலில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பிரம்மோஸ் சூப்பர் சோதனை ஏவுகணையைப் பொருத்தவரை இந்திய ராணுவ ஆய்வு அமைப்பு, மற்றும் தயாரிப்பு அமைப்பான டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் இணைத்து உருவாக்கியுள்ளது.

இந்த பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை 2 ஸ்டேஜ்களை கொண்டது. முதல் ஸ்டேஜ் சாலிட் புரோபலன்ட்களை கொண்டு இயங்கும் திறன் கொண்டது. இது இந்த ஏவுகணையை சூப்பர் சோனிக் வேகத்திற்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. அடுத்த ஸ்டேஜ் லிக்யூட் ரேம்ஜெட் இன்ஜின் மூலம் இயங்கும். இது இந்த ஏவுகணையை சுமார் 3704 கி.மீ வேகத்திற்கு எடுத்துச் செல்லும். இவ்வளவு வேகத்தில் ஒரு பொருள் மற்றொரு பொருளைத் தாக்கினால் அதில் ஒரு சிறுபாகம் கூட மிச்சமாகாது.

INS Mormugao Missile Test

இந்த பிரம்மோஸ் ஏவுகணை உலகின் உள்ள மிகக் குறைந்த ஃபயர் & ஃபர்கெட் தொழினுட்பத்தில் உருவாக்கப்பட்டது. அதாவது. இந்த ஏவுகணை லாஞ்ச் செய்யப்படும் போது டார்க்கெட்டை சரியாக செட் செய்துவிட்டால் போதும். இது லாஞ்ச் ஆன பிறகு டார்கெட் நகர்கிறது அல்லது அதன் போசிஷனை மாற்றுகிறது என்றாலும் அதை இதற்குத் தனியா ஃபீட் செய்யத் தேவையில்லை. இதுவே டாக்கெட்டை ஆக்டிவிட்டிகளை உணர்ந்து துல்லியமாக்கத் தாக்கும் திறன் கொண்டது.

டார்கெட் சரியாக மார்க் செய்யப்பட்டு இந்த ஏவுகணை லாஞ்ச் செய்யப்பட்டால் அழிவு உறுதி தான். இந்த பிரம்மோஸ் ஏவுகணை மற்ற ஏவுகணைகளை விட 3 மடங்கு அதிக வேகம் கொண்டது அதே நேரம் 2.5 -3 மடங்கு அதிக தூரம் பறக்கும் திறன் கொண்டது. 9 மடங்கு அதிகமான திறன் கொண்டது.

இந்த ஏவுகணையின் சிறப்பம்சம் இது எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவ முடியும். தரை, கடல், கப்பல் விமானம் என் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் ஏவ முடியும். பெரும்பாலும் ரேடா்களில் சிக்காமல் பயணிக்கும் திறன் கொண்டது. லாஞ்ச் செய்யப்பட்டதிலிருந்து குறைவான நேரத்திலேயே டார்கெட்டை அட்டாக் செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது.

இந்த ஏவுகணை மொத்தம் 200-300 கிலோ எடை கொண்டதாக வடிவமைக்கப்படும். இது 290 கி.மீ வேகம் வரை சூப்பர் சோனிக் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. அதன் பிறகு மிக விரைவாக இலக்கை நோக்கிச் சென்று தாக்கும்.இந்த ஏவுகணையைத் தடுக்க உலகில் இதுவரை வேறு ஏவுகணைகளை இல்லை எனச் சொல்லி விடலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா கப்பல் படை மிக வேகமான வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. தற்போது கடல் பகுதியில் இப்படியான ஏவுகணை ஆயுதமாக இருப்பது இந்தியா மீது நாடுகள் தாக்குதல் நடத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதன் மூலம் பலமான நாடுகளில் இந்தியா அடுத்த ஒரு படி மேலே சென்றுள்ளது என்பதை நிச்சயம் சொல்ல முடியும்.

Article Published On: Tuesday, May 16, 2023, 9:25 [IST]
English summary
Ins mormugao missile test brahmos supersonic missile firing hit the target
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X