Vikrant: இந்தியக் கப்பல் படையில் இணைந்த விக்ராந்த் கப்பல் பத்தி இதெல்லாம் நீங்கக் கண்டிப்பா தெரிஞ்சுக்கனும்
பிரதமர் மோடி இன்று கொச்சியில் விக்ராந்த் கப்பலை துவக்கி வைத்தார். இந்த விக்ராந்த் கப்பல் விமானம் தாங்கிய இந்தியாவின் 2வது போர் கப்பலாக செயல்படவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

இந்தியாவில் உலகின் முன்னேறி வரும் முக்கியமான ஒரு நாடு. இந்தியாவின் பாதுகாப்பிற்காக ராணுவத்தினர் தினமும் கஷ்டப்பட்டு பணியாற்றுகின்றனர். இந்திய ராணுவம் மொத்தம் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தரைப்படை, கப்பல் படை, விமானப்படை எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் கப்பல் படையைப் பொருத்தவரை இந்தியா சிறப்பான செயல்பட்டு வருகிறது, அரபிக் பெருங்கடல், வங்கள வரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதியில் இந்திய ராணுவ கப்பல்கள் ஆதிக்கம் செலுத்தி இந்தியாவிற்கு வரும் ஆபத்தைத் தடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்தியா தனக்கான விமானம் தாங்கிய போர் கப்பலை எந்த நாடுகளின் துணையும் இல்லாமல் இந்தியாவிலேயே தயாரித்து இன்று நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில் பிரதமர் மோடி இந்த கப்பலின் செயல்பாட்டைத் துவக்கி வைத்தார்.

உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் சீனா ஆகிய நாடுகள் தான் தானாக வேறு நாடுகளின் துணையில்லாமல் போர் கப்பல்களை உருவாக்கியிருந்தது. தற்போது அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.இந்தியா உருவாக்கிய இந்த கப்பலுக்கு விக்ராந்த் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முதன் முதலாகப் பயன்படுத்திய விமானம் தாங்கிய போர்க் கப்பலின் பெயர் விக்ராந்த் தான். இந்த கப்பல் எதிரிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தது. இந்த கப்பல் தற்போது தனது பணியை முடித்துவிட்டது.

தற்போது பழைய விக்ராந்த் கப்பலை முழுவதுமாக பிரித்துவிட்டனர். இந்நிலையில் தான் புதிதாகத் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிய போர்க் கப்பலுக்கு விக்ராந்த் என மீண்டும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது விமானம் தாங்கிய போர்க் கப்பலாகும். ஏற்கனவே ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற கப்பல் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

புதிய விக்ராந்த் கப்பல் மொத்தம் 262 மீட்டர் நீளம், 62 மீட்டர் அகலம் கொண்டது. இது கிட்டத்தட்ட 2 கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும். இந்த கப்பல் மொத்தம் 18 தளங்களைக் கொண்டது இது. இதில் 1600 பேர் பயணிக்க முடியும். 30 விமானங்களைத் தாங்கி செல்லும் திறன் கொண்டது.இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 1600 பேர் பயணித்தாலும் அவர்கள் அனைவருக்கும் கப்பலிலேயே உணவு தயாரிக்கும் இயந்திரங்களும் உள்ளன. இந்த கப்பலில் உள்ள சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் ஒரு மணிநேரத்திற்கு 3000 சப்பாத்திகளைத் தயாரிக்க முடியும்.

இது மட்டுமல்ல இந்த கப்பலுக்குள்ளேயே 16 பெட்கள் கொண்ட ஒரு சிறிய மருத்துவமனையே இருக்கிறது. ஆபத்துக் காலத்தில் போர் கப்பலாக இது செயல்படும் போது யாருக்காவது காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு இந்த மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும். இதில் உள்ள 1600 பேர் தங்குவதற்காக 2400 கம்பார்ட்மெண்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சில கம்பார்ட்மெண்ட்கள் நபர்கள் தங்குவதற்காக அல்லாமல் கப்பலின் மற்ற பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கப்பலில் மொத்தம் 250 டேங்கர் அளவிலான எரிபொருள் சேமித்து வைக்க முடியும். இந்த கப்பலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நங்கூரம் ஒலிம்பிக்கில் இருக்கும் நீச்சல் குளத்தைப் போல 2 மடங்கு பெரிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் மொத்த எடை 42800 டன் கொண்டது.இந்த கப்பலில் தற்போது எம்ஐஜி ரக ஜெட் பைட்டர் விமானங்களை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் மொத்தம் 28 நாட்ஸ் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதற்காக 4 கேஸ் டர்பைன்கள் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் 24 மெகாவாட் பவரில் இயங்கும்.

இந்த கப்பலில் RAN-401 3D ஏர் சர்வைலேன்ஸ ரேசார், MF-STAR, டேக்டிக்கல் ஏர் நேவிகேஷன் சிஸ்டம், ரேஸிஸ்டர்-இ ஏவியேஷன் காம்பிளக்ஸ், சக்தி இடபிள்யூ சூட், டிரைவர் டிடெக்ஷன் சிஸ்டம், ELK-7036 UHF COMINT ஆகிய தொழிட்ப தொலைத் தொடர்பு அம்சங்கள் இந்த கப்பலில் இருக்கின்றனர்.

இது போக இந்த கப்பலின் பாதுகாப்பிற்காக கவச் காஃப் டிக்காய் சிஸ்டம், ட்ரோப்பிடோ டிகாய் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இருக்கின்றன. இது கப்பலைக் கடலில் விபத்தில் சிக்க வைக்காமல் தடுக்கும். இதனால் இந்த கப்பல் நடுக்கடலில் சேதமாகி மூழ்கும்அபாய் இருக்காது.

மேலும் இந்த கப்பலில் ஆயுதங்களாக Barak-8 SAM, AK-630 Close in Weapon System, Stabilised Remote Controlled Guns ஆகிய ஆயுதங்கள் இருக்கிறது. இந்த ஆயுதங்கள் எல்லாம் கப்பலில் உள்ள விமானங்களின் ஆயுதங்கள் இல்லாமல் கப்பலில் உள்ள ஆயுதங்கள் மட்டும் தான் விமானங்கள் சேர்க்கப்படும் போது தான் இந்த அதில் உள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்கள் தெரியவரும். இந்த ஆயுதங்கள் எல்லாம் பொதுவாகப் பெயர் தான்.

இந்த ஆயுதங்களின் செயல் திறன் என்ன? இது கப்பலின் எந்த இடத்தில் இருக்கிறது. எத்தனை எண்ணிக்கையில் இருக்கிறது என்ற தகவல்கள் எல்லாம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இது போக சில ஆயுதங்களும் இருக்கிறது. இதன் பெயர்கள் கூட வெளியிடப்படவில்லை.இந்த கப்பலின் கட்டுமானம் முதன் முதலாக 2005 ஆண்டு துவங்கப்பட்டது. அப்பொழுதே இந்த கப்பலுக்குத் தேவையான இரும்புகள் எல்லாம் வெட்டத் துவங்கப்பட்டன. அடுத்தாக கப்பல்களின் முதுகெலும்பு என அழைக்கப்படும். கீல் என்ற பகுதி கடந்த 2009ம் ஆண்டு பிப் 25ம் தேதி உருவாக்கப்பட்டது. கீலை உருவாக்குவது தான் கப்பலின் உண்மையான கட்டுமானத்தின் முதல் வேலை

2012ம்ஆண்டு இந்த கப்பலின் அடிப்படை கட்டுமான பணிகள் முடிந்தது. 2013ம் ஆண்டு இந்த கப்பல் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கப்பலாக உருவாக்க துவங்கியது. அதன் பின்னர் கப்பலின் உள் கட்டுமான வேலைகள், பெயிண்ட் அடிப்பது உள்ளிட்ட பல வேலைகள் நடந்தது.

2020 ம் ஆண்டு இந்த கப்பலுக்கான இன்ஜின் உள்ளிட்ட விஷயங்கள் பொருத்தப்பட்டு கப்பல் கடலில் இறக்கத் தயார் ஆனது. 2020 நவம்பர்30ம் தேதி கப்பல் கடலில் இறங்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 2021 முதல் ஜூலை 2022 வரை பல்வேறு கட்டமான சோதனை நடத்தப்பட்டது. இன்று அதிகாரப்பூர்வமாக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் இருப்பதால் எதிரி நாடுகள் இந்தியாவின் கடல் எல்லையில் வாலாட்ட முடியாது. இந்த கப்பல் மீது இருக்கும் பயத்தால் எதிரி நாடுகள் இந்தியாவிற்குக் கடல் வழியாகத் தொல்லை தரவே யோசிப்பார்கள் முக்கியமான சீனா இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த நினைப்பதைத் தடுக்க முடியும். இந்த கப்பல் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








