ஆடி காருடன் 300 கிமீ வேகத்தில் போட்டி போட்ட கவாஸாகி சூப்பர் பைக்!
சாதாரணமாக சிலர் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த ஹைவேயில் 180 கிமீ வேகத்தில் போனேன். இந்த ரோட்டில் 200 கிமீ வேகத்தை தாண்டினேன் என்று கூறுவது வாடிக்கையான விஷயம்தான்.
ஆனால், அதே வேகத்தில் தொடர்ந்து ஓட்ட முடியுமா என்பது சந்தேகமே. இப்போது நீங்கள் பார்க்கப் போகும் வீடியோவில் ஒரு அதிவிரைவு சாலையில் ஆடி ஆர்எஸ்6 காரை கவாஸாகி நின்ஜா ஒன்று அதிவேகத்தில் சேஸ் செய்து செல்லும் காட்சியைதான் பார்க்கப் போகிறீர்கள்.
ரேஸ் டிராக் போன்று விசேஷ பாதுகாப்பு வசதிகள் இல்லாத அந்த நெடுஞ்சாலையில் 300 கிமீ வேகத்தையும் தாண்டி சீறிச் செல்லும் நின்ஜா இசட்எக்ஸ் 10 சூப்பர் பைக் ஆடி காரை முந்தியதா என்பதை வீடியோவில் காண்க.


Click it and Unblock the Notifications









