உத்து பாத்ததுக்கு அப்புறம்தான் யார்னு தெரியுது! 5 கோடி ரூபாய் காரை இந்தியாலயே மொத ஆளா வாங்கனது அவங்களா!
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus). இது சூப்பர் எஸ்யூவி (Super SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த காரின் பெர்ஃபார்மனேட் வயோலா பசிஃபி (Performante Viola Pasifae) மாடலை பிரபலமான தம்பதி தற்போது வாங்கியுள்ளது.
இதில் பெர்ஃபார்மனேட் என்பது லம்போர்கினி உருஸ் காரின் சக்தி வாய்ந்த வெர்ஷன் ஆகும். அதே நேரத்தில் வயோலா பசிஃபி என்பது கலர் ஆகும். வயலெட் கலரைதான் லம்போர்கினி நிறுவனம் இந்த பெயரில் அழைக்கிறது. லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மனேட் வயோலா பசிஃபி காரை வாங்கியிருப்பது யார் தெரியுமா?

கீர்த்தி சிங் ரஹேஜா (Kirti Singh Raheja) மற்றும் ரோஹித் ரஹேஜா (Rohit Raheja) ஆகியோர்தான், லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மனேட் வயோலா பசிஃபி காரை வாங்கியுள்ளனர். கணவன்-மனைவியான இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மிகவும் பிரபலமாக உள்ளவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மனேட் வயோலா பசிஃபி காரை அவர்கள் இருவரும் டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video), சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. இந்தியாவில் லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மனேட் வயோலா பசிஃபி காரை முதல் ஆளாக வாங்கியிருப்பது இவர்கள்தான்.

இந்தியாவில் இதற்கு முன்பு வேறு யாரும் இந்த காரை வாங்கியது கிடையாது. இந்த காரில், 4.0 லிட்டர், ட்வின் டர்போ, வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 666 பிஎஸ் பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, இதன் மூலம் காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது.
லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மனேட் வயோலா பசிஃபி காரின் எடை, 2,000 கிலோவிற்கும் மேல் இருக்கும். இவ்வளவு அதிக எடை கொண்ட ஒரு காரின் செயல்திறன் இவ்வளவு சிறப்பாக இருப்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மனேட் வயோலா பசிஃபி காரின் விலை 4.22 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லம்போர்கினி உருஸ் பெர்ஃபார்மனேட் வயோலா பசிஃபி போன்ற ஒரு விலை உயர்ந்த காரை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு கடினமான உழைப்பு தேவைப்படும். இப்படி ஒரு பெரிய விஷயத்தை சாத்தியப்படுத்தியுள்ள கீர்த்தி சிங் ரஹேஜா மற்றும் ரோஹித் ரஹேஜா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications








