யூடியூப் மூலம் பணம் கொட்டுது போல... எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியிருக்கும் இந்த தம்பதி யாரென்று தெரிகிறதா?

யூடியூப் (Youtube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram)-ஐ திறந்தாலே திருமணமான தம்பதிகளின் ரீல்ஸ் வீடியோவை குறைந்தது ஒன்றை ஆவது பார்க்க முடிகிறது. சில நேரங்களில் எல்லாம், அவர்களது ரொமான்ஸ் அல்லது காமெடி வீடியோக்கள் தான் தொடர்ச்சியாக வந்துக் கொண்டே இருக்கும். இதனாலேயே ரீல்ஸ் பக்கம் போகவே முடியவில்லை என்பது சிங்கிள் பசங்களின் மன குமுறலாக உள்ளது. அவ்வாறு, பேச்சிலர்களின் குமுறல்களுக்கு ஆளான இன்ஸ்டா தம்பதி தான், நிகில்- லீனா (Nikhil- Lena) ஆவர். இவர்கள் புதியதாக பிராண்ட்-நியூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஒன்றை வாங்கியுள்ளனர்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மெல்ல மெல்ல மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை காண முடியும். ஏனெனில், மற்ற எலக்ட்ரிக் வாகனங்களை காட்டிலும், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலைகள் அதிகமாக இருப்பதாலும், அவற்றை வீட்டிலேயே சார்ஜ் செய்துக் கொள்வது எளியதாக இருப்பதாலும் நிறைய பேர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

instagram couple buys ather rizta

அவ்வாறு, மக்களை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பக்கம் இழுத்ததில் ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் ஈடுப்பட்டுவரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரிஸ்டா (Rizta) ஆகும்.

ஃபேமலி-ஸ்கூட்டர் என்கிற அடைமொழி உடன் அறிமுகம் செய்யப்பட்ட ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் இன்ஸ்டா தம்பதியும் இந்த ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தான் வாங்கியுள்ளனர். நிகில்-லீனா தம்பதியை பற்றி உங்களில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏனெனில், இவர்கள் கேரளாவில் தான் மிக பிரபலமானவர்களாக உள்ளனர்.

டிக்டாக் இருந்த சமயத்தில் இருந்தே நீண்ட வருடங்களாக ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டுவரும் இந்த தம்பதியினரின் வீடியோக்கள் பலமுறை கேரள அளவில் யூடியூப்பில் டிரெண்ட்டிங்கில் முதல் இடத்திற்கு வந்துள்ளன. அதாவது அந்த அளவிற்கு இவர்களது வீடியோக்கள் சில மணிநேரங்களிலேயே பல இலட்சம் பார்வையாளர்களை தாண்டி விடுகிறது. பல நேரங்களில் இவர்கள் பதிவிடுவது, காமெடி கலந்த ஸ்க்ரிப்ட் வீடியோக்கள் தான்.

சில சமயங்களில் தங்களது வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளையும் வீடியோவாக காட்சிப்படுத்தி பதிவிடுவதை நிகில்-லீனா தம்பதியினர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மலையாளத்தில் எந்த அளவிற்கு இவர்கள் பிரபலம் என்றால், நிகில்-லீனாவின் நண்பர்கள், ரசிகர்கள் என கூறி பலர் தங்களது ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட, அந்த வீடியோக்களும் இலட்சக்கணக்கில் பார்வையாளர்களை பெறுகின்றன.

ather rizta

ஏத்தர் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், 2.9kWh மற்றும் 3.7kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இது விற்பனை செய்யப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.35 லட்சத்தில் இருந்து ரூ.1.63 லட்சம் வரையில் உள்ளன. மொத்தம் 7 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏத்தர் ரிஸ்டா உண்மையில் அருமையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். தமிழ்நாட்டின் ஓசூரில்தான் இவை தயாரிக்கப் படுகின்றன. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வைத்து நிகில்-லீனா தம்பதியினர் இன்னும் சில வாரங்களுக்கு ரீல்ஸ் வீடியோக்களாக எடுத்து தள்ளுவர் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Monday, January 27, 2025, 11:21 [IST]
English summary
Instagram couple nikhil lena buys ather rizta electric scooter
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+