இன்ஸ்டா பேஜ் ஆரம்பித்த போது இது நடக்கும்னு எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! மஹிந்திராவில் எல்லாரும் வாங்கும் கார்

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-இன் முன்பதிவுகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கியது. அதனை தொடர்ந்து, கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டன. இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்களின் டெலிவிரிகள் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளன.

இதனாலேயே இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெற்று வருபவர்கள் பணக்காரர்களாகவும், சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களாகவும் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது, பிரபல மலையாள யூடியூப் (Youtuber) தம்பதியான நிகில்- லேனா (Nikhil Lena) பிராண்ட்-நியூ மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றுள்ளனர்.

nikhil-lena couple buys mahindra car

நிகில் மற்றும் லேனா என்கிற கேரள தம்பதியினர் ஒன்றாக இணைந்து நடத்தும் நிகில் லேனா இன்ஸ்டாகிராம் பக்கம் மலையாள மக்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. அந்த அளவிற்கு, நகைச்சுவையான பதிவுகளையும், வீடியோக்களையும் தொடர்ச்சியாக பதிவிட்டு இணையவாசிகள் இடையே நிகில்- லேனா தம்பதியினர் பிரபலமானவர்களாக விளங்குகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் இந்த தம்பதியை சுமார் 1.53 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். தங்களது வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் கலந்து பதிவிடும் வழக்கம் கொண்டுள்ள இந்த தம்பதியினர் தாங்கள் புதியதாக எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை வாங்கியதையும் வீடியோவாக காட்சிப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

nikhil-lena couple buys mahindra car

புதியதாக எக்ஸ்இவி 9இ காரை வாங்குவதற்கு முன்னர் நிகில்- லேனா தம்பதியினர் தங்களிடம் இருந்த பழைய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் (Ford Ecosport) காரை விற்றுள்ளனர். அதன்பிறகே மஹிந்திரா ஷோரூமுக்கு மகள் உடன் சென்று புத்தம் புதிய எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பிரபலமான நிகில்- லேனா தம்பதியினர் முற்றிலும் கருப்பு நிறத்தில் தங்களது எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளனர். இந்த கருப்பு நிறத்தை 'ஸ்டீல்த் பிளாக்' (Stealth Black) என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், நெபுலா நீலம், டீப் ஃபாரஸ்ட், ரப்பி வெல்வெட், டெசர்ட் மிஸ்ட், டாங்கோ சிவப்பு மற்றும் எவரெஸ்ட் வெள்ளை உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் இந்த எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

nikhil-lena couple buys mahindra car

பேக்-1, பேக்-2, பேக்-3 செலக்ட் மற்றும் பேக்-3 என்கிற 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை ரூ.21.90 லட்சத்தில் இருந்து ரூ.30.50 லட்சம் வரையில் மஹிந்திரா நிறுவனம் நிர்ணயித்துள்ளது. 59kWh மற்றும் 79kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்களில் இந்த எலக்ட்ரிக் கார் கிடைக்கிறது.

இதில், 59kWh திறன் கொண்ட பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 542கிமீ தொலைவிற்கும், 79kWh பேட்டரியில் சுமார் 656கிமீ வரையிலான ரேஞ்சையும் இந்த எலக்ட்ரிக் காரில் பெறலாம். மஹிந்திராவின் புதிய எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காருக்கு உள்ளே டேஸ்போர்டில் பெரிய அளவில் பிரத்யேகமான இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை பெரும்பாலானோர் ஸ்டீல்த் பிளாக் என்கிற அடர் கருப்பு நிறத்தில் வாங்குவது இல்லை. இந்த வகையில் பார்த்தால், நிகில்- லேனா தம்பதியினர் தனித்துவமான நிறத்தில் இந்த எலக்ட்ரிக் காரை தேர்வு செய்து தற்போது டெலிவிரியும் பெற்றுவிட்டனர். முழுவதும் கருப்பு நிறத்தில் எந்தவொரு காரும் பார்க்க ஸ்பெஷலானதாக இருக்கும் என்பது எங்களது கருத்து.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 2, 2025, 22:36 [IST]
English summary
Instagram couple nikhil lena takes delivery of mahindra xev 9e electric car
மேலும்... #celebrity cars #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X