வாத்து போல நடந்து வீடியோ போடுவாரே அவரா இது.. எம்ஜியின் மிகவும் காஸ்ட்லியான காரை வாங்கிய தமிழ் இன்ஸ்டா பிரபலம்

இன்ஸ்டா மற்றும் யுட்யூப் பிரபலங்கள் தொடர்ச்சியாக லக்சூரி கார்களை வாங்குவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அந்தவகையில், தேனு 'வியூவ்ஸ் இன்ஸ்டா' பக்கத்தின் உரிமையாளர் தேனப்பன், தற்போது ஓர் மிக மிக விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி இருக்கின்றார். இந்த கார் வாங்கி இருப்பதை அவரே அவருடைய இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கின்றார். 'ஃபூட் விளாக்' செய்து வரும் இன்ஸ்டா பிரபலங்களில் தேனப்பன்-ம் ஒருவர். இவர் எம்ஜி (MG) நிறுவனத்தின் ஆடம்பர காரையே வாங்கி இருக்கின்றார்.

எம்ஜி நிறுவனத்தின் புகழ் பெற்ற கார் மாடல்களில் ஒன்றான ஹெக்டர் (Hector)-ரையே வாங்கி இருக்கின்றார். இது ஓர் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். மேலும், இந்தியாவில் இந்த கார் மாடல் ஒன்பது விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Thenu views thenappan buys mg hector

இதில் ஹெக்டர் ஷார்ப் ப்ரோ (Hector Sharp Pro) எனும் ஆப்ஷனையே 'டக் வாக்'-இல் வந்து வீடியோ செய்யும் இன்ஸ்டா பிரபலம் தேனப்பன் வாங்கி இருக்கின்றார். ஏற்கனவே கியா சொனெட் கார் மாடலை பயன்படுத்தி வந்த நிலையிலேயே அந்த நபர் தற்போது ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி காரை வாங்கி இருக்கின்றார்.

எம்ஜி நிறுவனம் இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஹெக்டர் ஷார்ப் ப்ரோ-விலும் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. ரூ. 20.80 லட்சம் தொடங்கி ரூ. 23.42 லட்சம் வரையிலான விலையில் இது விற்கப்படுகின்றது.

விலையை போலவே சிறப்பம்சங்களையும் மிக அதிகமாக இந்த கார் மாடல் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அந்தவகையில், பெரிய 14 அங்குல எச்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் ப்ளூடூத் சாவி, பெரிய பனோரமிக் சன்ரூஃப், ஆர்18 டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி லைட்டுகள் மற்றும் லெவல் 2 தன்னாட்சி தொழில்நுட்ப வசதிக் கொண்ட அடாஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த அடாஸ் அம்சமானது டிரைவர்களுக்கான உதவியை வழங்குதல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்தல் என பல முக்கிய பணிகளை செய்யும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் உள்ள சில அம்சங்களை குரலால் கட்டுப்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மூட் லைட்-டை ஆன் செய்தல், ஃபன் வேகத்தை அதிகரிக்கச் செய்தல், ரேடியோவை இயக்குதல், ஒலியின் அளவை உயர்த்துதல், சன்ரூஃப்பைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றைச் செய்துக் கொள்ள முடியும். இதுதவிர, ஜியோ சாவ்ன் மியூசிக் வசதி, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, அவசரகால இ-அழைப்பு, ஐ-கால், லைவ் லோகேஷன் ஷேரிங் மற்றும் டிராக்கிங் வசதி போன்றவற்றயைும் இந்த கார் கொண்டிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதுபோன்று இன்னும் பல அட்வான்ஸ்டு வசதிகளைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் காருக்கு இந்தியாவில் கணிசமான அளவு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் மோட்டார் ஆப்ஷன்களிலேயே இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதுதவிர, இந்த காரை 5, 6 மற்றும் 7 ஆகிய ஆகிய இருக்கைகள் தேர்விலும் வாங்கிக் கொள்ள முடியும். ஹெக்டர் எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ. 14.99 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், இதன் அதிகபட்ச விலை ரூ. 24 லட்சம் வரை உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரீமியம் அம்சங்கள் நிறைந்த மற்றும் விலை உயர்ந்த கார் மாடலாக ஹெக்டர் இருப்பதால் அதிகம் சொகுசு வசதிகளை விரும்பும் செல்வந்தர்களை வெகுவாக அது கவர்ந்து வருகின்றது. இத்தகைய ஆடம்பர காரையே தேனப்பன் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 20, 2024, 17:45 [IST]
English summary
Instagram fame thenu views thenappan buys mg hector
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+