வீட்டிற்கே வந்து காரை டெலிவிரி பண்ணும் அளவிற்கு பெரிய ஆளா இவங்க? இன்ஸ்டாகிராம் மொத்தமா தூக்கி விட்டுடுச்சு!

மினி (MINI), பிரபலமான பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தின் கீழ் செயல்படும் மற்றொரு லக்சரி கார் நிறுவனம். பெயருக்கேற்ப மினி கார்கள் எல்லாமே அளவில் சிறியவை ஆக உள்ளன. அதேநேரம் மினி கார்கள் எல்லாமே ஏறக்குறைய 50 லட்ச ரூபாய் அளவில் விலையுயர்ந்தவை ஆக விளங்குகின்றன. இதனாலேயே மினி கார்களை வாங்குபவர்கள் யாரென்று பார்த்தால், பெரும்பாலும் ஏற்கனவே 2, 3 சொகுசு கார்களை வைத்திருக்கும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர். அதிலிலும் குறிப்பாக, கேரள மக்கள் தான் அதிகமாக மினி கார்களை வாங்குகின்றனர்.

அந்த வரிசையில், பிரபல மலையாள இன்ஸ்டாகிராம் (Instagram) பிரபலம் அமிதா ஜோபின் (Amitha Jobin) தற்போது புதியதாக மினி கார் ஒன்றை வாங்கி உள்ளார். ஃபேஷனில் ஆர்வமிக்கவராக விளங்கும் அமிதா ஜோபின், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவுகளை பதிவிட்டு சுமார் 2.32 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உடன் பிரபலமானவராக விளங்குகிறார்.

amitha jobin buys mini countryman

தற்போதுவரையில், எந்தவொரு மலையாள டிவி சீரியல் அல்லது திரைப்படத்தில் நடித்திராத போதிலும் அமிதா ஜோபின் சில விருதுகளை பெற்றுள்ளார். ஃபேஷனுக்காகவும், இன்ஸ்டாகிராமில் கான்செப்ட் உடன் பதிவுகளை பதிவிட்டதற்காகவும் சில விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மினி பிராண்டில் புத்தம் புதிய கார் ஒன்றை அமிதா ஜோபின் வாங்கியுள்ளார்.

மினி பிராண்டில் இவர் வாங்கியிருப்பது, மினி கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் (Countryman Electric) கார் ஆகும். இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.54.90 லட்சமாக உள்ளது. மினி கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் கார் அமிதா ஜோபினின் வீட்டிற்கே வந்து டெலிவிரி செய்யப்பட்டுள்ளது.

amitha jobin buys mini countryman

இந்த எலக்ட்ரிக் காரை அடர் பச்சை நிறத்தில் அமிதா ஜோபினின் குடும்பத்தினர் வாங்கி உள்ளனர். இந்த அடர் பச்சை நிறத்தை 'பிரிட்டிஷ் ரேசிங் பச்சை' (British Racing Green) என மினி நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், மிட்நைட் பிளாக், பிளாஸிங் நீலம், ஸ்லேட் நீலம், இண்டிகோ சன்செட் நீலம், ஸ்மோக்கி க்ரீன், மெல்டிங் சில்வர், சில்லி ரெட் மற்றும் நானுக் வெள்ளை உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால், அமிதா ஜோபின் இரட்டை-நிறத்தில் இந்த எலக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார். இதனால்தான், காரின் மேற்கூரை மட்டும் கருப்பு நிறத்தில் இருப்பதை காணலாம். 5 கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் காரான மினி கண்ட்ரிமேன் எலக்ட்ரிக்கின் முன்பக்கத்தில் பாதியளவு மூடப்பட்ட கிரில் மற்றும் எண்கோண வடிவத்தில் எல்இடி ஹெட்லைட்களை காணலாம்.

amitha jobin buys mini countryman

அலாய் சக்கரங்களை அதிகப்பட்சமாக 20 இன்ச் வரையிலானவை ஆக பெறலாம். இந்த எலக்ட்ரிக் காரின் பின்பக்கத்தில் மாடர்ன் பிக்ஸெல் தோற்றத்தில் செவ்வக வடிவில் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. காருக்கு உள்ளே டேஸ்போர்டில் 9.4 இன்ச்சில் டச் ஸ்க்ரீன், 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரத்திற்கு பின்னால் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

மினி கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் காரில் 66.45kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 462கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்த பேட்டரி பொருத்தப்படுகின்ற எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் மற்றும் 250 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் காருக்கு கிடைக்கும்.

amitha jobin buys mini countryman

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுமார் ரூ.55 லட்சத்தில் விலை கொண்டிருப்பினும் மினி கண்ட்ரிமேன் எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாகவே 5 பேர் மட்டுமே பயணிக்க முடியும். மேலும், மேலே குறிப்பிடப்பட்டு இருப்பது காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 31, 2025, 20:06 [IST]
English summary
Instagram famous amitha jobin buys mini countryman electric
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X