வாழ்நாள் இலட்சியம் நிறைவேறுன மாதிரியான ஃபீல்... மஹிந்திரா வாகனத்துடன் நிற்கும் இவர் யாரென்று தெரிகிறதா?
இன்ஸ்டாகிராம் (Instagram)-இல் பிரபலமாக இருப்பவர்கள் வாங்கும் புதிய வாகனங்களை பற்றி தொடர்ச்சியாக நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இன்ஸ்டாகிராமில் 2.44 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உடன் பிரபலமாக விளங்கும் பெண்மணி குடும்பத்துடன் ஷோரூமுக்கு சென்று புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தை வாங்கியுள்ளார். யார் அந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் என்பதையும், அவர் வாங்கியுள்ள தார் ராக்ஸ் வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
வாழ்வில் அன்றாடம் நடக்கும் விஷயங்களை வீடியோவாக பதிவு செய்தே இணையத்தில் பிரபலமாகியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அத்தகையவர்களுள் ஒருவர் தான், ஜீவா லெக்ஷ்மி கே.ஆர் (JeevaLekshmi KR) ஆவார். 'மை வே பை கல்யாணி' (mywaybykalyani) என்கிற பெயரில் இன்ஸ்டாகிராமில் உள்ளார்.

பெரியதாக பாராட்டும் அளவிற்கோ அல்லது ஆச்சிரியப்படும் அளவிற்கோ எதையும் ஜீவா லெக்ஷ்மி பதிவிடுவது இல்லை என்றாலும், வெறும் 672 பதிவுகள் மூலமாக 2.44 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். இவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் வாகனத்தை அவர் வாங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கணவர் மற்றும் மகன் உடன் மஹிந்திராவின் அங்கீகரிக்கப்பட்ட ஷோரூமுக்கு சென்றுள்ள ஜீவா லெக்ஷ்மி, அங்கு வெள்ளை நிறத்திலான தார் ராக்ஸ் வாகனத்தை டெலிவிரி பெற்றுள்ளார். டெலிவிரி பெறுவது தொடர்பான வேலைகள் அனைத்தும் முடிந்த பின், தார் ராக்ஸ் வாகனத்தினுள் டிரைவர் இருக்கையில் ஏறி அமர்ந்த ஜீவா லெக்ஷ்மி, ஷோரூமில் இருந்து வாகனத்தை அவரே ஓட்டி வெளியே கொண்டுவரும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

அந்த சமயத்தில், ஜீவா லெக்ஷ்மியின் கணவரும் மகனும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஷோரூம் வளாகத்திற்குள் நுழைந்ததில் இருந்து தார் ராக்ஸ் வாகனத்தை டெலிவிரி பெற்று செல்லும் வரையில் அனைத்தையும் வீடியோவாக காட்சிப்படுத்தி ஜீவா லெக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது 5 கதவுகளை கொண்ட ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற எஸ்யூவி வாகனம் ஆகும். பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த மஹிந்திரா வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.99 லட்சத்தில் இருந்து ரூ.23.09 லட்சம் வரையில் உள்ளன.

இதில் எந்த வேரியண்ட்டை ஜீவா லெக்ஷ்மியின் குடும்பம் வாங்கியுள்ளது என்பது தெரியவில்லை. தார் ராக்ஸ் வாகனத்தில் பனோராமிக் சன்ரூஃப், மென்மையான மெட்டீரியல்களால் ஆன டேஸ்போர்டு, 10.25-இன்ச்சில் பெரிய அளவில் இன்ஃபோடெயின்மெண்ட் டச் ஸ்க்ரீன் & டிரைவருக்கான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, 6 ஏர்பேக்குகள், லெவல்-2 அடாஸ் (ADAS) உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரளா போன்ற மலைப்பிரதேச பகுதிகளுக்கு மஹிந்திரா தார் ராக்ஸ் ஆனது மிகவும் ஏற்ற வாகனம் ஆகும். ஏனெனில், இந்த வாகனம் 4x4 டிரைவ் சிஸ்டத்துடனும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், உள்ளே விசாலமான இடவசதியையும் கொண்டுள்ள இந்த மஹிந்திரா வாகனம் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜீவா லெக்ஷ்மியின் குடும்பத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









