தாய், தந்தையை மனம் குளிர வெச்சிட்டாரு! இன்ஸ்டாகிராம் நோண்டிட்டு இருந்தவர் இப்போ ரெனால்ட் கார் ஓனர்

இன்ஸ்டாகிராம் (Instagram) மூலமாக நிஜ வாழ்க்கையிலும் பிரபலமானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அத்தகையவர்களின் வாழ்க்கை குறுகிய காலத்திலேயே வேற லெவலுக்கு மாறியுள்ளதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் வீடியோக்களை பதிவிட்டு சினிமா திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ள நபர் ஒருவர் தனது பெற்றோருக்கு ரெனால்ட் (Renault) கார் ஒன்றை வழங்கி சிறப்பித்துள்ளார். யார் அவர் என்பதையும், அவர் வாங்கியுள்ள ரெனால்ட் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

2020இல் கொரோனா வைரஸ் பரவல் சமயத்தில் பலர் தங்களது எதிர்காலத்தை இணையத்தில் நிறுவிக் கொண்டனர். அந்த சமயத்தில் கட்டாயம் வீட்டில் தான் இருந்தாக வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டதால், அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு பலர் தங்களது கற்பனை திறன்களை பதிவுகளாகவும், வீடியோக்களாவும் இணையத்தில் திறந்து விட்டனர்.

instagram famous buys renault kiger

அந்த முயற்சி பலருக்கு தோல்வியில் போய் முடிந்திருந்தாலும், சிலருக்கு வாழ்க்கையையே திருப்பி போடும் அளவிற்கு கொண்டு சென்றது. அவ்வாறு அந்த சமயத்தில் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர்களில் சிலர் இப்போது எங்கே உள்ளனர் என்பதே தெரியவில்லை என்பது வேற கதை. ஆனால், அப்போதில் இருந்து இப்போது வரை இணையத்தில் நிலைத்து நிற்பவர், ஷைனு ஜான் சாக்கோ (Shinu John Chacko) ஆவார்.

இவ்வாறான பெயரில் யாரையும் கேள்விப்பட்டதே இல்லையே என நீங்கள் நினைக்கலாம். ஏனெனில், இவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். 2020 சமயத்தில் கேரளாவில் 'கரிக்' என்கிற பிரபலமான இன்ஸ்டாகிராம் குழுவினருடன் சேர்ந்து பணியாற்றி அதன் மூலம் கேரள மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றவர், ஷைனு ஜான் சாக்கோ ஆவார்.

instagram famous buys renault kiger

கடந்த சில வருடங்களாகவே இன்ஸ்டாகிராமிலும், யூடியூப்பிலும் தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டுவரும் இவருக்கு ஒரு மலையாள திரைப்பட வாய்ப்பு கூட சமீபத்தில் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஷைனு ஜான் சாக்கோ தனது சொந்த செலவில் பெற்றோருக்கு ரெனால்ட் நிறுவனத்தின் பிராண்ட்-நியூ காரை வாங்கிக் கொடுத்துள்ளார்.

தனது வாழ்வில் நடக்கும் அனைத்து சுவாரஸ்யமான சம்பவங்களையும் வீடியோவாக இணையத்தில் பதிவிடும் ஷைனு ஜான் சாக்கோ, தனது வாழ்விலேயே முக்கியமான இந்த நிகழ்வை மட்டும் இணையத்தில் பதிவிட மறப்பாரா என்ன... தாய், தந்தை உடன் ஷோரூமுக்கு சென்று அங்கு பிராண்ட்-நியூ ரெனால்ட் காரை டெலிவிரி பெறுவதில் இருந்து, அதனை அங்கிருந்து ஓட்டி செல்வது வரையில் அனைத்தையும் வீடியோவாக காட்சிப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

instagram famous buys renault kiger

பெற்றோருக்காக ஷைனு ஜான் சாக்கோ வாங்கியிருப்பது, ரெனால்ட் கைகர் (Kiger) கார் ஆகும். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றாக விளங்கும் ரெனால்ட் கைகரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.11.23 லட்சம் வரையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை குறைவான ரெனால்ட் காராக இருப்பினும், இளம் வயதிலேயே அதனை பெற்றோருக்கு பரிசாக வழங்கும் அளவிற்கு பொருளாதார ரீதியாக ஷைனு ஜான் சாக்கோ வளர்ந்திருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. முதலில் இவ்வாறான யோசனை இன்றைய கால இளைஞர்கள் பலருக்கு ஏற்படுவது இல்லை என்பதை கூறியே ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2025, 20:41 [IST]
English summary
Instagram famous shinu john chacko buys renault kiger car with family
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X