ஊர் முன் அம்மாவை பெருமைப்படுத்திய இளைஞர்! யாராக இருந்தாலும் காரை ஒரு நிமிஷம் நின்னு பார்த்துட்டு போவாங்க!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-க்கான டெலிவிரிகள் (Deliveries) துவங்கப்பட்டன. 2024 டிசம்பர் மாத துவக்கத்தில் இந்த எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இவற்றிற்கான புக்கிங்ஸ் (Bookings) துவங்கப்பட்டன. அனைத்து தரப்பு கஸ்டமர்களையும் கவரும் முயற்சியாக, மற்ற கார்களை போன்று இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களும் விலை குறைவான மற்றும் விலைமிக்க வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தற்போது டெலிவிரிகள் துவங்கப்பட்டு இருப்பது மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களின் விலைமிக்க வேரியண்ட்களுக்கு மட்டுமே ஆகும். இதன் காரணமாகவே, இந்த புதிய எலக்ட்ரிக் கார்களை கடந்த சில வாரங்களாக டெலிவிரி பெற்று வருபவர்கள் எல்லாரும் செல்வந்தர்களாகவும், சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்களாகவும் விளங்குகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது, பிரபல மலையாள இன்ஸ்டாகிராம் (Instagram) புகழ் சாச்சு (Chachu) எனப்படும் யெல்லோ கோஸ்ட் (Yellow Ghost) பிராண்ட்-நியூ மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றுள்ளார். சாச்சு என சொன்னால் இவரை பலருக்கு தெரிவதில்லை; அதுவே யெல்லோ கோஸ்ட் என்று சொன்னால் கேரளாவில் நிறைய இளம் தலைமுறையினருக்கு தெரிந்துள்ளது.
ஏனெனில், சாச்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு யெல்லோ கோஸ்ட் என்றே பெயர் சூட்டியுள்ளார். இந்த பெயர் இவருக்கு வந்ததற்கு காரணம், இவரிடம் பளிச்சிடும் மஞ்சள் நிறத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் ஒன்று உள்ளது. இந்தியாவில் ஃபார்ச்சூனர் கார் ஆனது மஞ்சள் நிறத்தில் விற்பனை செய்யப்படுவதில்லை. ஆக... சாச்சு ஃபார்ச்சூனர் காரை வாங்கிய பின்பு அதற்கு இந்த மஞ்சள் நிறத்தை கொடுத்துள்ளார்.

பிரத்யேகமான மஞ்சள் நிறம் கொடுத்தது மட்டுமின்றி, ஃபார்ச்சூனரின் உயரத்தையும் இவர் அதிகரித்துக் கொண்டுள்ளார். இதனாலேயே இன்ஸ்டாகிராம் பிரபலம் சாச்சுவின் ஃபார்ச்சூனர் காரின் உடல் ஆனது சக்கரங்களில் இருந்து நன்கு உயரமாக, ஆஃப்-ரோடு (Off-road) வாகனங்களை போன்று உள்ளது. இந்த ஃபார்ச்சூனரில் கேரளா-காஷ்மீர் என பல்வேறு விதமான பயணங்களை மேற்கொண்டுள்ள சாச்சு அதனை பதிவுகளாக பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராக விளங்குகிறார்.
அதுமட்டுமின்றி, புது, புது வாகனங்கள் உடன் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிடுவதை யெல்லோ கோஸ்ட் வழக்கமாக கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை சுமார் 3.12 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இது இல்லாமல், யூடியூப் (Youtube)-இல் 16 ஆயிரத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளார்.

இந்த அளவிற்கு கேரளா மக்களிடையே சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக விளங்கும் யெல்லோ கோஸ்ட் புதிய பிஇ 6 எலக்ட்ரிக் காரை முற்றிலும் கருப்பு நிறத்தில் வாங்கி உள்ளார். இதற்கேற்ப கருப்பு நிற உடையில், குடும்பத்துடன் மஹிந்திரா ஷோரூமுக்கு சென்று காரை டெலிவிரி பெறும் வீடியோவை யெல்லோ கோஸ்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த கருப்பு நிறத்தை 'ஸ்டீல்த் பிளாக்' (Stealth Black) என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், டீப் ஃபாரஸ்ட், டெசர்ட் மிஸ்ட் சாடின், டெசர்ட் மிஸ்ட், டாங்கோ ரெட், ஃபையர்ஸ்டோர்ம் ஆரஞ்ச் மற்றும் எவரெஸ்ட் வெள்ளை நிற ஆப்ஷன்களிலும் கிடைக்கக்கூடிய மஹிந்திரா பிஇ 6 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.18.90 லட்சத்தில் இருந்து ரூ.26.90 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திராவின் விலைமிக்க எலக்ட்ரிக் காரான எக்ஸ்இவி 9இ -ஐ சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் வரிசையாக அடுத்தடுத்து வாங்கி வருவதை நமது செய்தித்தளத்தில் தொடர்ச்சியாக பார்த்து வந்தோம். ஆனால், பிஇ 6 எலக்ட்ரிக் கார் டெலிவிரி குறித்த செய்தியை அதிகமாக பார்க்கவில்லை. இத்தகைய எலக்ட்ரிக் காரை முற்றிலும் கருப்பு நிறத்தில் வாங்கி இருப்பதில் இருந்து யெல்லோ கோஸ்ட் எனப்படும் சாச்சுவின் பிடித்த நிறம் மஞ்சளில் இருந்து கருப்புக்கு மாறி வருவதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









