சின்ன வயசுல இருந்தே ஆசைப்பட்ட காரை வாங்கிய தேவதை! அவங்களா இது! அதான் எங்கயோ பாத்த மாதிரியே இருக்கேனு தோணுச்சு!
சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற கனவு நிறைய பேருக்கு உள்ளது. ஆனால் ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்களை (Luxury Cars) சொந்தமாக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். எனினும் ரச்சனா மஹாடிம்மனே (Rachana Mahadimane) கொஞ்சம் வித்தியாசமானவர். பெங்களூர் (Bangalore) நகரை சேர்ந்த இந்த பெண், சமூக வலை தளங்களில் பிரபலமாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மட்டும் இவரை சுமார் 1.50 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். எனவே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் இவரை நீங்கள் பார்த்திருக்கலாம்.
சொகுசு கார்களை வாங்க வேண்டும் என பலரும் கனவு கண்டு கொண்டிருக்க, ரச்சனா மஹாடிம்மனேவோ வின்டேஜ் கிளாசிக் கார்களில் ஒன்றான பிரீமியர் பத்மினி (Premier Padmini) கார் மீது காதல் கொண்டிருந்தார். குழந்தை பருவத்தில் இருந்தே பிரீமியர் பத்மினிதான், ரச்சனா மஹாடிம்மனேவின் கனவு கார்.

இந்த கனவு காரை ரச்சனா மஹாடிம்மனே தற்போது ஒரு வழியாக வாங்கியுள்ளார். 2024ம் ஆண்டின் இறுதியில், ரச்சனா மஹாடிம்மனே தனது கனவு காரை சொந்தமாக்கியுள்ளார். இதை அவர் இன்ஸ்டாகிராம் தளத்தில் தெரிவிக்க, நெட்டிசன்கள் பலரும், ரச்சனா மஹாடிம்மனேவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) கார்களை போல், பிரீமியர் பத்மினி கார்களுக்கும் அறிமுகமே தேவையில்லை. கடந்த 1970 மற்றும் 80களில், பிரீமியர் பத்மினி கார்கள் மிகவும் பிரபலமாக இருந்து வந்தன. ஆனால் அதற்கு பின்னர் மாருதி சுஸுகி (Maruti Suzuki) உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் பிரபலமாக தொடங்கியதால், சாலைகளில் இருந்து பிரீமியர் பத்மினி கார்கள் மறைய தொடங்கின.

அப்படி கால ஓட்டத்தில் மறைந்த ஒரு விண்டேஜ் காருக்கு, ரச்சனா மஹாடிம்மனே மீண்டும் உயிர் கொடுத்துள்ளார். உண்மையில் அவர் காரை வாங்கும்போது, அது நல்ல கண்டிஷனில் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மிகவும் மோசமான கண்டிஷனில் இருந்தது. இருப்பினும் ஒர்க் ஷாப்பில் விட்டு, பிரீமியர் பத்மினி காரை ரச்சனா மஹாடிம்மனே புதுப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''குழந்தை பருவத்தில் இருந்தே இதுதான் எனது கனவு கார். எனது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த காரை வாங்கியுள்ளேன்'' என்றார். ஒரு காலத்தில் ரஜினிகாந்த் (Rajnikanth), மம்முட்டி (Mammootty) மற்றும் ஆமீர் கான் (Aamir Khan) போன்ற பிரபலங்கள் எல்லாம், பிரீமியர் பத்மினி காரை பயன்படுத்தியுள்ளனர்.
அப்படிப்பட்ட ஒரு சிறப்பு மிக்க காரை ரச்சனா மஹாடிம்மனே தற்போது தனதாக்கியுள்ளார். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இதற்காக நெட்டிசன்கள் பலரும் ரச்சனா மஹாடிம்மனேவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ''சொகுசு கார்களை தேடி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், இது சிறப்பான ஒரு விஷயம்'' என நெட்டிசன் ஒருவர் வாழ்த்தியுள்ளார்.
மற்றொரு நெட்டிசனோ, ''பிரீமியர் பத்மினி காரில்தான் நான் டிரைவிங் பழகினேன். என டிரைவிங் டெஸ்ட்டும் கூட, பிரீமியர் பத்மினி காரில்தான் நடந்தது. தற்போது பிரீமியர் பத்மினி காரை வாங்கியுள்ள உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்'' என கமெண்ட் செய்துள்ளார். இந்த நேரத்தில் நாமும் நம்முடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து கொள்வோம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களும், ஸ்போர்ட்ஸ் கார்களும் உலாவி கொண்டுள்ள பெங்களூர் பெருநகர சாலைகளில், ரச்சனா மஹாடிம்மனேவின் பிரீமியர் பத்மினி கார், நிச்சயமாக அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








