பிள்ளைங்க கூட இதையெல்லாம் செய்யல ராசா! மாற்றுதிறனாளிக்கு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்த இன்ஸ்டா பிரபலம் இவரா?
பெற்ற பிள்ளைகளே காப்பாற்ற தவறிய மாற்றுத்திறனாளி பெற்றோருக்கு இன்ஸ்டா பிரபலம் ஒருவர் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக செகண்ட் ஹேண்டில் ஒரு ஸ்கூட்டரையும் அவர்கள் டீ விற்பதற்காக டீ கேண், வீட்டிற்கு தேவையான பிரிட்ஜ் உள்ளிட்ட அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இன்றைய சூழ்நிலைகளில் பெற்ற பிள்ளைகளே பெற்றோர்களை காப்பாற்றாத பல்வேறு குடும்பங்களை நம்மால் காண முடிகிறது. பிள்ளைகள் வளர்ந்து பெற்றோர்கள் உடல்நிலை சரியில்லாமல் போகும் காலத்தில், பெற்றோர்களை தனியாக தவிக்க விட்டு விட்டு பிள்ளைகள் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிள்ளைகால் கைவிடப்பட்ட பெற்றோர் ஒருவர் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இதில் கணவருக்கு நீரிழிவு நோய் காரணமாக கால் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அவர் பிளாஸ்டிக் கால் மூலம் தான் நடந்து வருகிறார். இவரது மனைவியும் உடல் நலம் சரியில்லாமல் இருந்து வருகிறார். இவர்களது பிள்ளைகள் இவர்களுக்கு ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் இவர்கள் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வருகிறார்கள். தங்கள் இருக்கும் வீட்டிற்கே வாடகை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
இதை கேள்விப்பட்ட சமூக வலைதள பிரபலமான முயற்சி பயணம் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வருபவர் இவர்களுக்காக உதவி செய்ய நினைத்தார். இதையடுத்து இந்த பெற்றோரை நேரில் சந்தித்து அவர்கள் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார். இவர்கள் வருமானமே இல்லாமல் திணறி வருவதால் இவர்களுக்கான வருமானத்தை பெறுவதற்கான வழிகளை ஏற்பாடு செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து இவர் இவர்கள் வீட்டிற்கு வாடகை கொடுக்காமல் ஐந்து மாதம் பாக்கி வைத்திருந்த வாடகை தொகையான ரூபாய் 15,000 பணம் வழங்கினார். அது மட்டுமல்லாமல் இவர்கள் தொடர்ந்து இனி வருமானம் பெறுவதற்கான வழிகை செய்யும் வகையில் இவர்கள் வீட்டிற்கு ஒரு பிரிட்ஜ் ஒன்றை வாங்கி கொடுத்தார். மேலும் இவர்கள் உழைத்து சம்பாதிப்பதற்காக வழியையும் ஏற்படுத்தினார்.
அதன்படி இந்த மாற்றுத்திறனாளி கணவர் பைக்கில் சென்று டீ விற்பனை செய்வதற்காக மாற்றுத்திறனாளிகள் செல்லும் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார். மேலும் டீ கேனையும் வாங்கி அவர்களுக்கு வழங்கினார். இதை அவர்கள் சாலையில் நிறுத்தி ஒரு துணியை வைத்து மூடி மாற்றுத் திறனாளி கணவனுக்கும் அவரது மனைவிக்கும் சர்ப்ரைசாக இந்த பரிசை வழங்கினார்.

இந்த சம்பவம் முழுவதையும் அவர் வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பலரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இவரது இந்த செயலுக்காக பலர் இவரை பாராட்டி வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவர்களுக்கு வெறும் பணம் மட்டும் கொடுக்காமல் அவர்களது வாழ்வாதாரத்தை பெற உதவி செய்தது பாராட்டுக்குரியது என பலர் பாராட்டி வருகிறார்கள்.
பொதுவாக டூவீலர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வாகனமாக இல்லை. ஆனால் இவர் செகண்ட் ஹேண்டில் வாங்கிய டூவீலர் மாற்றுத்திறனாளிகள் ஓட்டும் வகையில் பின்பக்கம் இரண்டு வீல்கள் பொருத்தப்பட்ட டூவீலராக உள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் இந்த வாகனத்தை சுலபமாக ஓட்டிச் செல்ல முடியும். இப்படியான ஸ்கூட்டரை இவர் செகண்ட் ஹேண்டில் வாங்கி பரிசளித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்த அரசு அனுமதியும் இருக்கிறது. அதற்காக உரிய அனுமதி பெற்று மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனத்தை மாற்றுத்திறனாளிகளும் சாலையில் சட்டபூர்வமாகவே ஓட்டிச் செல்ல முடியும். அவர்கள் எந்த அளவுக்கு மாற்றுத்திறனாளிகள் என்பதை பொறுத்து இந்த அனுமதி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உதவி செய்ய வேண்டும் என்ற நினைப்பு வந்து விட்டால் அவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் உதவி செய்ய முடியும் என்பதை இந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் நிரூபித்துள்ளார். மாற்றுத்திறனாளிக்கு புதிய பைக் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் குறைந்த விலையில் செகண்ட் ஹேண்டில் உள்ள வாகனத்தை வாங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளது நிச்சயம் பாராட்டத்தக்கது தான்.


Click it and Unblock the Notifications









