ரீல்ஸ் மோகம், என்னென்ன பண்ண வைக்குது பாருங்க!! குஜராத் போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா?
இணையத்தில் லைக்குகளையும் கமெண்ட்ஸையும் பெறுவதற்காக இன்றைய கால இளைஞர்கள் என்ன என்னமோ செய்கின்றனர். ஏனெனில், அந்த அளவிற்கு இணையத்தில் போட்டி அதிகமாகிவிட்டது. இதில் சிலர் வரம்பு மீறும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடக்கின்றன. அதாவது, இணையத்தில் கவனத்தை பெறுவதற்காக செய்த செயலில் பெரிய தொகையை செலழித்துள்ளவர்களும் இருக்கின்றனர். இந்த வரிசையில், இங்கு சிலர் தங்களது மஹிந்திரா தார் வாகனங்களை கடலில் இறக்கி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். அந்த சமயத்தில் அவர்களது தார் வாகனங்கள் கடல் மணலில் சிக்கியுள்ளன. பிறகு என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி பார்க்கலாம்.
மஹிந்திரா தார் வாகனம் ஆனது ஓர் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் ஆகும். இதற்கேற்ப 4X4 டிரைவ் சிஸ்டத்தை இந்த வாகனம் கொண்டுள்ளது. அதாவது, இந்த வாகனத்தை எந்தவொரு கரடு முரடான சாலைகளுக்கும் கொண்டு செல்லலாம். இருப்பினும், சிலர் மஹிந்திரா தார் வாகனங்களில் சகதிகளில் சிக்கிக் கொண்டதை பார்த்திருக்கும்.

ஏனெனில், வாகனத்தின் திறன் சிறப்பானதாக இருந்தாலும், அதற்கேற்ப டிரைவரிங் டிரைவிங் திறனும் சிறப்பாக இருக்க வேண்டும் அல்லவா. ஆனால், இங்கு சிலர் ஒருபடி மேலே சென்று, கடலில் மஹிந்திரா தார் வாகனத்தை சிக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது குஜராத் மாநிலத்தில், அரபி கடலில் ஆகும்.
இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இரு மஹிந்திரா தார் வாகனங்கள் கடலில் சிக்கியிருப்பதையும், கடலின் நீர் ஆனது வாகனங்களின் சக்கரங்களை மூழ்கடிக்கும் அளவிற்கு உள்ளதையும் காணலாம். இன்ஸ்டாகிராமில் கெத்து காட்டுவதற்காக இந்த நபர்கள் தங்களது மஹிந்திரா தார் வாகனத்தை கடலில் இறக்கியுள்ளனர்.

ஆனால், இறுதியில் அது தவறாக முடிந்துள்ளது. கடலில் சிக்கிய 2 மஹிந்திரா தார் வாகனங்களுள் சிவப்பு நிறத்தில் இருப்பது 4X4 டிரைவ் சிஸ்டத்தை கொண்டதாகும், மற்றொன்று 4x2 டிரைவ் சிஸ்டத்தை கொண்டது. 4X2 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட தார் வாகனம் சிக்கிக் கொண்டதில் பெரியதாக ஆச்சிரியம் இல்லை. ஆனால், 4X4 டிரைவ் சிஸ்டத்தை கொண்ட வாகனம் சிக்கிக் கொண்டதுதான் சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
இதில் இருந்து, இந்த நபர்கள் வாகனத்தை கடலுக்குள் அதிக தூரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. அலைகளின் உயரம் அவ்வப்போது அதிகரித்து கொண்டும், குறைந்து கொண்டும் இருக்கும் என்பதை இந்த நபர்கள் அறியாமல் இருந்திருக்கலாம். அல்லது தங்களது வாகனத்தின் திறன் மீது இவர்கள் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கலாம்.

ஆனால், கடைசியில் மஹிந்திரா தார் வாகனங்கள் கடலில் சிக்கியதுதான் மிச்சம். குறிப்பாக, சிவப்பு நிற தார் வாகனத்தின் முன்பகுதியை கடல் அலைகள் முழுவதுமாக மூழ்கடித்தப்படி செல்வதை வீடியோவில் காணலாம். இதனால், அந்த வாகனத்தின் என்ஜின் சிஸ்டத்திற்குள் நிச்சயமாக கடல் நீர் புகுந்திருக்கும். எந்தவொரு வாகனத்தின் என்ஜின் சிஸ்டத்திற்குள்ளும் உப்பு நீர் புகுந்தால், பெரிய செலவை இழுத்து விட்டுவிடும்.
அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தில் சிவப்பு நிற தார் வாகனம் நேரம் ஆக, ஆக கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. இதனால், இந்த வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மிகவும் பயந்துப்போனதை வீடியோவில் காண முடிகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த வாகனங்களை உள்ளூர்வாசிகளின் உதவியுடன் மீட்டுள்ளனர். முந்த்ரா போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட மஹிந்திரா தார் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடல் நாம் நினைப்பதை காட்டிலும் ஆபத்தானது ஆகும். கடல் நீரில் கொஞ்ச தூரத்தில் நீங்கள் உங்களது வாகனத்தை நிறுத்தினாலும், அது சற்று நேரத்தில் கடலுக்குள் சில அடி தூரத்திற்கு சென்றிருக்கும். ஏனெனில், மஹிந்திரா தார் போன்ற வாகனங்கள் மிகவும் எடைமிக்கவை ஆகும். சாதாரணமாக கடற்கரை மணலில் வாகனம் சிக்கினாலே மீட்பது கடினம். அப்படியிருக்கையில், கடலுக்கு அடியில் சிக்கிக் கொண்டால் மீட்பது இன்னும் சிரமம் ஆகும்.


Click it and Unblock the Notifications









