தனியார் பஸ் என்கிற பேரில் ஓடுறது எல்லாம் இந்த மாதிரி ஆனவையா? சாலையில் ஓட்ட அனுமதிக்கு என்ன செய்றாங்க தெரியுமா?
உலகின் மற்ற நாடுகளை போன்று, இந்தியாவின் போக்குவரத்து தரமும் நாளுக்கு அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களை மாடர்ன் தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் சொகுசு வசதிகள் மிக்கதாக உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதேநேரம், வணிக இலாபத்தை கருத்தில் கொண்டு, பெரிய தொகையை வாகனங்களில் செலவிட முடியாது. இதன் வெளிப்பாடாக கேரள தனியார் பேருந்து நிறுவனங்கள் சொந்த மாநிலத்தில் பேருந்துகளை வாங்கமால், பணத்தை மிச்சப்படுத்துவதற்காக ராஜஸ்தானில் இருந்து பேருந்துகளை வாங்குக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
வெளிநாடுகள் அளவிற்கு நம் இந்தியாவில் பேருந்துகளின் தரம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுத்தான் ஆக வேண்டும். இருப்பினும், தென்னிந்தியாவில் உருவாக்கப்படும் பேருந்துகள் ஓரளவிற்கு நல்ல தரத்துடன் உள்ளன. இதன் காரணமாகவே, நம்ம ஊர் பகுதிகளில் பேருந்துகளை உருவாக்குவது செலவு மிகுந்ததாக உள்ளது.

இதன் விளைவாக, கேரள மாநில தனியார் பேருந்து உரிமையாளர்கள் ராஜஸ்தானில் இருந்து தங்களது சேவைக்கான பேருந்துகளை கொண்டு வருகின்றனர். அதுவும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படுவது புதிய பேருந்துகள் கிடையாது; பழைய பேருந்துகள் ஆகும். கேரளாவிலும் பழைய பேருந்துகள் கிடைக்கின்றன என்றாலும், ராஜஸ்தானில் கிடைக்கும் அளவிற்கு விலை குறைவானவை கிடையாது.
ராஜஸ்தானில் இருந்து கேரளாவிற்கு கொண்டுவரப்படும் பழைய பேருந்துகளின் ஆயுட்காலம் அதிகப்பட்சமாக 8 வருடங்கள் வரையில் உள்ளது. அதாவது, இந்த பழைய பேருந்துகள் 8 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை ஆகும். இதனால், 2017ஆம் ஆண்டில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பேருந்து பாடி கோடு திட்டத்தில் இந்த பழைய பேருந்துகள் உட்படவில்லை.
ஆனால், தற்போது உற்பத்தி செய்யப்படும் மாடர்ன் பேருந்துகள் இந்த திட்டத்திற்கு உட்படுகின்றன. இதனால்தான், ராஜஸ்தானில் இருந்து குறிப்பாக 8 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட பழைய பேருந்துகளை தேர்வு செய்து கேரள தனியார் பேருந்து உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். இவ்வாறு வாங்கப்படும் பழைய பேருந்துகளை கேரள தனியார் பேருந்து ஓனர்கள் அப்படியே தங்களது சேவைகளில் பயன்படுத்த போவதில்லை.
பேருந்தின் பழைய பாடி முழுவதுமாக அகற்றப்பட உள்ளது. அதாவது, பேருந்தின் அடிப்பகுதியை மட்டும் விட்டு, மேற்பகுதி முழுவதையும் அகற்றி, அதற்கு பதிலாக புதிய உடற்கூட்டை பொருத்த உள்ளனர். இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட தொகை செலவாகும் என்றாலும், புதியதாக ஒரு பேருந்தை வாங்குவதை காட்டிலும், பழைய பேருந்தை இவ்வாறு மாற்றிக் கொள்வது தனியார் பேருந்து ஓனர்களுக்கு செலவு குறைந்ததாக உள்ளது.
இன்னும் சொல்லப் போனால், பழைய பேருந்துகளை இவ்வாறு மாற்றினால் மட்டுமே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவற்றை பேருந்து சேவையில் பயன்படுத்த அனுமதி வழங்குவர். இவ்வாறு மாற்றப்படும் பேருந்துகளை குறைந்தப்பட்சம் 7 வருடங்களுக்கு சேவையில் பயன்படுத்த முடியும் என தனியார் பேருந்து ஓனர்கள் தெரிவிக்கின்றனர்.
கேரளாவில், பேருந்துக்கான புதிய சேசிஸை மட்டும் தனியாக வாங்க போனால் ரூ.30 லட்சத்திற்கும் மேல் விலை சொல்கின்றனர். பாடி பில்டிங்கிற்கு ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.14 லட்சம் வரையில் ஆகும். இன்ஸ்சூரன்ஸ் உள்பட மற்ற இதர செலவுகளுக்கு ஏறக்குறைய ரூ.2 லட்சம் தேவைப்படும். ஆக மொத்தத்தில், ரூ.44 லட்சத்தில் இருந்து ரூ.47 லட்சம் வரையில் செலவு செய்தால் மட்டுமே விருப்பத்திற்கு ஏற்றப்படி ஒரு பேருந்தை உருவாக்க முடிவதாக கேரள தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்வதற்கு பதிலாக, பழைய பேருந்தை விருப்பத்திற்கேற்ப மாடிஃபிகேஷன் செய்யவே பெரும்பாலான தனியார் பேருந்து ஓனர்கள் விரும்புகின்றனர். ஏனெனில், அதுதான் எளிதான வழியாகவும், செலவு குறைந்த வழியாகவும் இருக்கிறது. ஆனால், தரமான சேசிஸை கொண்ட பழைய பேருந்துகளை கண்டுப்பிடிப்பதுதான் சற்று சிரமமான வேலை ஆகும்.


Click it and Unblock the Notifications








