சின்ன தப்புதான் பண்ணாங்க.. இன்சூரன்ஸே கிடையாதுனு கையை விரிச்சுட்டாங்க! இஎம்ஐ வேற கட்டியே ஆகணுமாம்!
வாங்கி ஒரு சில வாரங்களே ஆன புதிய கார் ஒன்று தீ விபத்தில் சிக்கி தற்போது வெறும் கூடாக மாறி இருக்கின்றது. இது புதிய காராக இருந்தும் அதற்கு இன்சூரன்ஸை கிளைம் பண்ண முடியவில்லை என கூறப்படுகின்றது. இதனால் அக்காரின் உரிமையாளர் மிகப் பெரிய சிக்கலில் சிக்கி இருக்கின்றார்.
இன்சூரன்ஸ் கிளைமிங் ரத்திற்கு பின்னால் ஒரே ஒரு சிறிய தவறே காரணமாக இருக்கின்றது. அதுவே, இன்சூரன்ஸை கிளைம் செய்வதில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த சிறிய தவறு என்ன? என்பது பற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க, விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியர்கள் மத்தியில் வாகன மாடிஃபிகேஷன் கலாச்சாரம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது. அனைவருக்கும் தங்களுடைய வாகனங்களை அதிக கவர்ச்சியானதாக காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் வளர்ந்திருப்பதே இதற்கான காரணம் ஆகும். இந்தியர்களின் இந்த மன நிலையை அறிந்து வாகன உற்பத்தியாளர்கள் பெரும்பாலானோர் நாம் விரும்பக் கூடிய சில சூப்பரான வசதிகளையும், கருவிகளையும் அவர்களே விற்பனைக்கும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அது ஓர் பிரீமியம் தயாரிப்பாக இருப்பதன் காரணத்தினால் சற்று விலை அதிகமாக இருக்கும். இதனால்தான் அதனை அனைவராலும் வாங்கி பலனடைய முடிவதில்லை. எனவேதான் ஒரு சிலர் ஆரம்ப நிலை கார் மாடலை வாங்கிக் கொண்டு அதனை மாடிஃபிகேஷன் வாயிலாக உயர்நிலை தேர்வாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்காக வெளிப்புற சந்தையில் ஏகப்பட்ட அலங்காரப் பொருட்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதேபோல், சில முக்கிய கருவிகளும் மிக மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் பாதுகாப்பானது என்று கூறிவிட முடியாது. ஆமாங்க, நம்பகமற்ற பொருட்களே பெரும்பாலும் ஆஃப்டர் மார்க்கெட் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இதனால்தான் சில நேரங்களில் ஆஃப்டர் மார்க்கெட் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைமிங்கில் சிக்கல் ஏற்படுகின்றது. இதற்கு சான்றாகவே ஓர் சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. ஆஃப்டர் மார்க்கெட் சாதனம் பொருத்தப்பட்ட கார் ஒன்று தீ விபத்தில் சிக்கி வெறும் கூடாக மாறி இருக்கின்றது.

இந்த காருக்கு ஏற்பட்ட இழப்பை கோரிய மனுவை இன்சூரன்ஸ் நிர்வாகம் நிராகரித்திருக்கின்றது. அந்த காரில் ஆஃப்டர் மார்க்கெட் பொருள் ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் காரணம் காட்டியே இன்சூரன்ஸ் கிளைமிங் கோரிக்கையை நிராகரித்திருக்கின்றனர். இதனால் அக்காரின் உரிமையாளர் தற்போது மிகப் பெரிய சிக்கலில் சிக்கி இருக்கின்றார்.
தீ விபத்தில் சிக்கி இருப்பது மஹிந்திரா தார் என தெரிகின்றது. இந்த கார் சந்தையில் ரூ. 11.25 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இந்த காருக்கு இப்போதைய நிலவரப்படி ஹை-டிமாண்ட் இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கின்றது.
இத்தகைய ஓர் தரமான காரை தீ விபத்தில் சிக்கி முழுமையாக எரிந்து வெறும் கூடாக மாறி இருக்கின்றது. இதற்கு பின்னால் உள்ள துள்ளியமான காரணம் தெரியவில்லை. அதேவேளையில், இது வெறும் ஒரு மாத பழைய கார் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இன்சூரன்ஸைகூட பெற முடியாமல் போயிருக்கின்றது.
இதுமாதிரியான நிகழ்வு ஏற்படும் என்கிற காரணத்தினாலேயே வெளிப்புற சந்தையில் இருந்து எந்தவொரு அணிகலனையும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால், இந்த காரின் உரிமையாளர் டீலர் வாயிலாகவே ஒரு சில சாதனங்களை வாங்கி இருக்கின்றார். அந்தவகையில், அவர் ரியர் வியூ கேமிரா டீலர் வாயிலாக வாங்கி பொருத்தி இருக்கின்றார்.
மேலும், இதுவரை அந்த கார் 700 கிமீ மட்டுமே பயணித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இந்த கார் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த காரின் உரிமையாளர் கடந்த நாட்களில் 50-60 கிமீ டிராவல் செய்கையிலேயே காருக்குள் நெருப்பு பிடித்த வாசம் வருவதை உணர்ந்திருக்கின்றார்.
இதுகுறித்து அவர் சர்வீஸ் மையத்திடம் புகாரளித்ததாக கூறப்படுகின்றது. ஆனால், அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இனி அதுபற்றி கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே தற்போது கார் தீ விபத்தில் இருக்கின்றது. ஆகையால், கார் உற்பத்தியாளர் தரப்பில் இருந்து ஏதேனும் உதவிக் கரம் தார் காரின் உரிமையாளருக்குக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.
அதேவேளையில், இந்த காரை அவர் இஎம்ஐ எடுத்ததாகக் கூறப்படுகின்றது. கார் தற்போது அவரிடத்தில் பயன்பாட்டில் இல்லை என்றாலும் அவர் தற்போது இஎம்ஐயைக் கட்டாயமாக செலுத்த வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்று இக்கட்டான சூழல் ஏற்படும் என்கிற காரணத்தினால்தான் ஆஃப்டர் மார்க்கெட் சந்தையில் இருந்து எந்தவொரு பொருளையும் வாங்கி பயன்படுத்தக் கூடாது என்கின்றனர்.
அலங்காரப் பொருளை வைத்து அலங்கரித்ததனால் முழுமையாக எரிந்து அக்கார் நாசமாகி இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் முழுமையாக எரிந்து வெறும் கூடாக மாறி இருக்கின்றது. இதற்கு முழுக்க முழுக்க ஆஃப்டர் மார்க்கெட் சாதனமே காரணம் என கூறப்படுகின்றது. இதன் விளைவாக தற்போது அந்த காரின் உரிமையாளரால் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியாமல் போயிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்சூரன்ஸ் நிர்வாகம் காரில் ஆஃப்டர் மார்க்கெட் பொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதைக் காரணம் காட்டியே இன்சூரன்ஸை நிராகரித்து இருக்கின்றது. இதனால்தான் எந்தவொரு அங்கீகாரம் இல்லாத சாதனங்களையும் காரில் பொருத்த வேண்டாம் என கூறப்படுகின்றது. இதேபோல், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவதனாலும் சில நேரங்களில் இன்சூரன்ஸ் கிளைமிங் நிராகரிக்கப்படுகின்றது அல்லது இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









