டிக்கெட் விலையில் 45 பைசா கூடுதலாக செலுத்தினால் போதும் ரூ10 லட்சத்திற்கான இன்சூரன்ஸ் பெறலாம்
ரயிலில் டிக்கெட் புக் செய்து பயணிக்கும் பயணிகளுக்கு ரயில் பயணத்தில் வழங்கப்படும் பல்வேறு விதமான சலுகைகள் குறித்து சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். இப்படியான ஒரு விஷயம்தான் ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் இன்சூரன்ஸ் குறித்த விஷயம். ரெகுலராக புக்கிங் செய்யும் பயணிகளுக்கே இப்படியான விஷயங்கள் எதுவும் தெரியவில்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தினமும் லட்சக்கணக்கான ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை புக் செய்து ரயில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இப்படியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வழங்கும் பல்வேறு விதமான வசதிகள் எதுவும் தெரியாமல் இருக்கிறது. இப்படியாகத்தான் பலர் ரயில்வே டிக்கெட் வழங்கப்படும் இன்சூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்தியாவில் ரயில் விபத்துக்கள் என்பது குறைவாக இருந்தாலும் ஒரு ரயில் விபத்து ஏற்பட்டாலும் அது அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியாவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரிசாவில் நடந்த ரயில் விபத்தை யாராலும் மறக்க முடியாது. மிக கோரமான விபத்தாக அது அமைந்தது. இதில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகின. ஏகப்பட்ட மக்கள் காயம் அடைந்தார்கள்.
இப்படியாக ரயில் பயணத்தின் போது ஒரு பயணிக்கு ஆபத்து ஏற்பட்டால் அவர்களுக்கான இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது. இதன்படி ரயில்வே முன்பதிவு டிக்கெட் எடுக்கும் போது இன்சூரன்ஸ் தேர்வு செய்து டிக்கெட் எடுத்தால் இன்சூரன்ஸ் இருக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டியது இருக்கும். ஆனால் அந்த பயணத்தின் போது பயணிக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கான இன்சூரன்ஸ் தொகை என்பது அந்த பயணிக்கு வழங்கப்படும்.

தற்போது உள்ள இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ஒரு பயணிக்கு வெறும் 45 பைசா மட்டுமே இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையாக வசூலிக்கப்படுகிறது. ரயில் பயணிக்கு பயணத்தின் போது பிரச்சினை ஏற்பட்டால் ரூபாய் 10 லட்சம் வரை இன்சூரன்ஸ் பணம் வழங்க இந்த திட்டத்தின் மூலம் சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த பயணத்தின் போது பயணி உயிரிழந்து விட்டால் அவருக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.
பயணத்தின் போது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அந்த பையனுக்கு ரூபாய் 7.5 லட்சம் வழங்கப்படும் இதுவே பயணத்தின் போது காயம் ஏற்பட்டால் அந்த பயணிக்கு ரூபாய் 2 லட்சம் வரை வழங்கப்படும். இந்த இன்சூரன்ஸ் என்பது கட்டாயமாக அனைத்து முன்பதிவு டிக்கெட்களுக்கும் வழங்கப்பட மாட்டாது. பயணிகள் தேவை என்றால் அந்த இன்சூரன்ஸை டிக் செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஆப்ஷனை தேர்வு செய்யும் பட்சத்தில் ஏற்கனவே இருக்கும் டிக்கெட் விலையில் ஒரு பயணிக்கு ரூபாய் 45 பைசா மட்டுமே கூடுதலாக வசூலிக்கப்படும். இந்தத் தொகையை சேர்த்து செலுத்தினால் பயணி பெயரில் இன்சுரன்ஸ் வழங்கப்படும். பயணத்தின் போது ஆபத்து ஏற்பட்டால் அதில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த இன்சூரன்ஸ் மூலம் பணம் பெற்றுக் கொள்ள முடியும். பலருக்கு இப்படியான ஆப்ஷன் இருப்பதே தெரியவில்லை.
பலர் டிக்கெட் முன்பதிவு செய்யும் அவசரத்தில் படித்துப் பார்க்காமல் இதற்கு பின்னால் இருக்கும் பலன்களை தெரியாமல் இன்சூரன்ஸ் எடுக்காமல் டிக்கெட்டை புக் செய்கிறார்கள். இன்சூரன்ஸ் எடுக்காமல் டிக்கெட் முன்பதிவு செய்தால் அவர்களுக்கு இந்த இன்சூரன்ஸ் பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை. மேலும் இந்த இன்சூரன்ஸ் திட்டம் என்பது முன் பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு மட்டுமே.
மேலும் இந்த டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்தால் மட்டும் இதை இன்சூரன்ஸ் திட்டம் பயன்படுத்த முடியும். நேரடியாக கவுண்டரில் சென்று முன்பதிவு டிக்கெட் எடுத்தால் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தை தேர்வு செய்ய முடியாது. அதேபோல முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை எடுத்தாலும் அதில் இன்சூரன்ஸ் கட்டணம் வராது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில்களில் பணிக்கும்போது இனி நீங்க டிக்கெட் முன்பதிவு செய்தால் கட்டாயம் இந்த இன்சூரன்ஸ் வேண்டும் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு பயணத்தின் போது எந்த சிக்கல் ஏற்பட்டாலும் அதற்கான இன்சூரன்ஸ் நீங்கள் கிளைம் செய்ய முடியும். இந்த ஆப்ஷனில் நீங்கள் தேர்வு வில்லை என்றால் உங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் கிடைக்காது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








