கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

அந்த கால ராயல் என்பீல்டு பைக்குகள் எப்படி இருந்தன? புதிய ராயல் என்பீல்டு பைக்குகளை ஏன் வாங்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கான சுவாரஸ்யமான பதில்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

ஒரு சிலர் இதனை 'லெஜண்ட்' என்கின்றனர். இன்னும் சிலரோ இதனை 'பீஸ்ட்' என்கின்றனர். நீங்கள் ராயல் என்பீல்டு பைக்குகளை விரும்ப கூடியவராக இருக்கலாம். அல்லது ராயல் என்பீல்டு பைக்குகளை வெறுப்பவராகவும் இருக்கலாம். எது எப்படியாயினும் சாலையில் ராயல் என்பீல்டு பைக்குகள் கவனம் பெறாமல் போகாது.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

இந்தியாவை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரிக்கும் பைக்குகளுக்கு இங்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்களின் எண்ணிக்கைக்கு நிகராக ராயல் என்பீல்டு பைக்குகளை வெறுப்பவர்களும் அதிகம். எனவே ராயல் என்பீல்டு பைக்கை வாங்க போகும் ஒருவருக்கு, வாங்கலாம் மற்றும் வாங்க வேண்டாம் என மாறுபட்ட பரிந்துரைகள் செய்யப்படுகின்றன.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

இதனால் ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்கலாமா? அல்லது வேண்டாமா? என்ற குழப்பமும், தடுமாற்றமும் ஏற்பட்டு விடுகிறது. இந்த குழப்பத்தை தெளிவுபடுத்தும் விதமாக, ராயல் என்பீல்டு பைக்குகளை ஏன் வாங்க வேண்டும்? என்பதற்கான ஒரு சில காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் சரியான முடிவை எடுப்பதற்கு இந்த தகவல்கள் உங்களுக்கு உதவி செய்யும் என நம்புகிறோம்.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

அனைவருக்குமான பைக்

முன்பெல்லாம் ராயல் என்பீல்டு பைக்குகள் அனைவருக்குமான தயாரிப்பாக இருந்ததில்லை. அதாவது ராயல் என்பீல்டு பைக்குகளை ஓட்ட வேண்டும் என்றால், அதற்கென தனியாக அறிவு இருக்க வேண்டும். ஏனெனில் மற்ற பைக்குகளை காட்டிலும் ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகளின் 'மெக்கானிசம்' வேறு மாதிரியாக இருக்கும்.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

பொதுவாக அனைத்து பைக்குகளிலும் பிரேக் வலது பக்கமும், கியர் இடது பக்கமும் இருக்கும். ஆனால் ராயல் என்பீல்டு பைக்குகளில் பிரேக் இடது பக்கமும், கியர் வலது பக்கமும் இருந்தது. இதுபோதாதென்று டீகம்ப்ரசர் (Decompressor), வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அவப்பெயரை எடுத்த கிக்கர் ஆகியவையும் வேதனையை உண்டாக்கின.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

மேலும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மிஸ்ஸிங், டிஸ்க் பிரேக்குகள் இல்லை என ராயல் என்பீல்டு பைக்குகள் மீதான குற்றச்சாட்டுக்களை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் புதிய மாடல்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் இவை அனைத்தையும் மாற்றியுள்ளது. இதன் மூலம் மற்ற பைக்குகளை போலவே, ராயல் என்பீல்டு பைக்குகளும் மாறியுள்ளன.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

தற்போது கியர் மற்றும் பிரேக் ஆகியவற்றின் பொஷிஷன் மற்ற பைக்குகளை போலவே பொதுவாக உள்ளது. டிகம்ப்ரஸரும் போய் விட்டது. கிக்கர் முன்பு போல பவுன்ஸ் ஆகி வருவதில்லை. அத்துடன் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் ஆகிய தேர்வுகளும் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ராயல் என்பீல்டு பைக்குகளை ஓட்டுவதற்கு முன்பு போல தனி திறமையோ அல்லது அறிவோ தற்போது தேவைப்படாது.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

இதன் மூலம் அனைவருக்குமான பைக் என்ற பெயரை ராயல் என்பீல்டு பைக்குகள் தற்போது பெற்றுள்ளன. முன்பெல்லாம் இதற்கென தனி திறமை உடையவர்களால் மட்டுமே ராயல் என்பீல்டு பைக்குகளை சுலபமாக ஓட்ட முடிந்தது. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை தற்போது ஓட்டுவதும் சுலபம். பராமரிப்பதும் சுலபம்.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

ராயல் என்பீல்டு பைக்குகளின் மீது முன்பெல்லாம் கூறப்பட்டு வந்த மற்றொரு மிகப்பெரிய குற்றச்சாட்டு அதிர்வுகள். பைக் அதிகமாக 'வைப்ரேஷன்' ஆகிறது என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. இந்த குறையையும் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது போக்கியுள்ளது. இதற்காக பைக்குகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

அத்துடன் ட்ரிப்பர் நேவிகேஷன் (Tripper Navigation) போன்ற அதிநவீன வசதிகளும் ராயல் என்பீல்டு பைக்குகளில் தற்போது வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ராயல் என்பீல்டு பைக்குகள் 'மாடர்ன்' ஆக மாறியுள்ளன. பழைய ரெட்ரோ லுக்குடன், தற்போதைய அதிநவீன வசதிகளும் கலந்த கலவையாக இருப்பதால், மற்ற பைக்குகளிடம் இருந்து ராயல் என்பீல்டு பைக்குகள் தனித்து தெரிகின்றன.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

கட்டுமான தரம்

200 சிசி பைக்குகள் உடன் ஒப்பிடும்போது, ராயல் என்பீல்டு பைக்குகள் நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைப்பதாக ராயல் என்பீல்டு ஃபேன்ஸ் கிளப்பின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ராயல் என்பீல்டு பைக்குகளின் சிறப்பான கட்டுமான தரமே காரணம். சரியாக பராமரிக்கப்பட்டால், ராயல் என்பீல்டு பைக்குகள் மிகவும் எளிதாக 30 வருடங்கள் வரை உழைக்கும் என்பதும் அவர்களின் கருத்து.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

ரைடு குவாலிட்டி

ஒரு சில பைக்குகளை நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது காற்று அதிகமாக வீசினால் ஒரு பக்கமாக இழுத்து செல்லப்படுவதை போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ராயல் என்பீல்டு பைக்குகளில் அப்படி நடக்காது. ஏனெனில் ராயல் என்பீல்டு பைக்குகள் அதிக எடை கொண்டவை. இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது பைக் அதிக ஸ்திரத்தன்மையுடன் இருக்கும்.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

காற்று அதிகமாக வீசும் மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகளுக்கும் இது பொருந்தும். இதன் மூலம் உங்களுக்கு உற்சாகமான ஓட்டுதல் அனுபவம் கிடைக்கும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளில் தொலைதூர பயணங்களை மேற்கொள்வதற்கு பலரும் விரும்புவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

குறைவான ஆர்பிஎம்மில் அதிக டார்க்

ஒரு சில பைக்குகளில் அதிக ஆர்பிஎம்மில்தான் அதிகமான டார்க் திறன் கிடைக்கும். ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளில் குறைவான ஆர்பிஎம்மிலேயே அதிக டார்க் திறன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இது உங்களுக்கு மறக்க முடியாத மற்றும் உற்சாகமான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும்.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

அற்புதமான ரீ-சேல் வேல்யூ

பொதுவாக ஒரு சில பைக்குகள் வாங்கப்பட்ட சில ஆண்டுகளில் அதன் மதிப்பை இழந்து விடும். அல்லது மதிப்பு வெகுவாக குறைந்து விடும். எனவே நீங்கள் அதனை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனை செய்ய முயன்றால், உங்களுக்கு குறைவான தொகைதான் கிடைக்கும். ஆனால் ராயல் என்பீல்டு பைக்குகள் அப்படிப்பட்டவை கிடையாது.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

ராயல் என்பீல்டு பைக்குகள் சந்தையில் மதிப்பை இழப்பதில்லை. அவற்றுக்கு நல்ல ரீ-சேல் வேல்யூ உண்டு. ராயல் என்பீல்டு பைக்குகள் வாங்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, என்ன விலைக்கு வாங்கப்பட்டதோ கிட்டத்தட்ட அதே விலைக்கு செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனை செய்தவர்கள் இங்கு நிறைய பேர் இருக்கின்றனர்.

கியர், பிரேக் எல்லாம் வேற மாதிரி இருக்கும்! நாலேட்ஜ் இருந்தாதான் ஓட்ட முடியும்! பழைய ராயல் என்பீல்டு தனி ரகம்!

கவனிக்கப்படாமல் போகாது

ராயல் என்பீல்டு பைக்கை சாலையில் ஓட்டிக்கொண்டு வரும்போது அனைவரின் கவனமும் தங்கள் மீது விழுவதாக ராயல் என்பீல்டு ரசிகர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். அதாவது நாங்கள் ஏற்கனவே கூறியபடி ராயல் என்பீல்டு பைக்குகள் நிச்சயமாக கவனிக்கப்படாமல் போகாது. கம்பீரமான ராயல் என்பீல்டு பைக்குகள் அளவிற்கு வேறு எந்த பைக்கிற்கும் நல்ல 'Street Presence' இல்லை என்பது அவர்களின் கருத்து.

Article Published On: Saturday, January 22, 2022, 17:01 [IST]
English summary
Interesting and important reasons why you should buy royal enfield motorcycle
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+