டைட்டானிக் கப்பலும், டைட்டானிக் சினிமாவும்... நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்...!!

By Saravana

கடந்த நூற்றாண்டின் மிக மோசமான கப்பல் விபத்துக்களில் ஒன்றாக டைட்டானிக் கப்பல் மூழ்கிய விபத்து கூறப்படுகிறது. அந்த பிரம்மாண்ட சொகுசு கப்பல் தனது கன்னிப் பயணத்திலேயே மூழ்கிய சம்பவம் உலக வரலாற்றில் ஒரு கருப்பு பக்கமாக பார்க்கப்படுகிறது.

மேலும், டைட்டானிக் கப்பல் விபத்தை அடிப்படையாக வைத்து பல ஆவணப்படங்களும், கதைகளும், சினிமாக்களும் வெளிவந்தன. அதில், 1997ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த டைட்டானிக் சினிமா, அந்த கப்பல் விபத்தை அப்படியே வர்ணிக்கும் விதத்தில் தத்ரூபமாக படமாக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், நிஜ டைட்டானிக் கப்பலுக்கும், டைட்டானிக் சினிமாவிற்கும் இடையிலான வேறுபாடுகள், ஒற்றுமைகள், சுவாரஸ்யத் தகவல்களை தாங்கி வருகிறது இந்த செய்தித் தொகுப்பு.

டைட்டானிக் செலவு

டைட்டானிக் செலவு

1912ம் ஆண்டு மதிப்புப்படி, நிஜ டைட்டானிக் கப்பல் 7.5 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்டது. இதனை தற்போதைய மதிப்புடன் ஒப்பிட்டால், 120 மில்லியன் டாலர் என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், அதனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டைட்டானிக் சினிமா 200 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டது. ஒரிஜினல் கப்பலைவிட சினிமா அதிக முதலீட்டில் எடுக்கப்பட்டது.

மறக்கமுடியுமா?

மறக்கமுடியுமா?

டைட்டானிக் படத்தில் வரும் ஹீரோ ஜாக் மற்றும் ஹீரோயின் ரோஸ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் கற்பனையானவை. ஒரிஜினல் கப்பலில் அதுபோன்ற ஒரு காதலர்கள் இருக்கவில்லை. டைட்டானிக் சினிமாவின் உயிர் மூச்சாக வரும் அந்த கதாபாத்திரங்கள், கற்பனையானது. ஆனால், கதையை உருவாக்கிய பின்னர், அதேபோன்ற ஒருவர் டைட்டானிக் கப்பலில் இருந்தார் என்பதை கதையை எழுதிய பின்னர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தெரிய வந்தது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

டைட்டானிக் படத்தில் ஜாக் கதாபாத்திரத்தில் டாம் க்ரூஸ்தான் நடிக்க வைக்க முயற்சித்தனர். அதேபோன்று, ரோஸ் கதாபாத்திரத்திற்கு நடிகை மடோனாவை நடிக்க வைக்க முயற்சித்தனர். ஆனால், டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனை டிகாப்ரியோவும், கேத் வின்ஸ்லெட்டும் கவர்ந்துவிட்டனர்.

கேமரூன் கைவண்ணம்

கேமரூன் கைவண்ணம்

டைட்டானிக் நிஜ கப்பலை, அப்படியே நம் கண் முன் நிறுத்திய டைட்டானிக் சினிமா இயக்குனர் கேமரூன் பற்றிய இன்னொரு சுவாரஸ்யத் தகவல். படத்தின் கதாநாயகியை, கதாநாயகன் பென்சில் ஸ்கெட்ச் மூலமாக ஓவியமாக தீட்டுவது போன்ற காட்சியை பார்த்து அசந்திருப்பீர்கள். அந்த பென்சில் ஓவியங்களை வரைந்தவரும் டைரக்டர் கேமரூன்தான். அந்த படத்தில் வரும் அனைத்து ஸ்கெட்சுகளையும் அவர்தான் வரைந்திருக்கிறார்.

நிஜ காட்சிகள்

நிஜ காட்சிகள்

படத்தில் கப்பல் மூழ்கிய பின் கடலுக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகள் பெரும்பாலானவை வடக்கு அட்லாண்டிக் பகுதியில் எடுக்கப்பட்டவை. கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்டவை அல்ல. இதற்காக, ரஷ்யாவை சேர்ந்த அகடமிக் ஸ்டிஸ்லேவ் கெல்டிஷ் என்ற கப்பலையும், இரண்டு நீர்மூழ்கி கப்பல்களையும் வாடகைக்கு எடுத்து அந்த காட்சிகளை படமாக்கினர்.

கடும் பிரத்யேனம்

கடும் பிரத்யேனம்

வடக்கு அட்லான்டிக் கடல்பகுதியில் 12,500 அடி ஆழத்தில் 12 முறை நீர்மூழ்கி கப்பல்களில் சென்று கப்பல் மூழ்கியதற்கு பின்னரான காட்சிகளை எடுத்தனர். ஒவ்வொரு முறையும் 15 நிமிட காட்சிகளை மட்டுமே எடுக்கக்கூடிய சூழலில் மிகுந்த நடைமுறை சிரமங்களுக்கு இடையில், அந்த காட்சிகளை எடுத்துள்ளனர். இதற்காக, விசேஷ கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

ஒற்றுமை

ஒற்றுமை

டைட்டானிக் கப்பல் பனிப்பாறைகளில் மோதி, மூழ்குவதற்கு 2 மணி 40 நிமிடங்கள் ஆனது. அதே நேரம்தான் டைட்டானிக் படத்தின் நீளமும் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், டைட்டானிக் படத்தின் எடுக்கப்பட்டபோது அதன் மொத்த நீளம் 36 மணி நேரங்களாக இருந்தது என அந்த படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் கூறியிருக்கிறார்.

இதுவும் நிஜம்

இதுவும் நிஜம்

டைட்டானிக் படத்தில் வயதான தம்பதி, கப்பலின் அறையில் கட்டியணைத்தபடி இருப்பதையும், அப்போது அந்த அறை கடல் நீரால் நிரம்புவது போன்றும்மனதை பதைபதைக்க வைக்கும் காட்சிகள், நிஜ டைட்டானிக் கப்பலில் பயணித்து மரணமடைந்த மேசி டிபார்ட்மென்ட் ஸ்டோரின் உரிமையாளர் இசிடோர் ஸ்ட்ராஸ் அவரது மனைவி இடா ஆகியோரை நினைவுகூறும் வகையில் எடுக்கப்பட்டது.

மூழ்கிய நேரம்

மூழ்கிய நேரம்

டைட்டானிக் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், ஹீரோ ஜாக்கை ஹீரோயின் ரோஸ் சந்திப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, அங்குள்ள கடிகாரத்தில் மணி 2.20 என காட்டும். அதே நேரத்தில்தான் ஒரிஜினல் டைட்டானிக் கப்பல் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

செயற்கை கடல்

செயற்கை கடல்

டைட்டானிக் படத்தில் வரும் இறுதி காட்சிகள் 3 அடி ஆழ நீச்சல் குளத்தில் படமாக்கப்பட்டது. ஆனால், ஆழம் குறைவேயொழிய அது மிகப்பெரிய குளம் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை, உண்மை...

உண்மை, உண்மை...

ஊரே பற்றி எரிந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக என்று குறிப்பிடுவோம். அதேபோன்று, டைட்டானிக் படத்தில் கப்பல் மூழ்கிகொண்டிருக்கும்போது, பேண்ட் வாத்திய குழுவினர் தொடர்ந்து இசையமைத்துக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆம், நிஜ டைட்டானிக் கப்பலில் இது உண்மையாக நடந்தது. கப்பலில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக கடைசி வரை பேண்ட் குழுவினர் வாசித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்பது வருந்தத்தக்க செய்தி.

அணு ஆயுதம்...

அணு ஆயுதம்...

டைரக்டர் ஜேம்ஸ் கேமரூனின் 10வது சினிமாதான் டைட்டானிக். அதுவரை அனைத்து படங்களிலும் அணு ஆயுதங்களை பயன்படுத்தும் காட்சிகள் அல்லது தகவல்களை பயன்படுத்தி வந்த டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் முதல்முறையாக டைட்டானிக் படத்தில் மருந்துக்கூட அணு ஆயுதம் பற்றிய தகவல் இல்லாமல் எடுத்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லப் பிராணிகள்

செல்லப் பிராணிகள்

டைட்டானிக் கப்பலில் பயணிகளின் செல்லப் பிராணிகள் வரிசையில் 12 நாட்கள் கொண்டு செல்லப்படுவதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வெறும் மூன்று நாய்கள் மட்டுமே உயிர் காக்கும் படகுகள் மூலமாக மீட்கப்பட்டன. நாய்கள் தொடர்பான காட்சிகள் படமாக்கி பின்னர் அதனை கத்தரி போட்டுவிட்டராம் ஜேம்ஸ் கேமரூன்.

கப்பல் செட்

கப்பல் செட்

மெக்ஸிகோ நாட்டின் பாஜா கலிஃபோர்னியா பகுதியில் கடற்கரையில்தான் டைட்டானிக் கப்பலின் செட் போடப்பட்டிருந்தது. அதேபோன்று, பல கோடி மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த கப்பலின் உட்புறத்தை பிரதிபலிக்கும் விதத்திலான செட்டுகளும், படப்பிடிப்பு நிறைவடைந்தபின் காயலாங்கடைக்காரர்களிடம் விற்கப்பட்டது.

சண்டை காட்சிகள்

சண்டை காட்சிகள்

டைட்டானிக் படத்தில் எஞ்சின் அறையில் எடுக்கப்பட்டிருந்த சண்டைக் காட்சிகளில் 5 அடிக்கும் குறைவான உயரமுடைய ஸ்டன்ட் நடிகர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். எஞ்சின் அறையை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக அவ்வாறு செய்துள்ளனர்.

அலங்காரம்

அலங்காரம்

டைட்டானிக் படத்திற்காக அமைக்கப்பட்ட கப்பல் செட்டின் உட்புற அலங்காரங்களில், ஒரிஜினல் டைட்டானிக் கப்பலை வடிவமைத்த ஒயிட் ஸ்டார் லைன் நிறுவனத்தின் நிபுணர்கள் உதவியுடன் செய்யப்பட்டது.

வியந்த கேமரூன்

வியந்த கேமரூன்

டைட்டானிக் படத்தின் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன், கடலில் மூழ்கி கிடக்கும் நிஜ டைட்டானிக் கப்பலை பலமுறை சென்று பார்த்து, அதுகுறித்து ஆச்சரியத்தையும், பரவசத்தையும் உணர்ந்ததாக தெரிவித்தார். மேலும், அதில் பயணித்தவர்களைவிட, அந்த மூழ்கிய கப்பலுடன் அதிக நேரம் செலவிட்டவர் ஜேம்ஸ் கேமரூன் என்று பல பத்திரிக்கைகள் புகழாராம் சூட்டின. நம்மை வியக்க வைத்த டைட்டானிக் படத்தை எடுத்த ஜேம்ஸ் கேமரூனையே, நிஜ டைட்டானிக் கப்பல் வியக்க வைத்ததென்றால், அதன் பிரம்மாண்டம் நம் மன கண்ணையும் தாண்டியதாகவே இருக்கிறது. மற்றொரு சுவாரஸ்ய செய்தித் தொகுப்பில் சந்திக்கலாம்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

டைட்டானிக் கப்பலின் சுவாரஸ்ய விஷயங்கள்...!!

தயாராகிறது டைட்டானிக்-II சொகுசு கப்பல்- தகவல்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
There are many interesting facts about the connections between the Titanic film and the Real Titanic Megaship. Here are some of the Interesting Connections Between Titanic Ship And Titanic Film, which are presented to you.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X