விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

ஒவ்வொரு ஓடுபாதையின் துவக்கத்திலும் குறியீட்டு எண்கள் பெரிதாக எழுதப்பட்டு இருக்கும். பெரிய விமான நிலையங்களில் இரண்டு அல்லது மூன்று ஓடுபாதைகள் வரை இருக்கும். இதனால், விமானிகள் சரியான ஓடுபாதையை கண்டறிந

விமானங்கள் குறித்த பல சுவாரஸ்யமானத் தகவல்களை தொடர்ந்து படித்து வருகிறீர்கள். இன்று விமான நிலைய ஓடுபாதைகள் குறித்த தொழில்நுட்ப சுவாரஸ்யங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

பெரிய விமான நிலையங்களில் ஒரே நேரத்தில் பல விமானங்கள் இயக்கப்படுவது பலருக்கும் ஆச்சர்யத்தை தரும் விஷயமாக இருக்கிறது. விபத்து இல்லாமல் அனைத்து விமானங்களும் மிக துல்லியமாக தரை இறக்குவதற்கும், மேலே ஏற்றுவதற்கும் பல தொழில்நுட்ப உதவிகள், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் துணை புரிகின்றனர்.

விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

எனினும், ஒரு எளிமையான விஷயத்தின் அடிப்படையிலான இந்த சிக்கலான பணி செய்யப்படுகிறது என்பது மேலும் ஆச்சர்யத்தை தரலாம். விமான நிலையங்களில் அமைக்கப்படும் ஓடுபாதைகளில் குறிப்பிட்ட எண்கள் எழுதப்பட்டு இருப்பதை பார்த்திருக்க வாய்ப்புண்டு.

விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

ஒவ்வொரு ஓடுபாதையின் துவக்கத்திலும் குறியீட்டு எண்கள் பெரிதாக எழுதப்பட்டு இருக்கும். பெரிய விமான நிலையங்களில் இரண்டு அல்லது மூன்று ஓடுபாதைகள் வரை அமைக்கப்பட்டு இருக்கும். இதனால், விமானிகள் சரியான ஓடுபாதையை கண்டறிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த குறியீட்டு எண்கள் ஓடுபாதையின் துவக்கத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.

விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தரும் குறியீட்டு எண் அடிப்படையில்தான் விமானி சரியான ஓடுபாதையில் தரை இறக்குவார். இதனால், ஒரே நேரத்தில் பல விமானங்கள் ஏறி, இறங்கும் வாய்ப்பை பெறுவதுடன் கால தாமதமும், விபத்துக்களும் தவிர்க்கப்படுகின்றன.

விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

விமான நிலைய ஓடுபாதைகளுக்கு குறியீட்டு எண் கொடுக்கப்படுவதிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. ஓடுபாதைகளுக்கு குறியீட்டு எண்கள் கொடுக்கப்படுவது உலக அளவில் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால், விமானிகள் புதிய விமான நிலையங்களுக்கு செல்லும்போது குழப்பங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

ஓடுபாதைகளுக்கு வழங்கப்படும் குறியீட்டு எண்களுக்கு QFU Code என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஓடுபாதையும் அமைந்துள்ள திசையின் அடிப்படையில், குறியீட்டு எண்களை பெற்றுள்ளன.

விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

திசைக் காட்டியானது காந்த முனை பகுதியான வடக்கு நோக்கி சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கும். அதன்படி, திசைக் காட்டியின் வடக்கு முனையானது 360 டிகிரி கோணம் எனவும், மேற்கு திசை 270 டிகிரியாகவும், தெற்கு திசை 180 டிகிரியாகவும், கிழக்கு திசை 90 டிகிரி எனவும் கணக்கில் கொள்ளப்படுகிறது.

விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

உதாரணத்திற்கு மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஓடுபாதைக்கு 270 டிகிரி என்பதன் சுருக்கமாக 27 என்ற எண் கொடுக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய ஓடுபாதைக்கு 90 டிகிர என்பதன் சுருக்கமாக 09 என்ற எண் கொடுக்கப்படுகிறது. மேற்கு நோக்கிய ஓடுபாதைக்கு 27 என்றும், வடக்கு நோக்கிய ஓடுபாதைக்கு 36 என்றும் கொடுக்கப்படுகிறது.

விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

இதி்ல், வடதிசை நோக்கிய ஓடுபாதையின் ஒருமுனைக்கு 36 என்ற எண் கொடுக்கப்படும்போது, அதன் எதிர்முனைக்கு(தென்முனை) 18 என்ற எண் குறிக்கப்பட்டு இருக்கும். ஏனெனில், காற்று வீச்சின் தன்மையை பொறுத்து இருபுறத்திலும் விமானத்தை ஏற்றி, இறக்கும் திசையானது கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளால் முடிவு செய்யப்படும்.

விமான நிலைய ஓடுபாதை குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்கள்!!

அனைத்து ஓடுபாதைகளும், தெற்கு - வடக்கு, கிழக்கு- மேற்கு என மிக சரியான திசையில் ஓடுபாதைகள் அமைக்கப்படுவதில்லை. ஓடுபாதையின் திசையானது வடகிழக்கு, வட மேற்கு, தென்கிழக்கு என எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அதன்படி, குறியீட்டு எண்கள் கொடுக்கப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், சில விமான நிலையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓடுபாதைகள் இணையாக அமைக்கப்பட்டு இருக்கும். அவ்வாறான விமான ஓடுபாதைகளில் வலதுபக்க ஓடுபாதை என்பதற்கு R என்ற எழுத்து கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கும். நடுவில் அமைந்துள்ள ஓடுபாதைக்கு C என்றும் இடதுபக்க ஓடுபாதைக்கு L என்றும் மேற்கண்ட எண்களுடன் சேர்த்து குறிக்கப்படுகிறது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

தூக்கம் போடும் பைலட்டுகள்

விமானங்களை நீண்ட தூரம் இயக்கும்போது, பைலட்டுகள் தூக்கம் போடுவது சர்வசாதாரணமாம். ஆனால், அவர்கள் நிம்மதியாக தூங்குவதில்லையாம். அவ்வப்போது எழுந்து மற்றொரு விமான பைலட் தூங்கிவிட்டாரா என்ற பதைபதைப்பில் குட்டித் தூக்கம் போடுகின்றனராம்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

ஆக்சிஜன் மாஸ்க்

சில வேளைகளில் விமானங்கள் அதி உயரத்தில் பறக்கும்போது பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்காக, இருக்கையின் மேல்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் மாஸ்க்குகளை பயன்படுத்த பயணிகள் அறிவுறுத்தப்படுவர். ஆனால், அந்த ஆக்சிஜன் மாஸ்க்குகள் மூலமாக 15 நிமிடங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் கிடைக்கும். அதற்குள் குறைவான உயரத்திற்கு விமானத்தை பைலட் கொண்டு வந்துவிடுவார் என்பதால், அதுவே போதுமானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஆக்சிஜன் மாஸ்க்குகளை போடும்போது முதலில் பெரியவர்களும், பின்னர் சிறியவர்களுக்கும் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவாக இருக்குமாம்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

குறைவான வெளிச்சம்..

விமானங்களை தரை இறக்கும்போது பயணிகளின் அமர்ந்திருக்கும் பகுதியில் விளக்குகளின் பிரகாசத்தை பைலட்டுகள் குறைத்துவிடுவது வழக்கம். ஒருவேளை, தரை இறக்கும்போது விமானம் விபத்தை சந்திக்க நேர்ந்தால், திடீரென இருள் சூழ்ந்துவிடும் வாய்ப்புண்டு. அப்போது பயணிகளின் கண்களுக்கு அந்த சூழலை உடனடியாக புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். மேலும், அவசர கால வழியை தேடுவதும் கடினமாகிவிடும். அதற்காகவே, விளக்குகளின் பிரகாசம் குறைக்கப்படுகிறது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

பைலட்டுகளுக்கு உணவு

விமானத்தை இயக்கும் பைலட்டுகளுக்கு வெவ்வேறு உணவு வழங்கப்படுவது வழக்கம். மேலும், அவர்கள் அதை பகிர்ந்து உண்ணக் கூடாது என்ற விதிமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு உணவில் விஷம் அல்லது ஒவ்வாமை இருந்து ஒருவர் பாதிக்கப்பட்டாலும், மற்றொருவருக்கு பாதிப்பு ஏற்படாது என்ற காரணத்தாலேயே இவ்வாறு வெவ்வேறு உணவு வழங்கப்படுகிறது. ஒருவேளை, பகிர்ந்து உண்ணப்படுவது தெரிந்தால், பணியிலிருந்து நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளதாம்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

உவ்வே...

விமானங்களில் பிளாஸ்டிக் டம்ப்ளர்களில் தரப்படும் தண்ணீரை குடிக்கக்கூடாது என்று லூஃப்தான்ஸா கார்கோ ஏஜென்ட் ஒருவர் கூறியிருக்கிறார். அதாவது, விமானத்தில் நிரப்பப்படும் தண்ணீர் சுகாதாரமான இருக்காது என்பதுடன், சில வேளைகளில் கழிவறையை சுத்தம் செய்யும் பணியாளரே, தண்ணீர் தொட்டியையும் சுத்தம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். சில விமானங்கள் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருப்பதால், அதன் தண்ணீர் தொட்டி சுகாதாரமற்ற முறையில் இருக்க அதிக வாய்ப்பு உண்டு. எனவே, பாட்டில் தண்ணீரை மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கிறார்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

டீ, காபியும் வேண்டாம்

விமானங்களில் தரப்படும் டீ, காபி போன்றவை சுகாதாரமான குடிநீரில் தயாரிக்கப்படுவதிலும் சந்தேகம் இருக்கிறது. எனவே, விமானங்களில் தரப்படும் டீ, காபியை தவிர்ப்பது நலம் என்கின்றனர். ஆனால், இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

கழிவறை விஷயம்

விமானத்தின் கழிவறை உள்பக்கம் தாழிட்டுக் கொண்டு திறக்க முடியாவிட்டால், வெளியிலிருந்து எளிதாக திறக்கும் வசதி உள்ளது. கழிவறையின் வெளிப்புறத்தில் புகைப்பிடிக்கத் தடை என்று இருக்கும் பேட்ஜை சற்றே விரல்களால் தூக்கிவிட்டு, அதன் பின்புறத்தில் இருக்கும் போல்ட்டை திருகினால் கழிவறை திறந்து கொள்ளும்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

ஹெட்போன்

விமான இருக்கைகளில் இருக்கும் ஹெட்போன்கள் பலவும் மிகவும் பழையதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலும் அந்த ஹெட்போன்களை கழற்றி, சுத்தம் செய்து புதிய உறையை மாட்டி மீண்டும் பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

பேக் ஜிப்

எடுத்துச் செல்லும் பைகளில் டிஎஸ்ஏ அங்கீகரிக்கப்பட்ட பூட்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இதன்மூலமாக, பைகளை அதிகாரிகள் எளிதாக திறந்து சோதனையிடமுடியும் என்பதோடு, எளிதாகவும் பூட்டி விடலாம். சாதாரண பூட்டுகளை சோதனை செய்துவிட்டு மீண்டும் மூடும்போது சிரமம் ஏற்படும் என்பதுடன், பை கொண்டால் பின்னர் வெளியாட்கள் பொருட்களை எடுத்துவிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

தரை இறக்குதல்...

தரை இறக்குதல் என்பதுதான் பைலட்டுகளுக்கு மிக சவாலான விஷயம். சில மோசமான வானிலை மற்றும் மழை நேரங்களில் தரையில் இறக்குவது என்பது கட்டுப்பாட்டுடன் தரையில் மோதுவதற்கு சமமானதாக பைலட்டுகள் வர்ணிக்கின்றனர். சில சமயம், மழை நீர் தேங்கி, விமானத்தின் டயர்கள் தரையுடன் உராய்வு இல்லாமல் போகும் சமயங்களில் அதிக விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே, இதனை தரையில் மோதுவதற்கு சமமான லேண்டிங்காகவே பைலட்டுகள் குறிப்பிடுகின்றனர்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

டிப்ஸ் கொடுத்த அனுபவம்...

சில விமான பணியாளர்களுக்கு முதல்முறையாக வரும்போது டிப்ஸ் கொடுத்து கவனித்தால், பயணிக்கும் நேரம் வரை மது உள்ளிட்ட தேவையானதை போதும் போதும் எனும் பெற்றுக் கொள்ளலாம் என்று விமானத்தில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

குறைவான அனுபவம்

பெரிய அல்லது பிரபலமான விமான நிறுவனங்கள் அனுபவசாலியான பைலட்டுகளை வைத்திருப்பதாக நினைப்பதும் தவறு என்கின்றனர் விமான சேவை துறையை சேர்ந்த வல்லுனர்கள். அனுபவம் குறைவான பலர் லஞ்சம் கொடுத்து பெரிய விமான நிறுவனங்களில் புகுந்துவிடுகின்றனராம். இதுவும் விமான சேவையின் துறையின் நிழல் உலகத்தில் நடைபெறும் மோசமான நடைமுறையாக தெரிவிக்கின்றனர்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

மொபைல்போன் பயன்பாடு

விமானத்தில் ஏறியவுடன், மொபைல்போனை சுவிட்ச் ஆஃப் செய்யப்படுவது வழக்கம். மொபைல் உள்ளிட்ட சாதனங்களால் விமானத்தின் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதாம். ஆனால், கட்டுப்பாட்டு அறையுடன் விமானிகள் செய்யும் சம்பாஷனைகள் மற்றும் சமிக்ஞைகளில் குறுக்கீடுகள் இருக்க வாய்ப்புள்ளதாம். அதுவே, மொபைல்போனை சுவிட்ச் ஆஃப் செய்ய சொல்வதற்கு காரணம்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

துவைக்காத சீட் கவர்கள்

ரயில்களில் தரப்படும் போர்வைகள், தலையணை உறைகள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் துவைக்கப்படுகிறது என பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஒப்புக்கொண்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதேநிலைதான், பெரும்பாலான விமானங்களிலும் என்கிறார் முன்னாள் விமானப் பணியாளர் ஒருவர். போர்வையை மடித்து வைத்து கொடுப்பதுதான் பல விமான நிறுவனங்கள் செய்யும் நாற்றம் பிடித்த செயலாக தெரிவிக்கப்படுகிறது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

எஞ்சின் செயலிழந்தாலும்...

பறந்துகொண்டிருக்கும்போது இரண்டு எஞ்சின்களையும் அணைத்துவிட்டாலும், 35,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை படிப்படியாக தரைக்கு அருகில் வருவதற்குள் 42 மைல்கள் வரை கடக்க வைக்க முடியுமாம். எனவே, பறக்கும்போது விமானம் விபத்துக்களில் சிக்குவது குறைவு. ஆனால், ஏறும்போது, இறங்கும்போதுதான் அதிக விபத்து ஏற்படுகின்றன.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

ஆஷ் ட்ரே

விமானத்தில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டு விட்டாலும், விமானத்தில் ஆஷ் ட்ரே இருப்பது கட்டாயமான விதிமுறை. ஏனெனில், கட்டுப்படுத்த முடியாத நிலையில், பயணி ஒருவர் சிகரெட் பிடித்தால், அவர் ஆஷ் ட்ரெயில் மட்டுமே போடுவதற்கு வசதி இருக்க வேண்டும். அவர் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டால் விமானத்தில் தீ பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதற்காகவே, இப்போதும் ஆஷ் ட்ரே வைக்கப்படுகிறதாம்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

ரகசிய சிக்னல்

ஒருவேளை விமானம் கடத்தப்பட்டிருந்தால், தரை இறக்கிய பின்னர் விமானத்தின் வேகத்தை குறைக்க பயன்படும், இறக்கையின் ஃப்ளாப்புகள் மேல்நோக்கி இருக்குமாறு விமானி வைத்திருந்தால், அது விமானம் கடத்தப்பட்டிருக்கிறது அல்லது விமானத்திற்குள் தீவிரமான பிரச்னை உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகளுக்கு சங்கேதமாக தெரிவிக்கும் விதிமுறையாம்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

நாய்களை அழைத்துச்செல்லும்போது...

செல்லப் பிராணிகளை விமானத்தில் அழைத்து செல்வதை தவிர்ப்பது நலம் என்கின்றனர் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள். மிகவும் பத்திரமாக கூண்டில் எடுத்துச் செல்லப்பட்டாலும், சில சமயம் விமானத்தில் ஏற்றுவதற்கு முன்பாக, விமான எஞ்சினுக்கு அருகில் கூண்டு நிறுத்தப்பட்டிருக்கும். இந்த அதீத சப்தம் உங்களது செல்லப்பிராணிக்கு மன அளவில் அச்சத்தையும், காதுகள் செவிடாகும் அளவுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றனர்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

மனித உடல் உறுப்புகள்

விமானங்களில் அதிக அளவில் மனித உடல் உறுப்புகள் எடுத்துச் செல்லப்படுகிறதாம். சில வேளைகளில் தலை மட்டும் தனியாக பெட்டிகளில் வைத்து எடுத்துச் செல்லப்படுவதையும் பணியாளர்கள் பார்த்து விக்கித்து போயுள்ளனராம்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

உங்களது கருத்து...

விமான பைலட்டுகள், விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் தெரிவித்த பல கருத்துகளையே இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. இதில், உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் நிச்சயம் பகிர்ந்து

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

விமானப் பயணங்கள் குறித்த அறிந்திராத சுவாரஸ்யங்களை படித்த நீங்கள் நம் நாட்டு பிரதமர் மோடியின் விமானப் பயணம் குறித்த சுவாரஸ்யங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் மற்றும் துணைக் குடியரசு தலைவர் வெளிநாடுகளுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் பிரத்யேக விமானத்தை ஏர் இந்தியா ஒன் என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தும் ஏர் ஃபோர்ஸ் ஒன் போன்றே சகல வசதிகளும் நிறைந்த அதிகாரப்பூர்வ விமானம் இது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

இந்த விமானத்தை இயக்கும் பைலட்டுகள் இந்திய விமானப்படையை சேர்ந்தவர்கள். விமானத்தை வழங்குவதும், அதனை பராமரிக்கும் பொறுப்பும் ஏர் இந்தியா நிறுவனம் கவனித்துக் கொள்கிறது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

இந்த ஏர் இந்தியா ஒன் விமானமானது, பறக்கும் பிரதமர் அலுவலகமாகவே குறிப்பிடலாம். பிரதமர் அலுவலகத்தில் என்னென்ன பணிகள் செய்ய முடியுமோ, அதற்கு இணையான பணிகள், கூட்டங்களை இந்த விமானத்தில் செய்ய முடியும். ஆனால், மோடி பிரதமராக பதவியேற்ற பின் பல சம்பிரதாய நடைமுறைகள் இந்த விமானத்தில் மாறிவிட்டதாம். அவற்றை தொடர்ந்து காணலாம்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

ஏர் இந்தியா ஒன் விமானத்தில் பிரதமர் மற்றும் அவருடன் பயணிப்பவர்களுக்கு மது வழங்கப்படுவதில்லை. ஆனால், அதற்கு முன் இந்த விமானத்தில் உள்ள பாரில் மது பரிமாறும் வழக்கம் இருந்தது. மேலும், உடன் செல்லும் 30 பத்திரிக்கையாளர்கள் வரை மது வழங்கும் நடைமுறை இருந்ததாம்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

பிரதமருடன் பயணிக்கும் அதிகாரிகள் முன்பு ரிலாக்ஸ் செய்து கொள்வதை வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த வழக்கமும் மாறிவிட்டது. பிரதமர் சுற்றுப்பயணத்தின்போது தேவைப்படும் கோப்புகளை தயாரிப்பதிலும், அப்படி இல்லையென்றால் தூங்கி பொழுதை கழிக்க வேண்டிய நிலை தற்போது அதிகாரிகளுக்கு உள்ளது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

இந்த ஏர் இந்தியா ஒன் விமானத்தில் அலுவலகப் பணிகள் தவிர்த்து பிரதமர் தூங்குவதற்காக தனி படுக்கையறை உள்ளது. விமானத்திலேயே நீண்ட நேரம் பயணிப்பதால், பிரதமர் தூங்குவதற்காக இந்த ஏற்பாடு. மேலும், பிற நாடுகளுக்கு செல்லும்போது அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், விமானத்தில் ஓய்வெடுப்பது வழக்கம். ஆனால்...

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

பிரதமர் மோடி விமானத்தில் தூங்குவதை பெரும்பாலும் விரும்புவதில்லையாம். ஆம், சமீபத்தில் பன்னாட்டு சுற்றுப்பயணத்தின்போது பெரும்பாலான நேரம் வரை அவர் தூங்காமல் இருந்ததாக பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

பிரதமர் மோடி சைவம். அதுவும் மிக எளிமையான சைவ உணவையே விரும்புவாராம். விரத நாட்களில் விரதம் முடிந்தவுடன் பழங்களை மட்டுமே சாப்பிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

இந்த விமானம் மூன்று பிரிவுகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அமைச்சர்கள், உயரதிகாரிகள் செல்வதற்கு முதல் வகுப்பு படுக்கைகளும், கீழ் தளத்தில் பிரதமருக்கான படுக்கையறையும், பின்புறத்தில் பாதுகாப்புப் படையினர், பணியாளர்களுக்கான இருக்கைகளும் உள்ளன. இந்த விமானத்தில் பத்திரிக்கையாளர்களுக்காக 34 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளும் உண்டு.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

ஏர் இந்தியா ஒன் விமானங்களை இயக்குவதற்காக விசேஷ பயிற்சியளிக்கப்பட்ட 8 பைலட்டுகள் எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, விமான பணியாளர்கள் குழுவும் தயார் நிலையில் இருப்பர்.

விமானப் பயணம் பற்றி வெளியில் தெரியாத சுவாரஸ்ய ரகசியங்கள்!

விமான பாதுகாப்பு தேசிய சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. விமானத்தில் நிரப்பப்படும் தண்ணீர், பெட்ரோல் ஆகியவை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும். இந்த விமானத்தில் ஏவுகணைகள் தாக்க வருவதை எச்சரிக்கும் கருவிகள், ஏவுகணைகளின் கண்ணில் மண்ணை தூவி திசை மாற்றும் வெப்ப உமிழ்வு கருவிகள் உள்ளன. பிரதமரின் படுக்கையறைக்கு வெளியே செயற்கைகோள் தொலைபேசி வசதியும் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 5, 2018, 13:45 [IST]
English summary
Interesting Deatails About Airport Runway Markings.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+