உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ380 பற்றிய நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யங்கள்!

Written By:

பெரிய ரக விமான மார்க்கெட்டில் கோலோய்ச்சும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் மார்க்கெட்டை உடைக்க ஐரோப்பாவை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் எடுத்துக் கொண்ட சிரத்தையில் உருவானதுதான் ஏர்பஸ் ஏ380 விமானம்.

சொகுசையும், இடவசதியிலும் வழங்குவதில் நிகரில்லாத அம்சங்களுடன் இந்த விமானத்தின் வடிவமைப்புப் பணிகளை 1985ம் ஆண்டு துவங்கியது ஏர்பஸ். 1990களில் உலகின் மிகப்பெரிய இந்த இரண்டடுக்கு விமானத்தை தயாரிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டது.

இந்த விமானம் முதல்முறையாக பறந்து முதல் தசாப்தத்தை பூர்த்தி செய்திருக்கும் இவ்வேளையில், இந்த இரண்டடுக்கு விமானத்தில் பயணிப்பதை கனவாக கொண்டிருப்பவர்களுக்காக சிறப்புத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

அறிமுகம்

அறிமுகம்

2005ம் ஆண்டு ஏப்ரல் 27ந் தேதி இந்த விமானம் முதல்முறையாக பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூலமாக வர்த்தக சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பறக்கும் யானை...

பறக்கும் யானை...

இந்த விமானம் 72.7 மீட்டர் நீளமும், 79.75 மீட்டர் அகலமும், 24.09 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த இரண்டடுக்கு விமானத்தில் முதன்மையான தரை தளம் 49.90 மீட்டர் நீளமும், மேல் தளம் 44.93 மீட்டர் நீளமும் கொண்டது. தோராயமாக 590 டன் எடை கொண்டது. போயிங் 747 விமானத்தை விட இதன் இறக்கை 54 சதவீதம் கூடுதல் நீளம் கொண்டது. இதனை பறக்கும் யானை என்று செல்லமாக அழைக்கின்றனர்.

 இதுதான் பெரியதா?

இதுதான் பெரியதா?

இது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம். அதேநேரத்தில், இதைவிட நீளமான விமானம் ரஷ்யாவின் அன்டோனோவ் ஏஎன்-225 என்ற விமானம். ஆனால், அது சரக்கு விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

இந்த விமானத்தில் 3,000 சூட்கேஸ்களையும், 525 பயணிகளையும் சுமந்து கொண்டு பறக்கும் வல்லமை கொண்டிருக்கிறது. ஆனால், அதிகபட்சமாக இந்த ஏர்பஸ் ஏ380யில் ஒரே நேரத்தில் 800 பேர் பயணிக்க முடியும். இது எக்கானமிக் கிளாஸ் என்று கூறப்படும் சாதாரண வகுப்பு. அதுவே, 3 நட்சத்திர இருக்கை அமைப்பாக இருந்தால் 550 முதல் 600 பேர் செல்ல முடியும்.

 4 மில்லியன் உதிரிபாகங்கள்

4 மில்லியன் உதிரிபாகங்கள்

இந்த விமானம் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டது. இந்த விமானத்தில் 8,000 போல்ட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறியதும், பெரியதுமாக 40 லட்சம் உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுகிறது. 30 நாடுகளை சேர்ந்த 1,500 சப்ளையர்கள் இந்த விமானத்திற்கான உதிரிபாகங்களை சப்ளை செய்கின்றன. இந்த விமானத்திற்கான எஞ்சின்கள் இங்கிலாந்திலும், ஃபியூசிலேஜ் எனப்படும் உடற்கூடு பாகங்கள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இந்த விமானத்தில் 514 கிமீ நீளம் கொண்ட மின் வயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த விமானம் டர்போஃபேன் வகையிலான 4 எஞ்சின்கள் கொண்டது. வாங்கும் நிறுவனத்தின் விருப்படி, ரோல்ஸ்ராய்ஸ் ட்ரெண்ட் 900 அல்லது எஞ்சின் அலையன்ஸ் நிறுவனத்தின் ஜிபி7000 என்ற எஞ்சின்களை பொருத்தி வாங்க முடியும். தரையில் இயக்கும்போது இரண்டு எஞ்சின்கள் மட்டுமே செயல்படும். மீதமுள்ள இரு எஞ்சின்கள் ஐட்லிங்கில் இருக்கும். ஒரு எஞ்சின் மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் அளவுக்கு நீளமும், 4 மடங்கு கூடுதல் எடையும் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கலப்பு உலோக பாகங்கள்

கலப்பு உலோக பாகங்கள்

இந்த விமானத்தின் பல பாகங்கள் உறுதிமிக்க கலப்பு உலோகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சப்த தடுப்பு வசதியுடன் கட்டமைக்கப்பட்டிருப்பதால், பயணிகளுக்கு புதிய பயண அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 1,025 கிமீ வேகம் வரை பறக்கக்கூடிய வலிமை கொண்டது. அதிகபட்சமாக 43,000 அடி உயரத்தில் பறந்து செல்லும். ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பிய நிலையில், இடைநில்லாமல் 15,700 கிமீ தூரம் பறந்து செல்லும்.

ஓடுபாதை

ஓடுபாதை

இந்த விமானத்திற்கு விசேஷ ஓடுபாதைகள் தேவைப்படும். உலகிலேயே 21 விமான நிலையங்கள்தான் இந்த விமானத்தை தரையிறக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கிறதாம். இந்த விமானத்தை பெங்களூர், டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மட்டுமே இந்த தரையிறக்க முடியுமாம். இந்தியாவில் உள்ள மேற்கண்ட 4 விமான நிலையங்களில் இதுபோன்ற சூப்பர் ஜம்போ ரக விமானங்கள் வந்து செல்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவாம்.

ஏவியோனிக்ஸ் சிஸ்டம்

ஏவியோனிக்ஸ் சிஸ்டம்

இந்த விமானத்திற்கு தேல்ஸ் குழுமம் ஏவியோனிக்ஸ் சிஸ்டத்தை தயாரித்து வழங்குகிறது. லாக்ஹீட் மார்ட்டின் எஃப்22 ராப்டர், டஸ்ஸால்ட் ரஃபேல் போன்ற போர் விமானங்களில் இருப்பது போன்ற நவீன கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டது. இதனால், இந்த பிரம்மாண்ட விமானத்தை இரண்டே விமானிகள் மூலம் இயக்க முடியும்.

எரிபொருள்

எரிபொருள்

இந்த விமானத்தில் 3.20 லட்சம் லிட்டர் விமான பெட்ரோலை நிரப்புவதற்கான எரிபொருள் டேங்க் உள்ளது. மேலும், ஒரு பயணி 100 கிமீ பயணிப்பதற்கு வெறும் 2.9 லிட்டர் மட்டுமே செலவாகும் என்று ஏர்பஸ் தெரிவிக்கிறது. மேலும், மற்ற பெரிய விமானங்களைவிட 17 சதவீதம் அளவுக்கு குறைவான எரிபொருள் செலவு கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதனை பிற விமான தயாரிப்பு நிறுவனங்கள் தவறான தகவல் என்று சர்ச்சையை கிளப்பின.

 பணியாளர்கள்

பணியாளர்கள்

இந்த விமானத்தில் 21 பணியாளர்கள் இருப்பர். அவர்கள் ஓய்வு எடுப்பதற்கான படுக்கை வசதிகளும் இந்த விமானத்தில் உள்ளன. அதேபோன்று, நீண்ட தூர பயணங்களின்போது பைலட்டுகள் தூங்கி ஓய்வெடுப்பதற்கு காக்பிட் பின்புறம் படுக்கை வசதி செய்யப்பட்டிருக்கிறது.

கேமரா வசதி

கேமரா வசதி

விமானத்தின் மூக்குப் பகுதி, சக்கரங்கள் மற்றும் வால் பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், பயணிகளுக்கு எதிரே இருக்கும் திரையில் விமானத்தின் நகர்வுகளை பார்த்து ரசிக்க முடியும்.

விசேஷ கட்டுப்பாடுகள்

விசேஷ கட்டுப்பாடுகள்

முன்னால் செல்லும் விமானம் மேலே எழும்பிய பின்னர் 2 நிமிடங்கள் கழித்து, அடுத்த விமானம் அதே தடத்தில் சென்று மேலே எழும்பலாம் என்ற விதியுள்ளது. ஆனால், ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு மட்டும், 3 நிமிடம் கழித்தே அடுத்த விமானம் மேலே ஏற அனுமதிக்கப்படும்.

விலை மதிப்பு

விலை மதிப்பு

ஒரு ஏர்பஸ் ஏ380 விமானம் 2,733 கோடி விலை மதிப்பு கொண்டது.

ப்ளாப் மாடல்

ப்ளாப் மாடல்

இத்தனை சிறப்புகளை கொண்டிருந்தாலும், இதனை ஒரு தோல்வியான விமான மாடலாக தெரிவிக்கின்றனர். ஏர்பஸ் நிறுவனம் இதன் வர்த்தக வாய்ப்புகளை தவறாக கணித்து தயாரித்து விட்டதாக கூறுகின்றனர். ஏனெனில், இது நீண்ட தூரத்திற்கு மட்டுமே, பயன்படுத்தும் வகையிலான மாடலாக இருப்பதே இதற்கு தோல்வியை தந்துள்ளது. இது வர்த்தக ரீதியில் வெற்றி பெறவில்லை. இதுவரை 1,500 விமானங்களை விற்பனை செய்திருக்க ஏர்பஸ் இலக்கு வைத்திருந்தது. ஆனால், இதுவரை 315 விமானங்களை மட்டுமே ஆர்டர் பெறப்பட்டு, 165 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

உற்பத்தியை நிறுத்த முடிவு?

உற்பத்தியை நிறுத்த முடிவு?

வரும் 2018ம் ஆண்டுடன் உற்பத்தியை நிறுத்தவும் ஏர்பஸ் முடிவு செய்திருக்கிறதாம். போயிங் நிறுவனத்திற்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஏர்பஸ் விமானத்திற்கு, ஒரு போயிங் விமானம்தான் போட்டியாக இருக்கிறது. அது எந்த மாடல் தெரியுமா?

 போயிங் விமானம்

போயிங் விமானம்

ஏர்பஸ் ஏ380 விமானத்திற்கு நேர் போட்டியாளரான விமானம் போயிங் 787 மாடல். இந்த விமானத்திற்கு ஆர்டர்கள் அதிகம் குவிந்து வருகிறதாம். அந்த விமானம் பற்றி வேறு ஒரு சிறப்புச் செய்தியில் படிக்கலாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Details About Airbus A380 Jumbo Plane.
Story first published: Friday, June 5, 2015, 15:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark