ரிட்டயர்டு ரவுடி புகாட்டி வேரானுக்கு பதிலியாக களத்தில் குதிக்கும் புகாட்டி சிரான்...!!

By Saravana

உலகின் அதிவேக கார் என்ற பெருமைக்குரிய புகாட்டி வேரான் கார் இலக்கு வைக்கப்பட்ட விற்பனை எண்ணிக்கையை தொட்டுவிட்டது. இதையடுத்து, அந்த மாடலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, அதைவிட அதிக செயல்திறனும், சக்தியும் கொண்ட ஒரு புதிய மாடலை புகாட்டி நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புகாட்டி சிரான் என்ற பெயரில் அழைக்கப்படும், இந்த காரை பற்றிய தகவல்களின் வருகையை ஆட்டோமொபைல் உலகம் கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த நிலையில், இந்த காரின் தொழில்நுட்ப மற்றும் விலை பற்றிய சில விபரங்கள் புகாட்டி வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளன.

புகாட்டி வேரான் காருக்கு கிடைத்த உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமையை தக்க வைக்கும் விதத்தில், அதைவிட விஞ்சிய அதிவேக சாதனையை புதிய புகாட்டி சிரான் படைக்குமா என்ற எதிர்பார்ப்பும், ஆவலுமாக காத்துக்கிடக்கிறது ஆட்டோமொபைல் உலகம். இந்த கார் பற்றிய சில சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தகுதியுடையவர்களுக்கு தரிசனம்...

தகுதியுடையவர்களுக்கு தரிசனம்...

பிரான்ஸ் நாட்டின் மோல்ஷெய்ம் நகரில் உள்ள புகாட்டி தலைமையகத்தில், தகுதியுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய புகாட்டி சிரான் கார் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் புகாட்டி பிராண்டை மீட்டெழ வைத்த, புகாட்டியின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் முன்னாள் தலைவர் பெர்டினான்ட் பெச்சும் ஒருவர். இவரிடம் ஏற்கனவே இரண்டு புகாட்டி வேரான் கார்கள் உள்ளன.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

புகாட்டி வேரான் கார் உருவாக்கப்பட்ட அதே கார்பன் ஃபைபர் கட்டமைப்பில்தான் இந்த புதிய கார் உருவாகியுள்ளது. ஆனால், இலகு எடை கொண்ட ஹைப்பர் கார் மாடலாக புகாட்டி சிரான் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அதேசமயம், வெறும் 8 சதவீத பாகங்கள் மட்டுமே, புதிய சிரான் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்திலும் சிறப்பான மாற்றங்களையும், கூடுதல் தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கும். குறிப்பாக, வெளிப்புறத்தை ஓட்டுனர் தெளிவாக பார்ப்பதற்கு ஏதுவாக டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதாம்.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

புகாட்டி வேரான் காரின் 8.0 லிட்டர் டபிள்யூ-16 எஞ்சின்தான் புகாட்டி சிரான் காரிலும் தொடர்கிறது. ஆனால், கூடுதலாக எலக்ட்ரிக் மோட்டார்களை கொடுத்து, சிரான் காரின் அதிகபட்ச பவர் வெளிப்படுத்தும் திறன் வெகுவாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ்தான், ஆனால், விரைவான செயல்திறன் கொண்டதாக இருக்கும். அத்துடன், 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வருகிறது.

 எஞ்சின் பவர்

எஞ்சின் பவர்

புகாட்டி வேரான் கார் அதிகபட்சமாக 1000 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்த நிலையில், இந்த புதிய சிரான் கார் 1,480 பிஎச்பி பவரை அதிகபட்சமாக வாரி வழங்க கூடியதாக இருக்கும். இதுதான் ஆட்டோமொபைல் மீடியாக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

0 - 100 கிமீ வேகத்தை 2.3 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டதாக வருகிறது. அதிகபட்சமாக மணிக்கு 463 கிமீ வேகம் வரை செல்லக்கூடியதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புகாட்டி வேரான் காரைவிட மணிக்கு 29 கிமீ வரை கூடுதல் வேகம் கொண்ட மாடலாக இருக்கும்.

எண்ணிக்கை

எண்ணிக்கை

மொத்தமாக 450 புகாட்டி வேரான் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேவேளை, கூடுதல் விற்பனை எண்ணிக்கையுடன் புகாட்டி சிரான் வருகிறது. மொத்தம் 500 புகாட்டி சிரான் கார்களை விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டிருக்கிறது. இது பெரும் பணக்காரர்களுக்கு சற்று சந்தோஷத்தை தரும் விஷயமாக உள்ளது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த புதிய புகாட்டி சிரான் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

வரவேற்பு

வரவேற்பு

ஏற்கனவே புகாட்டி சிரான் கார் இரட்டை இலக்க முன்பதிவு எண்ணிக்கையை பதிவு செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, விற்பனைக்கு வருவதற்கு முன்பே சிறப்பான முன்பதிவு எண்ணிக்கையுடன் களத்தில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

புகாட்டி வேரான் கார் 1.3 மில்லியன் யூரோ விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய புகாட்டி சிரான் கார் 2.2 மில்லியன் யூரோ விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஃபெராரி லாஃபெராரி, மெக்லாரன் பி1, போர்ஷே 918 ஸ்பைடர் ஆகிய கார் ஹைப்பர் கார் மாடல்களுக்கு போட்டியாக கூற முடியும்.

 புகாட்டி வேரான் காரின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்...!!

01. புகாட்டி வேரான் காரின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகள்...!!

More from DriveSpark

Article Published On: Wednesday, September 2, 2015, 15:19 [IST]
English summary
Interesting Details About Bugatti Chiron Hyper Car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+