சர்ச்சை நாயகன் சிம்புவின் 'கனவு கன்னி' யார் தெரியுமா?!

சர்ச்சைகளுக்கும், சிம்புவுக்கும் அப்படியொரு தொடர்பு இருக்கிறது. தொடர் காதல் தோல்விகள், படங்கள் தோல்வி என பல விதங்களிலும் சிம்புவுக்கு நெருக்கடிகள் தொடர்ந்தாலும், அவற்றை பற்றி அலட்டிக் கொள்ளாதவர். பல சர்ச்சைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகும்போது அவருக்கு ஆறுதல் தருவது அவரது கார்தான்.

ஏனெனில், தனது காரை கனவு கன்னியாக அவர் வர்ணித்து வருகிறார். கனவுக் கன்னியை நினைத்தால் எல்லோருக்கும் உற்சாகம் பீறிடும். அதுபோல்தான், தனது காரில் ஒரு ரவுண்டு போய் வந்தால், அவருக்கு புதிய உற்சாகம் பிறந்துவிடுமாம். தன்னை ஏமாற்றாத உண்மையான காதலியாக அவர் விரும்பும், அந்த காரை பற்றிய விபரங்களை இப்போது ஸ்லைடரில் காணலாம்.

 பிஎம்டபிள்யூ கார்

பிஎம்டபிள்யூ கார்

நடிகர் சிம்புவின் நீண்ட நாள் கனவையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதாக இருந்த மாடலாக பிஎம்டபிள்யூ எக்ஸ்6 கார் அமைந்தது. உடனே புக்கிங் செய்து அந்த காரை காத்திருந்து வாங்கிய அந்த கார் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெஹிக்கிள் என்ற ரகத்தில் பிஎம்டபிள்யூ குறிப்பிடுகிறது.

 வித்தியாசமான டிசைன்

வித்தியாசமான டிசைன்

பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 காரின் டிசைன் மிகவும் வித்தியாசமாகவும், தனித்துவம் மிக்கதாகவும் இருக்கும். அதுவே, சிம்புவை கவர்ந்துவிட்டது. மேலும், எங்கு சென்றாலும் தன்னை தனித்து அடையாளப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில்தான் இந்த காரை அவர் வாங்கினார்.

அறிமுகம்

அறிமுகம்

2007ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. 2008ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் வந்தது அறிந்தவுடன், சிம்பு இந்த காரை முன்பதிவு செய்துவிட்டார்.

 டெலிவிரி

டெலிவிரி

கடந்த 2009ம் ஆண்டு பிற்பகுதியில் இந்த காரை சிம்பு டெலிவிரி பெற்றிருக்கிறார். வெள்ளை நிற பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 காரை அவர் வாங்கினார். இந்த கார் வாங்கியதன் மூலமாக நீண்ட நாளாக இருந்த சொகுசு கார் கனவு நிறைவேறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்ட சொகுசு கார் மாடல். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்ற சிறப்பம்சங்கள் கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

நடிகர் சிம்பு வைத்திருக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 காரின் 3.0டீ மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட 2993சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 241 பிஎச்பி பவரையும், 540 என்எம் டார்க்கையும் வழங்க வல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

குட்டி யானை

குட்டி யானை

2,110 கிலோ எடை கொண்ட இந்த காரின் டர்னிங் ரேடியஸ் 12 மீட்டர்கள். இந்த காரில் 85 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 570லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் உள்ளது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

0- 100 கிமீ வேகத்தை 7.3 வினாடிகளில் தொட்டுவிடும். அதிகபட்சமாக மணிக்கு 209 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

வடிவம்

வடிவம்

இந்த பிரம்மாண்ட கார் 4,877மிமீ நீளமும், 2,195மிமீ அகலமும் கொண்டது. 2,933மிமீ வீல் பேஸ் இருப்பதால் உட்புறத்தில் மிகச்சிறப்பான இடவசதியை கொண்டிருக்கிறது.

விலை

விலை

ஆன்ரோடு விலை, பதிவுக் கட்டணம் என அனைத்தையும் சேர்த்து ஒரு கோடி மதிப்பில் இந்த காரை சிம்பு வாங்கினார்.

சிம்புவின் பழைய கார்

சிம்புவின் பழைய கார்

பிஎம்டபிள்யூ எக்ஸ்-6 கார் வாங்குவதற்கு முன்பு நடிகர் சிம்பு ஃபோர்டு மான்டியோ காரையே பயன்படுத்தி வந்தார். சென்னையிலுள்ள ஒரு பிரபல ஓட்டலிலிருந்து அந்த கார் திருடு போனதாக ஒரு பெரும் பரபரப்பு ஏற்பட்டதும் நினைவிருக்கலாம்.

அனிருத்தும் கார் பிரியர்

அனிருத்தும் கார் பிரியர்

சிம்புவின் காரை பற்றி சொல்லிவிட்டு, அனிருத்தை பற்றி சொல்லாமல் விட்டால் சரியாக வருமா என்ன? அனிருத்தும் கார் காதலர்தான். அவரின் கார் காதலுக்கு ஒரு சம்பவத்தை கூட மீண்டும் இங்கே நினைவுகூர்கிறோம்.

ஃபெராரி கனவு

ஃபெராரி கனவு

டீன்- ஏஜ்களின் நாடித்துடிப்பை எகிறச் செய்யும் இசைக் கோர்வைகளை தொடர்ந்து வழங்கி ரசிகர்களிடையே புதிய பிரபலமாக உருவெடுத்திருக்கும் அனிருத், ஃபெராரி கார் பிரியர்.

 கலிஃபோர்னியாவில் கலக்கல்

கலிஃபோர்னியாவில் கலக்கல்

கத்தி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கு சென்றார் அனிருத். அப்போது, தனது நீண்ட நாள் ஆசையான ஃபெராரி காரை ஓட்டி ஆசையை தீர்த்துக் கொண்டார்.

ஆசையை தீர்த்த தருணம்...

ஆசையை தீர்த்த தருணம்...

ஃபெராரி கலிஃபோர்னியா காரை வாடகைக்கு எடுத்து அவர் ஓட்டினார். அத்துடன், அந்த தருணத்தை தனது ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார்.

 ஆக்சுவலா இது மஸராட்டி...

ஆக்சுவலா இது மஸராட்டி...

2008ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. அடிப்படையில் மஸராட்டிக்காக உருவாக்கப்பட்ட கான்செப்ட் மாடல்தான் இது என்றும், உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரிக்கும் என்ற அச்சத்தால், ஃபெராரி பேட்ஜை குத்தி, ஃபியட் குழுமம் வெளியிட்டதாக கருத்துக்கள் எழுந்தன. ஆனால், இதற்கு ஃபியட் குழுமம் மறுப்பு தெரிவித்தது.

பெயர் சர்ச்சை

பெயர் சர்ச்சை

ஃபெராரி கலிஃபோர்னியா பெயர் 1950ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபெராரி 250ஜிடி காரின் கலிஃபோர்னியா பெயரை மீண்டும் இந்த காருக்கு பயன்படுத்தியது ஃபெராரி நிறுவனம். இதனையும் ஃபியட் மறுத்தது.

ஃபேஸ்லிஃப்ட் மாடல்

ஃபேஸ்லிஃப்ட் மாடல்

2012ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் கூடுதல் சக்தியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு பிரத்யேக அம்சங்கள் கொண்ட கலிஃபோர்னியா எச்எஸ் என்ற மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தநிலையில், கடந்த ஆண்டு கலிஃபோர்னியா டி என்ற புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மெட்டல் பாடி, புதிய இன்டிரியர், புதிய சேஸீ மற்றும் டர்போசார்ஜ்டு எஞ்சின் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'முதல்' பெருமைகள்

'முதல்' பெருமைகள்

  • இந்த கார் பல புதிய சிறப்பம்சங்கள் கொண்ட முதல் ஃபெராரி கார் என்ற பெருமைக்குரியது. அவற்றை கீழே காணலாம்.
  • முன்புற எஞ்சின் அமைப்பு
  • 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன்
  • உலோகத்தால் ஆன திறந்து மூடும் கூரை
  • மல்டி- லிங்க் ரியர் சஸ்பென்ஷன்
  • டைரக்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டம்
  • ஏரோடைனமிக்ஸ் சோதனை

    ஏரோடைனமிக்ஸ் சோதனை

    இதன் ஏரோடைனமிக்ஸ் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, இதன் மூன்றில் ஒரு பங்கு அளவு கொண்ட ஸ்கேல் மாடலை 1,000 மணிநேரம் 'விண்ட் டியூனல்' சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஃபெராரி எஃப்- 12 பெர்லினேட்டா அறிமுகம் செய்வதற்கு முன்பு வரை அறிமுகமான ஃபெராரி கார்களிலேயே மிகச்சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்ட காராக இது பெருமை பெற்றது.

    புதிய உற்பத்தி பிரிவு

    புதிய உற்பத்தி பிரிவு

    இத்தாலியின் மரனெல்லோ பகுதியிலுள்ள ஃபெராரி ஆலையையொட்டி, இந்த காருக்காக புதிய உற்பத்தி பிரிவு அமைக்கப்பட்டது.

    எஞ்சின்

    எஞ்சின்

    பாஷ் நிறுவனம் தயாரித்து கொடுத்த டைரக்ட் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய 4,297சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 453பிஎச்பி பவரைும், 485என்எம் டார்க்கையும் வழங்கும். டர்போசார்ஜர், சூப்பர்சார்ஜர் இல்லாமல், 453 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின் மிகச்சிறந்த செயல்திறன் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது.

    பெர்ஃபார்மென்ஸ்

    பெர்ஃபார்மென்ஸ்

    அதிகபட்சமாக மணிக்கு 310கிமீ வேகம் வரை எட்டக்கூடிய திறன் படைத்த இந்த கிரான்ட் டூரிங் ஸ்போர்ட்ஸ் கார் 0- 100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டிவிடும். 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எடை 30 கிலோ வரை குறைக்கப்பட்டதுடன், 30 பிஎஸ் பவரும் கூடுதலாக்கப்பட்டது.

    ரீகால்

    ரீகால்

    எஞ்சின் கிராங்சாஃப்டில் இருந்த பிரச்னையால் எஞ்சின் செயலிழக்கும் அபாயமும், இல்லையெனில் விபத்தில் சிக்கும் அபாயமும் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 2012ம் ஆண்டில் ஃபெராரி கலிஃபோர்னியா கார்கள் திரும்ப அழைக்கப்பட்டன.

    விலை

    விலை

    இந்தியாவிலும் விற்பனையில் இருக்கும் இந்த கார் ரூ.2.20 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    நினைத்தது ஒன்று, நடந்தது வேறு...

    நினைத்தது ஒன்று, நடந்தது வேறு...

    தனுஷின் கொலவெறிக்கு போட்டியாக நினைத்து, பீப் பாடலுடன் இருவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். ஆனால், எது எப்படியிருந்தாலும், அவர்கள் எதிர்பார்த்த பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது. ஆனால், இந்த நெருக்கடியை அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

    டிரைவ்ஸ்பார்க் தமிழ் சமூக வலைதள பக்கங்கள்

    டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் ஃபேஸ்புக் பக்கம்!

    டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் டுவிட்டர் பக்கம்!

Image 5- 10: Source

Most Read Articles
English summary
Actor Simbu's Dream Car BMW X6 - Interesting Details.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X