கருங்கடலில் நீர்மூழ்கி கலனில் பயணித்த ரஷ்ய அதிபர் புதின்!

Written By:

ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதின் ஓர் சாகச விரும்பி. கடந்த ஆண்டு ஸ்கூபா டைவிங் மற்றும் நீர்மூழ்கி படகில் பயணித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது மீண்டும் ஒரு சாகச பயணத்தை மேற்கொண்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

உக்ரைன் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு ரஷ்யாவுடன் இணைந்த சர்ச்சைக்குரிய கிரீமியா கடற்பகுதியில் 9ம் நூற்றாண்டில் மூழ்கி கடலுக்கடியில் இருக்கும் கப்பல் ஒன்றினை பார்ப்பதற்காக, அவர் நீர்மூழ்கி படகு ஒன்றில் சாகச பயணம் சென்று திரும்பியுள்ளார். அவர் பயன்படுத்திய அதிநவீன படகு குறித்து சில சுவாரஸ்யத் தகவல்களை காணலாம்.

சர்ச்சைக்குரிய பிராந்தியம்

சர்ச்சைக்குரிய பிராந்தியம்

கிரமீயா கடற்பகுதியில் 9ம் நூற்றாண்டில் மூழ்கிய வியாபார கப்பலை பார்ப்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 83 மீட்டர் ஆழத்தில் அந்த கப்பல் மூழ்கி கிடக்கிறது. கடந்த மே மாதம்தான் இந்த மூழ்கிய கப்பலை ரஷ்ய நீர்மூழ்கி வீரர்கள் குழு ஒன்று கண்டறிந்தது.

 சுற்றுலா வளர்ச்சி

சுற்றுலா வளர்ச்சி

இந்த சாகசப் பயண நோக்கம் குறித்து அவர் குறிப்பிடுகையில், பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் கிரீமியாவின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயணத்ததை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

நீர்மூழ்கி பயணம்

நீர்மூழ்கி பயணம்

பல்வேறு ஆபத்துக்களுக்கு மத்தியில் அவர் நம்பி சென்றது யூ- போட் ஒர்க்ஸ் என்ற நீர்மூழ்கி படகுதான். மிகுந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. நவீன தொழில்நுட்ப அம்சங்கள் பொருந்திய இந்த நீர்மூழ்கி படகு குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பயன்பாடு

பயன்பாடு

சி- எக்ஸ்ப்ளோரர்ஸ், சூப்பர் யாட் சப்-3 மற்றும் சி- ரிசர்ச்சர்ஸ் ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கானதாகவும், ஆடம்பர படகில் வைத்து எடுத்துச் செல்வதற்கானதாகவும், மூன்றாவது கடலடி ஆராய்ச்சியாளர்களுக்கானதாகவும் பிரத்யேக அம்சங்களை கொண்டிருக்கும்.

கண்ணாடி கூண்டு

கண்ணாடி கூண்டு

கடலுக்குள் சாகச பயணங்களை விரும்புவோர்க்கு ஏதுவான பல சிறப்பம்ங்களை உடையது இந்த யூ- போட் ஒர்க்ஸ் நீர்மூழ்கி படகு. வெளிப்புறத்தை தெளிவாக பார்க்கும் விதத்தில், உயர் வகை கண்ணாடி கூண்டு மேற்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நீர்மூழ்கி நேரம்

நீர்மூழ்கி நேரம்

கடலுக்கு அடியில் 16 மணிநேரம் வரை இந்த நீர்மூழ்கி படகு இருக்க முடியும். பயணிப்போர்க்கு தேவையான ஆக்சிஜன், இயக்குவதற்கு தேவையான எரிபொருள் இருப்பு ஆகியவை 16 மணிநேரம் வரை தாக்கு பிடிக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த நீர்மூழ்கி படகில் மூன்று பேர் அமர்வதற்கான இருக்கை அமைப்பு உள்ளது. மேலும், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான அதிசக்திவாய்ந்த ஒளி உமிழ் விளக்குகள், உயர்துல்லிய கேமராக்கள், மேக்னட்டோ மீட்டர் போன்ற பல உபகரணங்களை இதில் வைத்து எடுத்துச் செல்வதற்கான வசதியும் உள்ளது.

 வேகம்

வேகம்

கடலுக்கடியில் 3 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும். லெதர் இருக்கைகள், சிறந்த ஏர்கண்டிஷன் சிஸ்டம் போன்றவை கூடுதல் சிறப்பம்சங்களாக இருக்கின்றன.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Details About U Boat Worx Submersible.
Story first published: Thursday, August 20, 2015, 12:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark