19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

உலகின் மிக நீண்ட தூரம் இடைநில்லாமல் பயணித்து புதிய சாதனையை படைத்துள்ளது காந்தாஸ் நிறுவன்ததின் போயிங் 787-9 விமானம். இந்த நீண்ட நேர பயணம் குறித்தும், விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்தும் சுவாரஸ்யமானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட தொலை தூரத்தில் உள்ள மேலை நாடுகளுக்கான விமான பயண நேரத்தை குறைப்பதற்கான முயற்சிகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த காந்தாஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. 'புரொஜெக்ட் சன்ரைஸ்' என்ற பெயரில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

இதற்கான முதல்கட்ட சோதனைகளை அந்நிறுவனம் துவங்கி இருக்கிறது. அதன்படி, அமெரிக்காவிலுள்ள நியூயார்க நகரிலிருந்து, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு நேரடி விமானத்தை இயக்க முடிவு செய்தது. இதற்காக, போயிங் நிறுவனத்தின் 787-9 ட்ரீம்லைனர் விமானம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

கடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து இரவு 9.27 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் நேற்று காலை 7.43 மணியளவில் சிட்னி விமான நிலையத்தை அடைந்தது. இந்த விமானம் 19 மணி 16 நிமிடங்கள் பறந்து இந்த பயணத்தை இடைநில்லாமல் பறந்து நிறைவு செய்து சாதனை படைத்தது. அதாவது, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் அளவுக்கு இந்த பயண நேரம் நீண்டது.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

இந்த பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட காந்தாஸ் நிறுவனத்தின் போயிங் 787-9 விமானத்தில் 42 பிசினஸ் வகுப்பு இருக்கைகளும், 28 பிரிமீயம் வகுப்பு இருக்கைகளும், 166 எக்கானமி வகுப்பு இருக்கைகளும் உள்ளன. ஆனால், விமானத்தின் பாதுகாப்பு, எரிபொருள் செலவு உள்ளிட்ட விஷயங்களுக்காக மொத்தமாக 49 பேர் மட்டுமே இந்த விமானத்தில் பயணித்தனர்.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

காந்தாஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலன் ஜாய்ஸ், காந்தாஸ் நிறுவனத்தின் விமானங்களில் அதிகம் பயணிக்கும் 6 பயணிகள், சிறப்பு மருத்துவக் குழுவினர், 6 பேர் கொண்ட பைலட் குழு, 6 விமானப் பணியாளர் குழு மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் இந்த விமானம் பயணித்தது.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

இந்த பயணத்திற்காக புத்தம் புதிய போயிங் 787-9 விமானம் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவிலிருந்து டெலிவிரி எடுக்கப்பட்ட இந்த போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் முதல்முறையாக இந்த பயணத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறது.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விமானத்தில் பாரம் ஏற்றப்படவில்லை. பயணிகளுக்கான உடைமைகளுக்கு கூட அதிக கட்டுப்பாடுகளுடன் பயன்பாட்டிற்கு தேவையானவற்றிற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

இந்த விமானத்தில் 101 டன் எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. அதாவது, 250 டன் எடை கொண்ட இந்த விமானத்தின் எடையில் 40 சதவீதத்திற்கும் மேல் எரிபொருளுடன் இந்த விமானம் பறந்தது. இந்த விமானத்திற்கு சியன் கோல்டிங் கேப்டனாக செயல்பட்டார். பைலட் குழுவினர் ஷிஃப்ட் முறையில் இந்த விமானத்தை இயக்கினர். கூடுதல் எரிபொருள் கலன்கள் பொருத்தப்பட்ட இந்த விமானம் 16,200 கிமீ தூரத்தை 19 மணி 16 நிமிடங்களில் கடந்துள்ளது.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

சாதாரணமாக போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் 14,498 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்டது. தரையிலிருந்து 35,000 முதல் 43,000 அடி உயரத்தில் இயக்க முடியும். இந்த விமானத்தில் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இரண்டு GEnx டர்போஃபேன் ஜெட் எஞ்சின்கள் (GEnx-1B74/75/P2) பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 1,049.58 கிமீ வேகம் வரை இயக்க முடியும்.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

எதிர்காற்று மற்றும் சீதோஷ்ண நிலையை மனதில் வைத்து விமானத்தின் பாதையை தொடர்ந்து மாற்றியமைத்து சிறந்த முறையில் நிறைவு செய்ததாக கேப்டன் சியன் கோல்டிங் குறிப்பிட்டுள்ளார். பயணத்தில் எந்த தடங்கலும் இல்லாமல் சிறப்பாக முடித்ததாக குறிப்பிட்டு பேசினார். விமானத்தில் பயணித்த அனைவருமே பிசினஸ் க்ளாஸ் எனப்படும் உயர் வகுப்பு இருக்கையில் அமர்ந்து பயணித்தனர்.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

இந்த விமானத்தில் பயணித்தவர்களின் மூளையின் செயல்பாடு, மன நிலை, உடல் நிலை குறித்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. அத்துடன், அடுத்த 21 நாட்களுக்கு பயணித்த அனைவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பர். இதன் அடிப்படையில் கிடைக்கும் உடல்நல தரவுகள், இந்த விமான சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு இறுதி முடிவில் எடுத்துக் கொள்ளப்படும்.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

இந்த பயணம் குறித்து காந்தாஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலன் ஜாய்ஸ் கூறுகையில்," இது விமான வரலாற்றில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. நியூயார்க் நகரிலிருந்து சிட்னி நகருக்கு நாங்கள் இயக்கும் ஒரு இடத்தில் நின்று வரும் மற்றொரு விமானம் மூன்று மணிநேரத்திற்கு முன்பாக புறப்பட்டது. ஆனால், அந்த விமானத்தைவிட ஒன்றரை நிமிடங்களுக்கு முன்னதாகவே சிட்னி நகரை எங்களது நேரடி விமானம் அடைந்துவிட்டது," என்று தெரிவித்துள்ளார்.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

அதாவது, மூன்று மணிநேரத்திற்கும் மேலாக பயண நேரம் மிச்சப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் லண்டன், ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிட்னி நகருக்கு இடைநில்லா நேரடி விமானத்தை சோதனை அடிப்படையில் இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விமானம் 17,000 கிமீ தூரத்திற்கு இடைநில்லாமல் 19.5 மணிநேரம் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 மணிநேரம் பறந்த உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா போயிங் விமானத்தின் சிறப்பம்சங்கள்!

சோதனைகள் வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்தால் வரும் 2021ம் ஆண்டு முதல் இந்த நேரடி விமானச் சேவைகளை துவங்குவதற்கு காந்தாஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உலகின் மிக நீண்ட தூர இடைநில்லா விமான சேவையை வழங்கி வருகிறது. சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் நகருக்கு இந்த விமானம் 18 மணி 25 நிமிடங்கள் பறந்து செல்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 21, 2019, 16:18 [IST]
English summary
Here are some interesting things about World's longest non stop plane.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+