டிடிவி.தினகரன் பயன்படுத்தும் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

Written By:

காலங்கள் மாறும்; காட்சிகள் மாறும் என்பதற்கு அதிமுக.,வின் சமீபத்திய நிகழ்வுகள் சிறந்த உதாரணமாக மாறி இருக்கிறது. 'பணமிருந்தால் மார்க்கமுண்டு' என்ற காலத்தில் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நிகழ்வும் காட்டி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த சசிகலாவின் குடும்பத்தினரின் ஆதிக்கம் இப்போது அதிமுக.,வில் கொடி கட்டி பறக்கிறது.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

அதிமுகஅதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு, அவரது வலது கரமாக இருந்த டிடிவி தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக[அம்மா] பிரிவு வேட்பாளராக போட்டியிடுகிறார்.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

டிடிவி தினகரனும் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி என்பது அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனு மூலமாக தெரிய வருகிறது. இந்த நிலையில், பிரச்சாரத்திற்காக அவர் பம்பரமாக சுழன்று வரும் இவ்வேளையில், அவரது ஆஸ்தானமாக பயன்படுத்தும் கார் மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

வட்டம்னா சுமோ, மாவட்டம்னா ஸ்கார்ப்பியோ, எம்எல்ஏ.,ன்னா இன்னோவா, அமைச்சர்னா ஃபார்ச்சூனர் என்ற ரீதியில் இப்போது ட்ரென்ட் இருக்கிறது. ஆனால், பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாகவும், அதிமுக.,வின் துணைப் பொதுச்செயலாளராகவும் இருக்கும் டிடிவி தினகரன் பயன்படுத்தி வரும் கார் எது தெரியுமா?

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

பொதுவாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் டாடா கார்களுக்கு அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில், மன்னார்குடி வகையறாவை சேர்ந்த டிடிவி தினகரன் டாடா மீதான அபிமானத்தில் தொடர்ந்து டாடா சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவியை பயன்படுத்தி வருகிறார். இந்த எஸ்யூவியின் அருமை, பெருமைகளை தொடர்ந்து பார்க்கலாம்.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

பல சொகுசு கார்களில் பயன்படுத்தி உள்ள டிடிவி தினகரனுக்கு, நிமிடத்தில் சொகுசு கார் வாங்கும் தகுதி உண்டு. அவர் சொகுசு கார்களை தவிர்த்து பயன்படுத்தி வருவது டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிதான். அந்த அளவுக்கு டிடிவி தினகரனை இந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி கவர்வதற்கு பல காரணங்களை கூறலாம்.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

பல திரைப்படங்களில் அரசியல்வாதிகளின் ஆஸ்தான கார் மாடலாக பாவிக்கப்பட்ட சஃபாரி எஸ்யூவியின் மேம்பட்ட வடிவம்தான் இந்த சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி. டிசைன், எஞ்சின், வசதிகள் என அனைத்திலும் மேம்படுத்தப்பட்ட மாடல். எஸ்யூவி பிரியர்கள் இதனை ஒரு உண்மையான எஸ்யூவி என்று இதனை குறிப்பிடுவதுண்டு. எனவே, டிடிவி தினகரனும் ஒரு எஸ்யூவி பிரியர் என்பதை அறிய முடிகிறது.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த எஸ்யூவி மாடல் என்ற பெருமை டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு உண்டு. கடந்த 2012ம் ஆண்டு டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2015ம் ஆண்டில் சிறிய மாறுதல்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

டாடா சஃபாரி எஸ்யூவியின் கம்பீரமான தோற்றம் எல்லோருக்கும் பிடித்துப் போகும். மார்க்கெட்டில் இருக்கும் எஸ்யூவி மாடல்கள் மாடர்னாக இருந்தாலும், ஒரு உண்மையான எஸ்யூவிக்குரிய தோற்றத்தை இந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் பெற்றிருக்கிறது.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

அடுத்ததாக, டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் இடவசதி மிகச் சிறப்பானதாக இருக்கிறது. குறிப்பாக முன் வரிசை மற்றும் பின் வரிசை இருக்கை மிகவும் சிறப்பான இடவசதியை கொண்டுள்ளது. மேலும், இந்த எஸ்யூவியில் 7 பேர் பயணிக்க முடியும் என்பதால், ஆதரவாளர்கள், உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்வதற்கு வசதியாக இருக்கும். இந்த எஸ்யூவியின் ஏசி.,யும் மிகச்சிறப்பாக இருக்கிறது.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியில் 150 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் செயல்திறன் மிக அபாரமானதாக இருக்கிறது.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

அடிக்கடி சொந்த ஊருக்கு செல்வதற்கும், தினசரி பயன்பாட்டிற்கும் இந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியின் எஞ்சின் மிகச் சிறப்பானதாக இருக்கிறது. லிட்டருக்கு 14.1 கிமீ மைலேஜை வழங்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், நடைமுறையில் லிட்டருக்கு 10 கிமீ மைலேஜிற்கு குறையாமல் வழங்கும்.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

இந்த எஸ்யூவியின் மிக பிரத்யேகமான சஸ்பென்ஷன் அமைப்பும் மிக சொகுசான பயணங்களை வழங்கும். கரடுமுரடான சாலைகளில் கூட மிகச் சிறப்பான பயண அனுபவத்தை வழங்குகிறது. இதுவும் டிடிவி தினகரனுக்கு பிடித்துப் போய் இருக்கலாம்.

 டிடிவி.தினகரனின் ஆஸ்தான கார் மாடல் பற்றிய விபரம்!

இதுவரை திரைமறைவு அரசியலில் ஈடுபட்டு வந்த டிடிவி தினகரன் இப்போது நேரடியாக பொது வாழ்க்கையில் தீவிரமாக களமிறங்கி உள்ளார். ஏற்கனவே வெளிநாட்டிலிருந்து சொகுசு கார் இறக்குமதி செய்த வழக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு இருக்கிறது. எனவே, இந்த கரைகளை மறைக்கவும், எளிமையான மனிதராக மக்கள் மனதில் இடம்பெறவும் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியை தொடர்ந்து பயன்படுத்துவதாக கருதப்படுகிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Details Of TTV Dinakarn's Tata Safari Storme SUV. Read in Tamil.
Story first published: Tuesday, March 28, 2017, 12:38 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark