விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

விமான டயர் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் டயர் பஞ்சராவது, டயர் வெடித்து விபத்து ஏற்படுவது குறித்து அடிக்கடி செய்திகளை பார்க்கிறோம். ஆனால், கிட்டத்தட்ட 500 டன் எடையுடன், 250 கிமீ வேகத்தில் வந்து இறங்கும் ஏர்பஸ் ஏ380, போயிங் 777 போன்ற பிரம்மாண்ட பயணிகள் விமானங்களில் பொருத்தப்படும் டயர்கள் பிரச்னை தருவது குறித்த செய்திகள் மிக அரிதானதாகவே உள்ளது. இதற்கான காரணங்களை இந்த செய்தியில் காணலாம்.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

கார்களுக்கான டயர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அதே ரப்பர்தான் விமான டயர்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவை உயர்தர கட்டுமானத்தின் மூலமாக மிக அதிக எடையை தாங்கும் வலுவை பெற்றிருக்கின்றன.

விமான டயர்களின் வெளிப்புற சுவர் மிகவும் தடிமனாகவும், வலு வாய்ந்ததாகவும் இருக்கிறது. பல அடுக்குகளாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் மற்றுமொரு விந்தை இருக்கிறது. பொதுவாக டிரக்குகளில் 40 அங்குல விட்டமும், 20 அங்குல அகலமும் கொண்ட டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

ஆனால், போயிங் 737 விமானத்தில் பொருத்தப்படும் டயர்கள் 7.75 அங்குலம் அகலம் கொண்டதாகவும், 27 அங்குலம் விட்டமுடையதாகவும் இருக்கின்றன. இவை 15 அங்குல சக்கரங்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அதாவது, டிரக்குகளில் பயன்படுத்தப்படும் டயர்களைவிட அளவு மிக குறைவு.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

அதேநேரத்தில், விமான டயர்களில் பயன்படுத்தப்படும் நைலான், சிந்தெட்டிக் பாலிமர் மற்றும் ட்ரெட்டுகள் அதிக வலு கொண்டதாகவும், எளிமையான ட்ரெட் வடிவமைப்பையும் பெற்றிருக்கின்றன.

Trending On Drivespark Tamil:

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

விமானத்தில் பொருத்தப்படும் ஒவ்வொரு டயரும் 38 டன் எடை தாங்கும் வலிமையை பெற்றிருக்கின்றன. சர்வதேச விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பின் விதிமுறைகளின்படி, இந்த டயர்கள் மணிக்கு 288 மைல் வேகத்தில் விமானம் இறங்கினாலும் அதனை தாங்கும் வலிமை கொண்டதாக இருக்க வேண்டும்.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

விமான டயர்கள் அதிவேகத்தில் ஏறும்போதும், இறங்கும்போது பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வெயில், மழை, பனி என பல்வேறு கால நிலைகளையும் தாங்கும் திறன் பெற்றவை.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

ஒவ்வொரு வர்த்தக பயன்பாட்டு விமானத்தில் பொருத்தப்படும் டயர்கள் 500 முறை வரை தரை இறங்கும் வல்லமையை பெற்றிருக்கின்றன. அதன் பிறகு ரீ-ட்ரெட் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். இதுபோன்று ஒரு விமான டயர் 7 முறை ரீ-ட்ரெட் செய்து பயன்படுத்த முடியும்.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

காற்றழுத்த வேறுபாட்டால் சில வேளைகளில் விமான டயர்கள் வெடிப்பதுண்டு. ஆனாலும், ஒரு டயர் பஞ்சரானாலும் பிற டயர்களின் வலுவில் விமானத்தை பத்திரமாக தரை இறக்கிவிடலாம். ஏர்பஸ் ஏ380 விமானத்தில் 22 டயர்களும், போயிங் 777 விமானத்தில் 14 டயர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், அதிக நிலைத்தன்மையோடு விமானம் தரை இறங்க முடிகிறது.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

விமான டயர்களில் காற்றழுத்தம் 200 பிஎஸ்ஐ அளவுக்கு வைக்கப்படுகிறது. கார்களைவிட இது 6 மடங்கு அதிகம். மேலும், இந்த காற்றழுத்தத்தைவிட 4 மடங்கு கூடுதல் காற்றழுத்தத்தை தாங்கும் வலிமையுடன் விமான டயர்கள் தயாரிக்கப்படுகின்றன.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

இதனால், டயர்கள் அதிக வலுவையும், எடை தாங்கும் திறனையும் பெற்றிருக்கின்றன. எஃப்-16 போன்ற போர் விமானங்களில் 320 பிஎஸ்ஐ அளவுக்கு காற்றழுத்தம் வைக்கப்படுகிறது. இதனால், டயர்களின் வலு வெகுவாக அதிகரிக்கிறது.

Trending On Drivespark Tamil:

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

விமானம் இறங்கும்போது டயர்கள் தரையை தொடும்போது உடனே சுழல்வதில்லை. டயர்கள் சறுக்கியபடி, தேய்த்துக்கொண்டு நகரும். பின்னர்தான் விமானத்தின் வேகத்திற்கு இணையாக சுழல ஆரம்பிக்கும். இதனால்தான் விமானங்கள் தரை இறங்கும்போது புகை மற்றும் தூசுகள் வெளிப்படுகின்றன.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

பொதுவாக விமான டயர்களில் நைட்ரஜன் வாயுதான் நிரப்பப்பட்டிருக்கும். இதற்கு காரணம், சாதாரண காற்றில் சிறிதளவு ஈரப்பதம் இருக்கும். குளிர்காலங்களில் டயருக்குள் காற்றில் ஈரப்பதம் பனித்திவளைகளாகவும், கட்டியாகவும் மாறி டயருக்குள் காற்றழுத்தத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தும். இதனால், டயர் வெடிக்கும் ஆபத்து உண்டு.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

அதேநேரத்தில், காற்றில் 70 சதவீதம் நைட்ரஜன் இருந்தாலும், தூய நைட்ரஜனில் ஈரப்பதம் என்பதே இல்லை. மேலும், மைனஸ் 173செல்சியஸ் வரை திரவமாக மாறும் பண்பை கொண்டிருப்பதும் இதற்கு காரணம்.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

மேலும், சாதாரண காற்றில் ஆக்சிஜனும் இருப்பதால், பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் சூடாகி, டயரில் இருக்கும் ஆக்சிஜன் மூலமாக எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. அதிவேகத்தில் தரை இறங்கும்போது டயர்கள் அதிக சூடாகும். நைட்ரஜனில் ஆக்சிஜன் அறவே இல்லை என்பதும், சாதகமான விஷயம்.

விமான டயர்கள் குறித்து வியக்க வைக்கும் சுவாரஸ்யங்கள்

ஜெட் விமானங்களில் விலை உயர்ந்த டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை வெடித்தால் மீண்டும் பயன்படுத்த முடியாது. எனவே, ஜெட் விமான டயர்களில் ஃப்யூஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றன. டயர் அதிக சூடானால், ஃப்யூஸ் மூலமாக, தானியங்கி முறையில் டயர்களில் காற்றழுத்தம் குறைக்கப்படும். இதனால், டயர் வெடிப்பது தவிர்க்கப்படுகின்றன.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Here are given some interesing facts about aircraft tyres. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X