டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விமானங்களின் கருப்பு பெட்டி பற்றிய பல்வேறு பிரம்மிக்க வைக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உலகில் நிகழும் விமான விபத்துக்கள் பேரிழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. விமானங்கள் விபத்துக்களில் சிக்கும்போது, உண்மையில் என்ன நடந்தது? என்பதை கண்டறிவதற்கு கருப்பு பெட்டிகள் (Black Box) உதவுகின்றன. அந்த கருப்பு பெட்டிகள் பற்றி பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக எஃப்டிஆர் மற்றும் சிவிஆர் என்ற இரண்டு பாகங்கள் ஒன்றிணைந்த அமைப்புதான் கருப்பு பெட்டி என்று குறிப்பிடப்படுகிறது. இதில், எஃப்டிஆர் என்பது ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர் (FDR - Flight Data Recorder) ஆகும். அதேசமயம் சிவிஆர் என்பது காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் (CVR - Cockpit Voice Recorder) ஆகும்.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இந்த இரண்டு பாகங்களும் ஒருங்கிணைந்த அமைப்பே கருப்பு பெட்டி. இதில், எஃப்டிஆர் அமைப்பு, விமான இன்ஜின் செயல்திறன் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்யும். விமானம் பறக்கும் உயரம் மற்றும் வேகம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் எஃப்டிஆர் அமைப்பு பதிவு செய்யும். விமானம் விபத்தில் சிக்கினால், என்ன நடந்தது? என்பதை கண்டறிய விசாரணை குழுவிற்கு இந்த தகவல்கள் உதவும்.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

அதே சமயம் சிவிஆர் அமைப்பானது, காக்பிட்டில் பைலட்களுக்கு இடையே என்ன உரையாடல்கள் நடந்தது? என்பதை பதிவு செய்யும். தரையில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், அந்த விமானத்தை தொடர்பு கொண்டு பேசிய உரையாடல்களையும் சிவிஆர் அமைப்பு பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதில், எஃப்டிஆர் அமைப்பு 25 மணி நேரத்திற்கு உண்டான தகவல்களை பதிவு செய்து வைத்திருக்கும். அதே சமயம் சிவிஆர் அமைப்பு, கடைசி 2 மணி நேரத்தில் காக்பிட்டில் என்னென்ன உரையாடல்கள் நடந்தது? என்பதை பதிவு செய்து வைத்திருக்கும். இந்த 2 மணி நேரத்தை எட்டிய பின்னர், சிவிஆர் அமைப்பானது பழைய உரையாடல்களை அழித்து விட்டு புதிய உரையாடல்களை பதிவு செய்து கொண்டே இருக்கும்.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

பொதுவாக விமானங்களின் வால் பகுதியில்தான் கருப்பு பெட்டி வைக்கப்பட்டிருக்கும். விபத்து நடந்தாலும், கருப்பு பெட்டி தப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பெரும்பாலும் வால் பகுதியில்தான் கருப்பு பெட்டி வைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இதனை கருப்பு பெட்டி என்று அழைத்தாலும், உண்மையில் கருப்பு நிறத்தில் இது இருக்காது.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

உண்மையில் ஆரஞ்ச் மற்றும் சிகப்பு நிறம் கலந்த பிரகாசமான வண்ணத்தில்தான் கருப்பு பெட்டி இருக்கும். விபத்து நடைபெற்ற பிறகு வேகமாக கண்டறிய வேண்டும் என்பதை மனதில் வைத்துதான், கருப்பு பெட்டி ஆரஞ்ச் மற்றும் சிகப்பு நிறம் கலந்த பிரகாசமான நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகிறது. இடிபாடுகளில் இந்த நிறம் விசாரணை குழு அதிகாரிகளின் பார்வைக்கு மிக எளிதாக புலப்படும்.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

ஆனால் ஆரஞ்ச் மற்றும் சிகப்பு நிறம் கலந்த பிரகாசமான வண்ணத்தில் இருக்கும்போது, இதனை ஏன் கருப்பு பெட்டி என அழைக்கின்றனர்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இதனை கருப்பு பெட்டி என கூறுவதற்கு பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. கருப்பு பெட்டி என்ற வார்த்தையை ஊடகங்கள் விரும்பி பயன்படுத்தியதாகவும், பின்னர் அந்த பெயரே நிலைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

இதுபோல் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் தெளிவான விளக்கம் இல்லை. எனினும் விபரம் தெரிந்த யாரும், இந்த அமைப்பை கருப்பு பெட்டி என கூறுவதில்லை. விமானங்களில் பயன்படுத்தப்படும் மிகவும் முக்கியமான அமைப்பு என்பதால், கருப்பு பெட்டியை பல்வேறு கடுமையான சோதனைக்கு உட்படுத்திய பின்னர்தான் பயன்படுத்துவார்கள்.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

தீ விபத்துக்களில் தப்பி பிழைக்குமா?, அழுத்தத்தை தாங்குமா? என்பது போன்ற பல்வேறு சோதனைகள் செய்யப்படும். இந்த சோதனைகளின் முடிவில், கருப்பு பெட்டி இயங்க கூடிய நிலையில் உள்ளதா? என்பதையும் சோதனை செய்வார்கள். அதற்கு பிறகே அந்த கருப்பு பெட்டியை விமானங்களில் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதி வழங்கப்படும்.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

விமானம் விபத்தில் சிக்கினால், சில சமயங்களில் கருப்பு பெட்டியை கண்டறிவதற்கு மிகவும் நீண்ட காலம் ஆகும். அதுவரை கருப்பு பெட்டியை கண்டறியும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். ஏர் பிரான்ஸ் விமானம் 447 அட்லாண்டிக் கடலில் விபத்தில் சிக்கியபோது, கருப்பு பெட்டியை கண்டறிய சுமாராக 2 ஆண்டுகள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் சீக்ரெட்... விமானங்களில் கருப்பு பெட்டி எங்கே இருக்கும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க!

2 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட, விபத்துக்கு முன்னால் என்ன நடந்தது? என்பது பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை அந்த கருப்பு பெட்டி வழங்கியது. இதன் காரணமாகதான் கருப்பு பெட்டியை விமானங்களில் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாக மிகவும் கடுமையான பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting facts about airplane black box
Story first published: Friday, August 6, 2021, 15:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X