அட்லாண்டிக் பெருங்கடல் சாலை பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

உலகின் அற்புதமான சாலைகள் குறித்த செய்தித் தொகுப்புகளை ஏற்கனவே டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் படித்திருப்பீர்கள். அதில், என்னை மிகவும் கவர்ந்த சாலை ஒன்றான இந்த அட்லான்ட்டிக் பெருங்கடல் சாலை குறித்து கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

வாழ்நாளில் ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த சாலை மிகவும் உன்னதமான உணர்வையும், த்ரில்லையும் வழங்கும். அவ்வாறு செல்ல முடியவில்லையே என்று ஏக்கம் கொண்டவர்களுக்காக, இந்த சாலையின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் உங்கள் கண்களுக்கும், மனதுக்கும் விருந்தாக்குகிறோம்.

அமைவிடம்

அமைவிடம்

நார்வே நாட்டின் ஜார்டு கவுன்ட்டியில் உள்ள தீவுக் கூட்டங்களை இணைக்கும் சாலையைத்தான் அட்லாண்டிக் பெருங்கடல் சாலை என்று அழைக்கப்படுகிறது. இந்த சாலையின் கவுன்ட்டி-64 என்ற 8.3 கிமீ நீளமுடைய சாலைதான் மிகவும் குறிப்பிட்டு கூற வேண்டிய இடமாக இருக்கிறது.

Photo Credit: Youtube

தீவுகளை இணைக்கும் சாலை

தீவுகளை இணைக்கும் சாலை

இந்த சாலை கிறிஸ்டியன்சன்டு, மோல்டே நகரங்களை இணைக்கிறது. இடையில் லிட்லவ்வோயா, ஸ்டோர்லவ்வோயா மறறும் லின்கோல்மேன் ஆகிய தீவுகளின் ஊடாக செல்கிறது. இந்த சாலையில் பல்வேறு அற்புதமான குகை வழிகள், பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

 ரயில் வழித்தடம்

ரயில் வழித்தடம்

முதலில் இந்த சாலையை ரயில் வழித்தடமாக அமைக்கவே திட்டமிடப்பட்டதாம். பின்னர், அதில் இருந்த தொழில்நுட்ப சவால்கள் மற்றும் பாதுகாப்பு கருதி, சாலையாக மாற்றப்பட்டது. கடந்த 1989ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. 15 ஆண்டுகள் கழிந்த பின்னர் சுங்கக் கட்டணம் வசூலிப்பு கைவிடப்பட்டது.

Photo Credit: iefimerida

கட்டுமானம்

கட்டுமானம்

கடந்த 1983ம் ஆண்டில் அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த சாலை அமைக்கும் பணிகள் துவங்கின. மொத்தம் 6 ஆண்டுகள் கடுமையான முயற்சியில் இந்த அழகிய, அற்புதமான சாலையை கட்டி முடித்தனர்.

Photo Credit: Imgur

வேடிக்கை

வேடிக்கை

பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை என்றாலும், தற்போது சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக அமைந்திருக்கிறது. பைக்கில், இமயமலை பயணம் மேற்கொள்வதை கனவாக கொண்டிருக்கும் இளைஞர்களை போல, சுற்றுலா பிரியர்களின் வாழ்நாளில் இலக்கில் இந்த சாலையும் மிக முக்கிய இடத்தை பிடிக்கிறது.

Photo Credit: wos.my.com

அற்புத உணர்வு

அற்புத உணர்வு

கடலில் எழும் ராட்சத அலைகள் எழுந்து பாலங்களில் செல்லும் வாகனங்களுக்கு பன்னீர் தெளித்து சந்தோஷப்படுத்துகிறது. இந்த புதுமையான உணர்வை பெறுவதற்காக, நாடு கடந்து பலர் இந்த சாலையில் பயணிக்க வருகை தருகின்றனர்.

Photo Credit:Jens Lyngstad

 அபாயகரமானதும்...

அபாயகரமானதும்...

மழைக்காலங்களில் இந்த சாலை மிகவும் அபாயகரமானதாக மாறிவிடுகிறது. எனவே, அந்த சமயத்தில் இந்த சாலையில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது. ஆனால், அந்த த்ரில் அனுபவத்தை பெறுவதற்கும் இங்கு பலர் வருகை தருகின்றனர்.

Photo Credit:theindiansailor

ரோலர் கோஸ்டர்

ரோலர் கோஸ்டர்

இந்த சாலையில் அமைந்திருக்கும் பல பாலங்கள் ரோலர் கோஸ்டர் போன்ற அதி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் இந்த சாலையில் பயணிப்பது ஓட்டுனர்களுக்கும், பயணிகளுக்கும் செம த்ரில்லாக அமையும்.

Photo Credit:rootless.com.br

கார் விளம்பரங்கள்

கார் விளம்பரங்கள்

இந்த சாலையில் வைத்து பல கார் மற்றும் வாகன விளம்பரங்கள் படமாக்கி வெளியிடப்பட்டிருக்கின்றன. எனவே, ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்த சாலையாகவும் விளங்குகிறது.

Photo Credit:travelkiddo

அற்புதமான படம்

அற்புதமான படம்

அட்லாண்டிக் பெருங்கடல் சாலையின் பாலம் ஒன்றின் மீது நிலவு அமர்ந்திருப்பது போல எடுக்கப்பட்ட மிக அற்புதமான படம்.

நார்வேயின் பெருமை

நார்வேயின் பெருமை

இந்த சாலையை தேசிய சுற்றுலா வழித்தடமாக நார்வே அரசு அறிவித்தது. மேலும், நூற்றாண்டின் சிறந்த நார்வே கட்டுமானச் சின்னம் என்றும் இந்த சாலையை பெருமைப்படுத்தியிருக்கிறது நார்வே அரசு.

Photo Credit: Jens Lyngstad

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About Atlantic Ocean Road.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X