இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

தேசிய நல்லாட்சி தினதன்று சீனாவிற்கு அடுத்த செக் வைக்க இருக்கிறார் பிரதமர் மோடி. ஆம். ராணுவ துருப்புகளை சீன எல்லைக்கு விரைவாக கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு சாலை- ரயில் பாலத்தை அவர் திறந்து வைக்க இருக்கிறார்.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

எல்லைப்பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை மனதில் கொண்டு, சீன எல்லைக்கு விரைவாக ராணுவ துருப்புகளையும், தளவாடங்களையும், ஆயுதம் தாங்கிய வாகனங்களை கொண்டு செல்வதற்கு பல்வேறு புதிய சாலைகளை மத்திய அரசு அமைத்து வருகிறது.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

காஷ்மீரில் உள்ள எல்லைப்பகுதிகளுக்கு ஆண்டு முழுவதும் செல்வதற்கு வசதியாக புதிய சாலைகளை மத்திய அரசு திறந்து வருகிறது. அதேபோன்று, அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களிலும் எல்லைப்பகுதிகளில் புதிய சாலைகள் கடும் சவால்களை எதிர்கொண்டு அதிக சிறப்பு அம்சங்களுடன் பிரம்மாண்ட பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

போர் மற்றும் அவசர சமயங்களில் இந்திய ராணுவத்தின் கொள்கை முடிவுகளை எடுப்பதில் இந்த சாலைகளும், பாலங்களும் முக்கிய பங்காற்றும். அதேபோன்று, காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் போக்குவரத்து கட்டமைப்பு வெகுவாக மேம்படும்.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

இந்த நிலையில், சீன எல்லைக்கு மிக விரைவாக ராணுவ துருப்புகளை கொண்டு செல்லும் வகையில், போகிபீல் என்ற புதிய இரண்டடுக்கு பாலம் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அமைக்கப்பட்டு இருக்கிறது. கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் சீற்றமான நீரோட்டத்தை கடந்து இந்த பிரம்மாண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.

MOST READ: இஸ்ரோவின் ஜி-சாட் 7ஏ செயற்கைகோளால் நறநறப்பில் சீனா, பாகிஸ்தான் நாடுகள்... ஏன் தெரியுமா?

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

1996ம் ஆண்டு இந்த பாலத்திற்கு அப்போதைய பிரதமராக இருந்த தேவகவுடா அடிக்கல் நாட்டினார். இந்த பால கட்டுமானப் பணிகளை 2002ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய் துவங்கி வைத்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்து இப்போது திறப்பு விழா காண இருக்கிறது.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

வரும் 25ந் தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் மற்றும் தேசிய நல்லாட்தி தினத்தன்று, இந்த புதிய போகிபீல் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் போக்குவரத்து கட்டமைப்பு மேம்படுவதுடன், எல்லையோரங்களில் சீனாவின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த பாலம் திட்டமிட்டு கட்டப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

ஆசியாவின் இரண்டாவது பெரிய பாலமாக போகிபீல் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 4.94 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாலத்தின் மேல்புறத்தில் மூன்று தடங்கள் கொண்ட சாலையும், கீழ் பகுதியில் இருவழி தடம் கொண்ட அகல ரயில்பாதையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

கிழக்கு அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் இணைக்கும் விதத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

பிரம்மபுத்திரா நதியின் வடகரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 52 மற்றும் தென்கரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 37 ஆகியவற்றை இந்த பாலம் இணைக்கிறது. இந்த பாலத்தில் 80 டன் எடை கொண்ட வாகனங்கள் செல்ல முடியும்.

MOST READ:புத்தாண்டு பரிசு... லேண்ட்ரோவர் வெலார் எஸ்யூவி விலை ரூ.14 லட்சம் குறைகிறது!

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

Image Source:Armyrecognition

இதன்மூலமாக, அர்ஜுன் எம்கே-2 உள்ளிட்ட பாரம் அதிகம் கொண்ட பீரங்கிகளை எல்லைப்பகுதிக்கு கொண்டு செல்ல முடியும். தேஸ்பூரில் உள்ள ராணுவ முகாமிலிருந்து எல்லைக்கு ராணுவ துருப்புகளையும், தளவாடங்களையும் கொண்டு செல்ல ஏதுவாக அமையும்.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

இந்த சாலை ரயில் பாலமானது தமால்கவுன் மற்றும் தன்கனி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த ரயில் தடத்தில் 110 கிமீ வேகம் வரை ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், அஸ்ஸாமிலுள்ள திப்ரூகரிலிருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்கு குவஹாட்டி வழியாக 500 கிமீ தூரம் 100 கிமீ வரை குறையும்.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

இந்த ரயில் பாலத்தின் மூலமாக டெல்லி- திப்ரூகர் இடையிலான பயணம் 3 மணிநேரம் வரை குறையும். இதனால், தலைநகரலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கான போக்குவரத்து மேம்படுவதற்கும் இந்த சாலை ரயில் பாலம் உதவும்.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

ஆண்டுமுழுவதும் வடகிழக்கு மாநில மக்களுக்கு சிறந்த போக்குவரத்து கட்டமைப்பை வழங்கும் இந்த பாலம், எல்லையில் பதட்டம் ஏற்படும் சமயங்களில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பாலமாக விளங்கும்.

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

டென்மார்க்- ஸ்வீடன் நாடுகளை இணைக்கும் ஓரிசண்ட் சாலை ரயில் பாலத்தை முன்மாதிரியாக கொண்டு இந்த பாலம் வடிவமைக்கப்பட்டது. அத்துடன், இந்த பாலத்தின் வெல்டிங் பணிகள் உலகத் தரம் வாய்ந்ததாக செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

MOST READ: டெஸ்லா எலெக்ட்ரிக் காருக்கு பெட்ரோல் நிரப்ப முயன்ற பெண்... !!

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு பாலம்... சீனாவுக்கு மோடி வைக்கும் அடுத்த 'செக்'!

இதற்கு முன்னதாக, அசாம்- அருணாச்சலப்பிரதேசத்தை இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்திரா நதியின் மீது இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலம் இந்த ஆண்டு துவக்கத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதுவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கட்டப்பட்டுள்ளது. அதன் சிறப்புகளை தொடர்ந்து காணலாம்.

சீனாவை அலற வைத்த இந்தியாவின் பிரம்மபுத்திரா பாலம்: சுவாரஸ்யமான தகவல்கள்..!!

அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில எல்லைக்கு அருகில் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 9.15 கிமீ ஆகும். ஆறுகளுக்கு மீதாக கட்டப்பட்டுள்ள பாலங்களில் இதுவே நாட்டின் மிக நீளமானதாகும்.

அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள தோலா மற்றும் சதியா ஆகிய பகுதிகளை இணைக்கும் இந்தப் பாலம் தோலா-சதியா பாலம் என்று அழைக்கப்படுகிறது.

சீனாவை அலற வைத்த இந்தியாவின் பிரம்மபுத்திரா பாலம்: சுவாரஸ்யமான தகவல்கள்..!!

சீன எல்லையை ஒட்டியுள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தையும் அதன் அண்டை மாநிலமான அசாமையும் நீரால் பிரிக்கிறது பிரம்மபுத்திரா நதி. இந்தப்பகுதியில் ஆற்றுப் பாலம் கட்டினால் அருணாச்சல பிரதேசத்தின் வழியே சீன எல்லையை அடைய அது எளிதாக அமையும் என்று திட்டமிடப்பட்டு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

சீனாவை அலற வைத்த இந்தியாவின் பிரம்மபுத்திரா பாலம்: சுவாரஸ்யமான தகவல்கள்..!!

சதியா பகுதி சீனாவிற்கு மிக அருகில் அமைந்துள்ளது, இங்கிருந்து சீன எல்லை சுமார் 100 கிமீ தூரம் மட்டுமே. தற்போது இந்தப் பாலம் கட்டப்பட்டிருப்பதன் மூலம் மூன்று பக்கமும் லோஹித், பிரம்மபுத்திரா மற்றும் தில்பங் ஆறுகளால் சூழப்பட்ட சதியா பகுதிக்கு போக்குவரத்து எளிதாகியுள்ளது. இது ராணுவ பயன்பாட்டிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

சீனாவை அலற வைத்த இந்தியாவின் பிரம்மபுத்திரா பாலம்: சுவாரஸ்யமான தகவல்கள்..!!

சீனாவை ஒட்டி இந்தப் பாலம் அமைந்துள்ளதால் போர்க் காலங்களில் அல்லது அசாதர சூழ்நிலைகளில் ராணுவத்தினரையும், ராணுவ தளவாடங்களையும் எல்லையை நோக்கி தரை வழியாக மிக விரைவாக நகர்த்த இந்தப் பாலம் பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: டிச.29-ல் இந்தியாவின் அதிவேக ரயில் சேவையை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்!

சீனாவை அலற வைத்த இந்தியாவின் பிரம்மபுத்திரா பாலம்: சுவாரஸ்யமான தகவல்கள்..!!

முன்னதாக தோலா முதல் சதியா வரையிலான சுற்றுப்பாதை வழியான பயண நேரம் 6 மணி நேரமாக இருந்தது, தற்போது இது ஒரு மணிநேரமாக குறைந்துள்ளது.

முன்னதாக இந்தப் பகுதியை விரைவாக கடக்க வேண்டுமெனில், சிறிய ரக படகுகள் மூலமாகவே கடக்க முடியும், அதுவும் பகல் நேரத்தில் மட்டுமே. இது வெள்ள பாதிப்புகள் அதிகம் ஏற்படும் பகுதி என்பதால் அந்த நேரங்களில் இந்தப் பகுதியை கடக்க வழி இல்லாத நிலை இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவை அலற வைத்த இந்தியாவின் பிரம்மபுத்திரா பாலம்: சுவாரஸ்யமான தகவல்கள்..!!

இந்தப் பாலத்தைக் கண்டு சீனா அலறக் காரணம் இல்லாமல் இல்லை. வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சீன எல்லை எப்போதும் இந்தியாவுக்கு தலைவலியை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதன் மூலம் சீனா அடிக்கடி நம்மை சீண்டியபடியே உள்ளது.

சீனாவை அலற வைத்த இந்தியாவின் பிரம்மபுத்திரா பாலம்: சுவாரஸ்யமான தகவல்கள்..!!

அருணாச்சல பிரதேச பகுதியில் இந்தியாவுக்கு சீனா தனது சீண்டல்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே வருகிறது. இந்தப் பகுதியில் சாலைப் போக்குவரத்து சரிவர இல்லாதது இந்தியாவிற்கு ஒரு குறைபாடாகவே இருந்து வந்தது.

சீனாவை அலற வைத்த இந்தியாவின் பிரம்மபுத்திரா பாலம்: சுவாரஸ்யமான தகவல்கள்..!!

தற்போது அந்தக் குறையை இந்த பிரம்மபுத்திரா நதிப்பாலம் போக்கியுள்ளது. இது இந்தியாவின் ராணுவ வலிமையை சீனாவிற்கு தரைவழியாக உணர்த்த ஒரு முக்கியப் புள்ளியாக அமைந்துள்ளது.

சீனாவை அலற வைத்த இந்தியாவின் பிரம்மபுத்திரா பாலம்: சுவாரஸ்யமான தகவல்கள்..!!

950 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் மூலம் ராணுவ வீரர்களையும் ராணுவத் தளவாடங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடியும். மேலும், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தப் பாலம் பெரிதும் உதவும் என்றும் கூறப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் மதிப்பிலான எரிபொருட்கள் மிச்சமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்த பாலத்தால் இரு மாநிலங்களுக்கிடையேயான வர்த்தக போக்குவரத்தும் மேம்படும் என்று தெரிகிறது.

எனினும், எதிரிகள் மூலம் இந்தப் பாலத்திற்கு அச்சுறுத்தலும் உள்ளது என்பதால் இதனை பாதுகாக்க கூடுதல் கவனமுடன் அரசு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

Tamil
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Interesting Facts About Bogibeel Bridge.
Story first published: Friday, December 21, 2018, 12:04 [IST]
 
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more