நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

ரியர் வியூ மிரர்கள் உண்மையில் எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது? என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

இன்றைய கால கட்டத்தில், கார்களின் மிக முக்கிய அங்கமாக ரியர் வியூ மிரர்கள் (Rear View Mirrors) உருவெடுத்துள்ளன. ஆனால் 1900களின் தொடக்கத்தில் நிலைமை இப்படி இருக்கவில்லை. 1930களின் தொடக்கத்தில்தான் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் கார்களில் ரியர் வியூ மிரர்களை வழங்கவே தொடங்கினர்.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

இடைப்பட்ட ஆண்டுகளில் ரியர் வியூ மிரர்களில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் கார் ஓட்டுவதை நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு சூழல் தற்போது இருக்கிறது. அப்படிப்பட்ட ரியர் வியூ மிரர்களின் வரலாற்றை இன்று நாம் பார்க்கலாம். இதில், ஆச்சரியமளிக்கும் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

பின்னாலும், அருகிலும் வரும் வாகனங்களை பார்ப்பதற்கு ரியர் வியூ மிரர்கள் உதவி செய்கின்றன. எனவே கார் டிரைவர்களுக்கும், காரில் பயணம் செய்பவர்களுக்கும் ரியூர் வியூ மிரர்கள் அதிக பாதுகாப்பை வழங்குகின்றன. அத்துடன் டிரைவர்கள் வேகமாக பயணம் செய்வதற்கும் ரியர் வியூ மிரர்கள் உதவி செய்கின்றன. ஆம், சரியாகதான் படித்துள்ளீர்கள்.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

ஆரம்ப கால கட்டங்களில் காரில் ரியர் வியூ மிரர் பொருத்தப்பட்டதற்கு வேகம்தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. ரியர் வியூ மிரர் பொருத்த வேண்டும் என்ற ஐடியா தோன்றிய முதல் நபர் என்ற பெருமைக்கு உரியவர் ரே ஹாரோன் (Ray Harroun). பந்தய வீரரான இவருக்கு, கடந்த 1911ம் ஆண்டுதான் இந்த யோசனை உதித்தது.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த குதிரை வண்டிகளில், ரியர் வியூ மிரர் போன்றதொரு அமைப்பை அவர் கண்டார். வாகனங்களில் வேகமாக பயணம் செய்வதற்கு இது உதவியாக இருக்கும் என அவர் நினைத்தார். அதுவரை வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு அவர் கையாண்ட யுக்தியானது மிகவும் வித்தியாசமானது.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

'கோ-டிரைவர்' (Co-driver) இருக்கையில் யாரேனும் ஒருவரை அவர் அமர வைத்து கொள்வார். லேன்களை மாறுவது பாதுகாப்பானதா? என்பதை அவர்தான் ரே ஹாரோனுக்கு தெரிவிப்பார். ஆனால் இந்த கண்ணாடி மூலம் அவர் தனது காரை பாதுகாப்பாகவும், வேகமாகவும் ஓட்டினார். ரியர் வியூ மிரர்களின் வரலாற்றில் இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் அடங்கியுள்ளன.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

ஆட்டோமொபைல் தொழில்துறையில், முதல் ரியர் வியூ மிரருக்கான காப்புரிமை கடந்த 1921ம் ஆண்டுதான் பெறப்பட்டது. எல்மர் பெர்கர் (Elmer Berger) என்பவர் சற்று முன்னோக்கி சென்று, இந்த காப்புரிமையை பெற்றார். இதற்கு எல்மர் பெர்கர் சூட்டிய பெயர் என்னவென்று தெரியுமா? 'காப் ஸ்பாட்டர்' (Cop Spotter). அதாவது 'காவலர்களை கண்டறிபவன்' என பொருள் கொள்ளலாம்.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

காவலர்கள் யாராவது தனது காரை பின் தொடர்ந்து வருகிறார்களா? என்பதை பார்ப்பதற்காகதான் எல்மர் பெர்கர் இதனை முக்கியமாக பயன்படுத்தினார். இது மிகவும் வேடிக்கையான ஒரு விஷயம்தான். ஆனால் அப்படிப்பட்ட வேடிக்கையான ஒரு ஐடியா, இன்று ஆட்டோமொபைல் துறையின் மிக முக்கிய அம்சமாக மாறியிருப்பது சுவாரஸ்யமானது.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

பின்னால் காவலர்கள் வருகிறார்களா? என்பதை காண்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு அம்சம், இத்தனை ஆண்டுகள் கழித்து உலகம் முழுவதும் அனைத்து கார்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு அம்சமாக மாறும் என்பதை எல்மர் பெர்கரே நினைத்து பார்த்திருப்பாரா? என்பது சந்தேகம்தான். ஆனால் இன்று ரியர் வியூ மிரர்கள் மிகவும் நவீனமாக மாறி விட்டன.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

இன்று அனைத்து கார்களிலும் ரியர் வியூ மிரர்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிலர் அவற்றை முறையாக பயன்படுத்துவதில்லை. வெளிப்புறத்தில் இருக்கும் ரியர் வியூ மிரர்களை மடித்து வைத்து விட்டு ஒரு சிலர் கார்களை ஓட்டுகின்றனர். இது பாதுகாப்பானது கிடையாது என்பதை மனதில் கொள்ளுங்கள். ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் அருகிலும், பின்னாலும் வரும் வாகனங்களை காண்பது கடினம்.

நம்ப முடியல! ரியர் வியூ மிரரை உண்மையில் எதற்காக கண்டுபிடிச்சாங்க தெரியுமா? இந்த விஷயத்த யாரும் சொல்ல மாட்டாங்க

அதேபோல் இரு சக்கர வாகனங்களிலும் கூட ஒரு சிலர் ரியர் வியூ மிரர்களை கழற்றி வைத்து விடுகின்றனர். இதுதான் ஸ்டைல் என்பது அவர்களின் வாதம். ரியர் வியூ மிரர்கள் இல்லாமல் உங்கள் பைக் ஸ்டைலாக காட்சியளிக்கலாம். ஆனால் அந்த பைக் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting facts about car rear view mirrors
Story first published: Thursday, October 28, 2021, 17:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X