இந்தியாவின் மிக நீண்ட தூர ரயில்... விவேக் எக்ஸ்பிரஸ் பற்றிய சுவாரஸ்யங்கள்!

Written By:

மிக நீண்ட தூர பயணங்கள் என்றாலே, ரயில்தான் பலரின் முதல் சாய்ஸ். பிற போக்குவரத்து சாதனங்களை விட மிக குறைவான கட்டணம், அலுப்பில்லாத பயணம், பாதுகாப்பு என பல விதங்களிலும் ரயில் பயணங்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பிடித்தமான ஒன்று.

இதில், பல நீண்ட தூர ரயில்கள் இருந்தாலும், கன்னியாகுமரியிலிருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் மீக நீண்ட தூர ரயில் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. பல மாநிலங்களையும், கலாச்சாரங்களையும் கடந்து பயணிக்கும் இந்த ரயில் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை காணலாம்.

பயண தூரம்

பயண தூரம்

விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் அசாம் மாநிலம் திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி வரை 4,273 கிமீ தூரம் பயணிக்கிறது. நீண்ட தூரத்தில் மட்டுமல்ல, அதிக நாட்கள் பயணிக்கும் ரயில் என்ற பெருமையும் இந்த ரயிலுக்கு உண்டு.

பயண நேரம்

பயண நேரம்

வாரந்திர சேவையை வழங்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் தி்ப்ரூகரில் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை காலை 11 மணிக்கு கன்னியாகுமரியை அடைகிறது. மூன்று பகல், நான்கு இரவுகளை கடந்து இந்த ரயில் பயணிக்கிறது. மொத்தமாக 80 மணி 15 நிமிடங்களில் இந்த ரயில் செல்கிறது. மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டு, திங்கள் காலை 7.15 மணிக்கு திப்ரூகரை அடைகிறது.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

இந்த ரயிலில் 21 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. குளிர்சாதன வகுப்பு மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் பொது வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. சமயலறை வசதியும் உள்ளது. அதிகபட்சமாக 1,800 பயணிகள் வரை செல்லலாம்.

Picture credit: SAGAR PRADHAN/flickr

எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

கன்னியாகுமரியிலிருந்து விசாகப்பட்டினம் வரை WAP-4 அல்லது WAM4 மின்சார எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகிறது. அங்கிருந்து வேறு ஒரு WAP-4 எஞ்சின் இணைக்கப்பட்டு, துர்காபூர் வரை செல்கிறது. அங்கிருந்து திப்ரூகருக்கு WDM-3A டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதில், WAP-4 மின்சார ரயில் எஞ்சின் அதிகபட்சமாக 140 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. WDM -3A எஞ்சின் அதிகபட்சமாக 120 கிமீ வேகம் வரை ரயிலை இழுத்துச் செல்லும் வல்லமை கொண்டது.

நிறுத்தங்கள்

நிறுத்தங்கள்

கன்னியாகுமரி- திப்ரூகர் இடையில் 55 நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மேற்குவங்கம், பீகார், அசாம், நாகாலாந்து என பல மாநில மக்களுக்கு சேவையளிக்கிறது.

வழித்தடம்

வழித்தடம்

கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவில் புகுந்துவிடுகிறது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளும், கோவை, ஈரோடு, சேலம் வழியாக ஆந்திராவில் புகுந்து நெல்லூரை பிடிக்கிறது. அங்கிருந்து புவனேஷ்வர், அசன்சோல், சிலிகுரி, குவஹாத்தி, திமாபூர் வழியாக திப்ரூகரை சென்றடைகிறது.

சராசரி வேகம்

சராசரி வேகம்

இந்த ரயில் மணிக்கு 50.4 கிமீ சராசரி வேகத்தில் பயணிக்கிறது.

விவேகானந்தர் நினைவு

விவேகானந்தர் நினைவு

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்ததினத்தையொட்டி, கடந்த 2011-12ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகம் செய்தார்.

வண்டி எண்

வண்டி எண்

விவேக் எக்ஸ்பிரஸ் வரிசையில் நான்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில், வாரம் ஒருமுறை சேவையை வழங்கும் இந்த கன்னியாகுமரி- திப்ரூகர் ரயில் 15905 மற்றும் 15906 என்ற வண்டி எண்களில் இயங்குகிறது.

இதர விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்கள்

இதர விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்கள்

தூத்துக்குடியிலிருந்து குஜராத் மாநிலம் ஒகா நகருக்கும், மும்பை, பந்த்ராவிலிருந்து ஜம்முதாவி வரையிலும், கோல்கட்டாவிலுள்ள சந்திரகச்சியிலிருந்து மங்களூர் வரை என மேலும் மூன்று விவேக் எக்ஸ்பிரஸ் வரிசையில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Photo Credit: You tube 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About Dibrugarh-Kanyakumari Vivek Express.
Story first published: Saturday, March 12, 2016, 13:51 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark