இந்திய ஆட்டோமொபைல் துறை பற்றிய சில சுவாரஸ்யங்கள்!

By Saravana

உலக அரங்கில் இந்திய ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி மிக அபரிதமாக இருந்து வருகிறது. இதனால், உலகின் முன்னணி நிறுவனங்களும், இந்தியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்திய வாகன மார்க்கெட்டை அணுகி வருகின்றனர்.

இந்த நிலையில், அசுர வேக வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்திய ஆட்டோமொபைல் துறை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களின் முதல் பகுதியை ஸ்லைடரில் காணலாம்.

01. உலகின் விலை குறைவான கார்

01. உலகின் விலை குறைவான கார்

கடந்த 2009ல் அறிமுகம் செய்யப்பட்ட டாடா நானோ கார் தொடர்ந்து, உலகின் மிக குறைவான விலை கொண்ட கார் மாடல் என்ற பெருமையை தக்க வைத்து வருகிறது. ஒரு லட்ச ரூபாய் கார் என்ற பிரகடனத்துடன் வந்த டாடா நனோ காரின் விலை தற்போது 2 லட்சத்தை தாண்டுகிறது. மலிவு விலை கார் என்ற முத்திரையை பெற்றாலும், நானோ காரின் பொறியியல் உலக ஆட்டோமொபைல் துறை ஜாம்பவான்களை ஒரு கணம் அதிர்வு கொடுத்தது என்றால் மிகையில்லை. அமெரிக்காவின் பிரபல டிவி தொகுப்பாளரும், கார் ஆர்வலருமான ஜெ லெனோவின் கார் சேகரிப்பு மையத்திலும் டாடா நானோ கார் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

 02. விலை குறைவான டீசல் கார்

02. விலை குறைவான டீசல் கார்

உலகின் மிக விலை குறைவான டீசல் கார் மாடல் என்ற பெருமையை டாடா இண்டிகா தக்க வைத்து வருகிறது. ரூ.4 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கும் டாடா இண்டிகா, இந்திய டாக்சி மார்க்கெட்டில், அதிக வரவேற்பு மிகுந்த மாடலாக உள்ளது. இந்த காருக்கு மாற்றாக, புதிய காரை கைட் என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

 03. கார் விற்பனை

03. கார் விற்பனை

ஆண்டுக்கு 70 மில்லியன் கார்கள் உலக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதில், இந்தியாவின் பங்களிப்பு வெறும் 4 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Honda City celebrates 20 glorious years in India - DriveSpark
 04. மார்க்கெட் பங்களிப்பு

04. மார்க்கெட் பங்களிப்பு

கார் மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய மூன்று நிறுவனங்களின் மார்க்கெட் பங்களிப்பு 75 சதவீதம். மீதமுள்ள 25 சதவீதத்திற்குத்தான் பிற நிறுவனங்களின் விற்பனை அடங்கியிருக்கிறது.

05. வேலைவாய்ப்பு

05. வேலைவாய்ப்பு

இந்திய ஆட்டோமொபைல் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பை பெற்றிருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அளவு வேலைவாய்ப்பை ஆட்டோமொபைல் துறை வழங்கி வருகிறது.

06. உலகின் 6வது பெரிய வாகன மார்க்கெட்

06. உலகின் 6வது பெரிய வாகன மார்க்கெட்

விற்பனையில், உலக அளவில் 6வது மிகப்பெரிய கார் மார்க்கெட் என்ற பெருமையை இந்திய வாகன மார்க்கெட் பெற்றிருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் மற்றும் ஜெர்மனிக்கு அடுத்த இடத்தில் தற்போது இருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து, உலகின் மூன்றாவது பெரிய கார் மார்க்கெட் என்ற சிறப்பை பெறும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 07. இதுக்கே தாங்கலையே...

07. இதுக்கே தாங்கலையே...

2011ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, மக்கள் தொகையின் அடிப்படையில், 1,000 பேரில் 18 பேரிடம் கார் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த அளவு அதிகரித்திருக்கும். இதன்மூலமாக, வளர்ந்த நாடுகளைவிட, இந்தியாவில்தான் கார் மார்க்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதை கண்டுகொண்டு, முன்னணி கார் நிறுவனங்கள் முதலீட்டை குவித்து வருகின்றன. 1,000 பேருக்கு 18 பேரிடம்தான் கார் இருக்கிறது என்று சொல்வது சரி. இதுக்கே நம்ம ரோடெல்லாம் தாங்கலியே, எல்லோர் கையிலும் கார் வந்தால், வீட்டிலேயே வைத்து அழகு பார்க்க வேண்டியதுதான்.

 08. சராசரி வேகம்

08. சராசரி வேகம்

1992ம் ஆண்டில் சென்னையில் வாகனங்களின் சராசரி வேகம் மணிக்கு 20 கிமீ என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, மணிக்கு 16 கிமீ என்று தெரிவிக்கப்படுகிறது.

 09. கூகுள் ஆண்டவர்...

09. கூகுள் ஆண்டவர்...

பழைய கார் வாங்குவதற்கும், விற்பதற்குமான தேடல் குறித்த ஒரு புள்ளி விபரத்தை கூகுள் வெளியிட்டிருக்கிறது. அதில், 4.5 மில்லியன் மக்கள் பழைய கார் வாங்குவதற்கும், விற்பதற்கும் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

10. வெற்றிகரமான மாடல்

10. வெற்றிகரமான மாடல்

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான மாடல் என்ற பெருமை மாருதி 800 காரையே சேரும். 1983ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி 800 கார் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தயாரிக்கப்பட்டது. மொத்தமாக 2.87 மில்லியன் மாருதி 800 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதற்கு மாற்றாக, தற்போது ஆல்ட்டோ 800 கார் விற்பனையில் உள்ளது.

சுவாரஸ்யங்கள் தொடரும்...

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indian automobile industry is an interesting one the fastest growing. Here are interesting & fascinating facts about Indian auto industry. Facts about Indian automobiles that you may not know.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X