இந்திய பொறியியல் வல்லமையை பரைசாற்றும் சாலைகளும், பாலங்களும்...!!

Written By:

இந்தியாவின் சாலைகள் என்றவுடனே, பலருக்கும் மோசமான நிலையில் இருப்பதாக ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால், தற்போது இந்திய சாலைகளின் கட்டமைப்பு தரம் வெகுவாக மேம்பட்டு வருகிறது.

மேலும், உலக நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு சாலை மற்றும் அதனை இணைக்கும் பாலங்கள் கட்டுமானத் தொழில்நுட்பங்கள் மேம்பட்டு இருக்கின்றன. அதனை பரைசாற்றும் வகையில், இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் சாலைகள் மற்றும் பாலங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

இந்தியாவின் சாலை கட்டமைப்பு

இந்தியாவின் சாலை கட்டமைப்பு

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சாலை கட்டமைப்பு கொண்ட நாடு இந்தியா. இந்தியாவின் சாலை கட்டமைப்பு நீளம் சுமார் 43.20 லட்சம் கிலோமீட்டர்கள் ஆகும். இதில், 79,243 கிமீ தூர சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாகவும், 1,31,899 கிமீ தூர சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாகவும் உள்ளன. மற்றவை ஊரக சாலைகளாக இருக்கின்றன. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இந்திய சாலை கட்டமைப்பில் இருக்கும் வியத்தக்கு தகவல்களை காணலாம்.

01. சிறந்த தேசிய விரைவு சாலை

01. சிறந்த தேசிய விரைவு சாலை

குஜராத் மாநிலம், ஆமதாபாத்- வதோதரா இடையிலான தேசிய விரைவுசாலை 1தான் இந்தியாவின் மிகச்சிறந்த விரைவு சாலையாக குறிப்பிடப்படுகிறது. 95 கிமீ தூரம் நீளும் இந்த விரைவு சாலை, 2004ம் ஆண்டு தங்க நாற்கர சாலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.

02. நீளமான பறக்கும் சாலை

02. நீளமான பறக்கும் சாலை

இந்தியாவின் மிக நீளமான பறக்கும் சாலை என்ற பெருமையை சென்னையிலுள்ள மதுரவாயல் எக்ஸ்பிரஸ்வே பெற்றிருக்கிறது. ஆனால், அந்த சாலை திட்டம் இன்னமும் முழுமை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.1,530 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட இந்த சாலை திட்டம் அரசு- தனியார் பங்களிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை துறைமுகத்தின் நுழைவாயில் எண்-10ல் இருந்து மதுரவாயல் வரை இந்த சாலை இணைக்கிறது.

03. நீளமான தேசிய நெடுஞ்சாலை

03. நீளமான தேசிய நெடுஞ்சாலை

இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை என்ற பெருமையை தேசிய நெடுஞ்சாலை எண்-7 பெறுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலை 4,572 கிமீ தூரத்திற்கு நீள்கிறது. வாரணாசியிலிருந்து கன்னியாகுமரி வரை இணைக்கிறது. இந்த நிலையில், புதிய விதி மாறுதல்களின்படி, ஸ்ரீநகரிலிருந்து கன்னியாகுமரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 44 இனி இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை என்ற பெருமையை பெற இருக்கிறது.

 கத்திப்பாரா பாலம்

கத்திப்பாரா பாலம்

இந்தியாவின் மிகப்பெரிய இரண்டடுக்கு மேம்பாலம் என்ற பெருமையை கத்திப்பாரா சந்திப்பு பாலம் பெறுகிறது. இதுபோன்ற அமைப்பு கொண்ட பாலங்களில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவும் இந்தியாவின் சாலை கட்டமைப்புத் தொழில்நுட்பத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.

நகரத்தில் அமைந்துள்ள பெரிய பாலம்

நகரத்தில் அமைந்துள்ள பெரிய பாலம்

கர்நாடகத் தலைநகர், பெங்களூரிலுள்ள ஹெப்பால் மேம்பாலம் நகரத்திற்குள் அமைக்கப்பட்ட பாலங்களில் மிகப்பெரியதாக குறிப்பிடப்படுகிறது. வெளிவட்டச் சாலையையும், பெல்லாரி சாலையையும் இந்த மேம்பாலம் இணைக்கிறது.

மிக நீளமான ஆற்றுப்பாலம்

மிக நீளமான ஆற்றுப்பாலம்

ஆற்றில் அமைக்கப்பட்ட இந்தியாவின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பீகாரில் அமைந்துள்ள மஹாத்மா காந்தி சேது ஆற்றுப்பாலம் பெறுகிறது. கங்கை ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலம் பீகார் தலைநகர் பாட்னாவையும், ஹாஜிபூரின் தெற்குப் பகுதியையும் இணைக்கிறது. 5.5 கிமீ நீளம் கொண்ட இந்த பாலம் 4 வழித்தட போக்குவரத்து வசதி கொண்டது.

மிக நீளமான சாலை, ரயில் பாலம்

மிக நீளமான சாலை, ரயில் பாலம்

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருக்கும் பாலம் இரண்டடுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மேல் பகுதியில் சாலை போக்குவரத்தும் கீழ் பகுதியில் ரயில் போக்குவரத்தும் நடைபெறும் வசதி கொண்டது. 2.7 கிமீ நீளம் கொண்ட இந்த பாலம் வியக்க வைப்பதோடு, இந்திய பொறியியல் வல்லமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.

08. மிகப்பெரிய கடல் பாலம்

08. மிகப்பெரிய கடல் பாலம்

மும்பையின் பந்த்ரா- வோர்லி பகுதிகளை இணைப்பதற்காக கடலில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் என்ற பெருமையை பெறுகிறது. இது 22 கிமீ நீளம் கொண்டது.

உலகின் உயரமான ரயில் பாலம்

உலகின் உயரமான ரயில் பாலம்

காஷ்மீரில் சீனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வரும் ரயில் பாலம்தான் உலகின் மிக உயரமான ரயில் பாலம் என்ற பெருமையை பெற இருக்கிறது. இந்த ரயில் பால் 1,178 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது.

நீளமான சுரங்கப் பாதை

நீளமான சுரங்கப் பாதை

காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் மலையை குடைந்து அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதைதான் இந்தியாவின் மிக நீளமான சுரங்க வழிப்பாதை என்ற பெருமையை பெற இருக்கிறது. 9.2 கிமீ தூரத்திற்கு மலையை குடைந்து இந்த சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது.

 மிகப்பெரிய டோல் பிளாசா

மிகப்பெரிய டோல் பிளாசா

இந்தியாவின் மிகப்பெரிய சுங்க கட்டண வசூல் மையம் டெல்லி- குர்கான் எல்லையில் அமைந்துள்ளது. டெல்லி- குர்கான் எக்ஸ்பிரஸ்வே வழியாக செல்லும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான இந்த சுங்கச்சாவடியில் 32 வழித்தடங்கள் அமைந்துள்ளன. ஆசியாவிலேயே மிகப்பெரிய சுங்கச் சாவடி இது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About Indian Roads That'll Blow Your Mind.
Story first published: Wednesday, January 13, 2016, 12:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark