'கசாப்பு'க்கு செல்லும் இந்தியாவை அரணாக காத்து நின்ற ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!!

ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற பெருமைக்குரிய ஐஎன்எஸ் விராத் நேற்று முறைப்படி ஓய்வு பெற்றது. நாட்டின் பாதுகாப்பில் அரணாக நின்று வந்த இந்த போர்க்கப்பல் உடைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கப்பலை நட்சத்திர விடுதியாக மாற்றுவதற்கு ஆந்திர அரசு முயற்சித்தது.

ஆனால், இந்த கப்பலை நட்சத்திர விடுதியாக மாற்றுவதற்கான செலவீனம் மிக அதிகமாக இருப்பதால், அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது ஆந்திர அரசு. இதையடுத்து, இந்த கப்பலை உடைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிந்து இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலின் அருமை, பெருமைகளை தொடர்ந்து காணலாம்.

'கசாப்பு'க்கு செல்லும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!!

கடந்த 1943ம் ஆண்டு இங்கிலாந்தில் இந்த போர்க்கப்பலின் தயாரிப்புப் பணிகள் துவங்கப்பட்டன. இரண்டாம் உலகப்போரின்போது எழுந்த சூழலை கருத்தில்கொண்டு இந்த போர்க்கப்பல் உருவாக்கப்பட்டது. 1959ம் ஆண்டில் இருந்து, 1987ம் ஆண்டு வரை இங்கிலாந்து நாட்டின் ராயல் நேவி கடற்படையில் எச்எம்எஸ் ஹெர்மீஸ் என்ற பெயரில் சேவையாற்றி வந்தது.

'கசாப்பு'க்கு செல்லும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!!

அதன்பிறகு, இந்த போர்க்கப்பலை ரூ.450 கோடி மதிப்பில் இந்தியா வாங்கியது. மேலும், ஐஎன்எஸ் விராத் என்ற பெயரில் இந்த போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தது.

'கசாப்பு'க்கு செல்லும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!!

இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் 743 அடி நீளம் கொண்டது. 23,900 டன் எடையுடன் பிரம்மாண்டத்தை பரைசாற்றுகிறது. இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலில் 143 விமானப்படை வீரர்களும், 950 கப்பல் ஊழியர்களும் இருந்தனர். தற்போது அவர்களுக்கு புதிதாக தயாரிக்கப்படும் போர்க்கப்பல்களில் பணி மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

'கசாப்பு'க்கு செல்லும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!!

இந்த கப்பலில் தினசரி உணவு சமைக்க 350 கிலோ அரிசி, 80 கிலோ பருப்பு, 300 கிலோ காய்கறிகள், 200 கிலோ இறைச்சி ஆகியவை பயன்படுத்தப்படும். மேலும், 7,000 பரோட்டாக்களும் தயார் செய்யப்படும். இதற்காக, இந்த போர்க்கப்பலில் பிரம்மாண்ட சமையல் கூடமும் உண்டு. இந்த கப்பலில் அதிகாரிகள், பணியாளர்கள் தங்குவதற்கான அறைகள், வங்கி ஏஎம்டி, தொலைக்காட்சி பெட்டிகள், நூலகம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவை இருந்தன.

'கசாப்பு'க்கு செல்லும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!!

2020ம் ஆண்டு வரை பயன்பாட்டில் வைக்க மத்திய பாதுகாப்புத் துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால், இந்த கப்பல் மிகவும் பழமையாகிவிட்டதால், பராமரிப்பு அதிகம் தேவைப்படுகிறது. எனவே, சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

'கசாப்பு'க்கு செல்லும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!!

இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் அதிகபட்சமாக மணிக்கு 52 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 10,500 கிமீ தூரம் வரை கடலில் பயணிக்கும். போர் விமானங்களை இயக்குவதற்காக 12 டிகிரி கோண சாய்தள ஓடுதள மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

'கசாப்பு'க்கு செல்லும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!!

இந்த போர்க்கப்பலில் ஒரே நேரத்தில் 26 விமானங்களை நிறுத்துவதற்கான வசதி இருந்தது. இந்த போர்க்கப்பலில் 16 Sea Harrier போர் விமானங்Kளும், 4 வெஸ்ட்லேண்ட் சீ கிங் எம்கே 42 பிசி ரக ஹெலிகாப்டர்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர, 2 எச்ஏஎல் சேட்டக் ஹெலிகாப்டர்களும், 4 எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

'கசாப்பு'க்கு செல்லும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!!

இந்த கப்பல் 10.94 லட்சம் கிமீ தூரம் கடலில் பயணித்துள்ளது. இந்த போர்க்கப்பலில் இருந்து போர் விமானங்கள் 22,034 மணிநேரம் பறந்துள்ளன. தேசியக் கொடியுடன் கம்பீரமாக வலம் வந்த இந்த போர்க்கப்பல் தற்போது பொலிவிழந்து அந்திம காலத்தை எதிர்பார்த்து நிற்கிறது.

'கசாப்பு'க்கு செல்லும் ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!!

உலக அளவில் சேவையில் இருந்த மிக பழமையான விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற பெருமையை ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல் பெற்றிருந்தது. கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டு பெருமை படுத்தப்பட்டது. உடைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் இந்த போர்க்கப்பலை நினைவுச் சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

புதிய ரெனோ கேப்டர் எஸ்யூவி படங்கள்!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ரெனோ கேப்டர் எஸ்யூவியின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: Interesting Facts About INR Viraat Ship.
Story first published: Tuesday, March 7, 2017, 17:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X