சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!

Written By:

விண்வெளி குறித்த ஆழமான ஆய்வுகளையும், உண்மை நிலைகளையும் விண்வெளியில் தங்கியிருந்து நேரடியாக கண்டறியும் விதத்தில், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செயற்கோளையே சர்வதேச விண்வெளி மையம்[ISS] என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

அந்தரத்தில் மனிதர்கள் வாழும் தகவமைப்புகள் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் 12 நாடுகளின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டிருக்கும், இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை பற்றிய பல சுவாரஸ்ய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

செயற்கை வசிப்பிடம்

செயற்கை வசிப்பிடம்

புவியீர்ப்பு இல்லாத விண்வெளியில் மனிதர்கள் தங்கியிருக்கும் வசதியுடன் கூடிய ஆய்வு மையமாக இந்த செயற்கைகோள் விசேஷ வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

உயரம்

உயரம்

பூமியிலிருந்து 330 கிமீ முதல் 435 கிமீ உயரத்திற்கு இடையிலான பகுதியில் இந்த விண்வெளி நிலையம் சுற்றி வருகிறது.

செயற்கைகோள்

செயற்கைகோள்

இந்த செயற்கைகோள் பகுதி பகுதியாக கொண்டு சென்று ஒருங்கிணைக்கப்பட்டது. முதல் பகுதி ஸரியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 1998ம் ஆண்டு ரஷ்யாவின் புரோட்டான் ராக்கெட் மூலமாக இந்த செயற்கைகோள் விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த செயற்கைகோள்தான் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மின்சாரம், உயரத்தையும், நகர்வையும் கட்டுப்படுத்தும் சாதனங்கள் மற்றும் தொலைதொடர்பு வசதிகளை வழங்குகிறது.

மற்றொரு பாகம்

மற்றொரு பாகம்

அடுத்த இரண்டு வாரங்கள் கழித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தனது எண்டெவர் விண்கலம் மூலமாக, மற்றொரு பகுதியை எடுத்துச் சென்று இந்த விண்வெளி நிலையத்துடன் இணைத்தது. நீண்ட காலம் மனிதர்கள் தங்கியிருப்பதற்கான அனைத்து வசதிகளையும் இந்த பகுதி கொண்டிருக்கிறது.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய செயற்கையான கட்டமைப்பாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த செயற்கைகோள் 357 அடி நீளம் கொண்டது. அதாவது, ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு பெரியதாக தெரிவிக்கப்படுகிறது.

 எடை

எடை

மிக பிரம்மாண்டமான இந்த விண்வெளி ஆய்வு நிலையம் வெறும் 4,19,500 கிலோ மட்டுமே எடை கொண்டது. இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 படுக்கையறைகள், 2 குளியலறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவை உள்ளன.

 ஆய்வுகள்

ஆய்வுகள்

விண்வெளியில் தங்கியிருக்கும்போது மனிதர்கள் உடலில் நிகழும் மாற்றங்கள், அண்ட வெளியில் கோள்களின் இயக்கம், தட்பவெப்ப மாறுதல்கள் மற்றும் இதர ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.

விந்தை

விந்தை

சர்வதேச ஆய்வு மையத்தில் 12.8 கிமீ நீளமுடைய மின் ஒயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 3.3 மில்லியன் வரிகள் அடங்கிய கம்ப்யூட்டர் மென்பொருள் குறியீடுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

முதல் பயணம்

முதல் பயணம்

இந்த விண்வெளி மையத்திற்கு செல்வதற்கான முதல் பயணம் Expedition 1 என்ற பெயரில் அழைக்ப்படுகிறது. கடந்த 2000-வது ஆண்டில் ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலமாக, மூன்று ரஷ்ய விண்வெளி வீரர்கள் இந்த மையத்திற்கு சென்றனர். அதைத்தொடர்ந்து, இந்த விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களின் தொடர்ந்து வந்து செல்வதால், பரபரப்பாகவே இயங்கி வருகிறது.

பல நாட்டு வீரர்கள்

பல நாட்டு வீரர்கள்

இதுவரை 15 நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இந்த மையத்திற்கு சென்று வந்துள்ளனர். இதில், 211 ஆண் விண்வெளி வீரர்களும், 31 பெண் விண்வெளி வீரர்களும் அடங்குவர். மேலும், 7 பேர் சுற்றுலா நோக்குடன் சென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அடிக்கடி சென்றவர்கள்

அடிக்கடி சென்றவர்கள்

இந்த விண்வெளி மையத்திற்கு 76 வீரர்கள் இரண்டு முறையும், 25 பேர் மூன்றும் முறையும், 5 பேர் நான்கு முறையும் சென்று வந்துள்ளனர். சராசரியாக இந்த விண்வெளி நிலையத்தில், 6 பேர் தங்கியிருக்கின்றனர்.

வேகம்

வேகம்

மணிக்கு 27,724 கிமீ வேகத்தில் இந்த விண்வெளி நிலையம் பூமியை சுற்றி வருகிறதாம். நாள் ஒன்றுக்கு 15.5 முறை பூமியை சுற்றி வருகிறது. இதன்படி பார்த்தால், இந்த விண்வெளி மையத்தில் இருக்கும் வீரர்கள் ஒவ்வொரு நாளும் 92 முறை சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்க முடியுமாம்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ராஸ்காஸ்மோஸ், ஜப்பானின் ஜாக்ஸா, கனடாவின் சிஎஸ்ஏ உள்பட பல்வேறு நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து செயலாற்றி வருகின்றன.

காஸ்ட்லி

காஸ்ட்லி

பூமியில் தயாரிக்கப்பட்ட மிகவும் விலை உயர்ந்த கருவியாக இந்த விண்வெளி மையம் தெரிவிக்கப்படுகிறது. இதன் மதிப்பு 150 பில்லியன் டாலர்களாம்.

நீங்களும் பார்க்கலாம்

நீங்களும் பார்க்கலாம்

இந்த விண்வெளி மையத்தை பூமியின் எந்த பகுதியிலிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் வெறும் கண்ணால் பார்க்க முடியும். இரவில் இந்த விண்வெளி மையமானது, மெதுவாக நகரும் பிரகாசமான புள்ளி போன்று இது தெரியும்.

பிஎஸ்எல்வி ராக்கெட் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள்!

பிஎஸ்எல்வி ராக்கெட் பற்றிய சுவாரஸ்ய விஷயங்கள்!

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About International Space Center.
Story first published: Thursday, June 23, 2016, 16:15 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark