இந்திய விண்வெளி ஆய்வு மையம்[இஸ்ரோ] பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!

ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி, சமீபத்தில் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ.

இன்று, நேற்றல்ல... பல தசாப்தங்களை கடந்த முயற்சியும், உழைப்பின் பயனாகவே இத்தகைய மாபெரும் சாதனைகளை இஸ்ரோ படைத்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரோவின் துவக்கம், ஆரம்ப காலம் முதல் தற்போது வரையிலான நிகழ்வுகள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை இங்கே காணலாம்.

01. பிள்ளையார் சுழி

01. பிள்ளையார் சுழி

இஸ்ரோ நிறுவப்படுவதற்கு முன்னரே இந்தியாவின் விண்வெளி ஆய்வுகள் துவங்கிவிட்டன. 1920ம் ஆண்டுகளில் கொல்கத்தாவை சேர்ந்த சிசிர் குமார் மித்திரா என்ற அறவியலாளர், விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, சி.வி.ராமன், மேக்நாத் சாகா ஆகியோரும் விண்வெளி ஆய்வுகள் குறித்த சில கொள்கைகளை வழங்கினர். ஆனால், 1945ம் ஆண்டுக்கு பின்னர்தான் ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு வழி ஏற்பட்டது.

02. ஸ்தாபிதம்

02. ஸ்தாபிதம்

கடந்த 1962ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய குழுமம் உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 1969ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு என்ற அமைப்பு இஸ்ரோ என்ற பெயரில் விண்வெளி ஆய்வு மையமாக விரிவாக்கப்பட்டது. இந்தியாவின் விண்வெளி ஆய்வின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் தலைமையில் இது செயல்பட்டது. அதுமுதலே இஸ்ரோவின் வரலாறும் துவக்கமாக கருதப்படுகிறது. அன்றிலிருந்து விண்வெளித் துறையில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தி வருகிறது.

 03. முதல் செயற்கைகோள்

03. முதல் செயற்கைகோள்

இஸ்ரோ தயாரித்த முதல் செயற்கைகோள் ஆர்யபட்டா. இந்திய வானியல் நிபுணரான ஆர்யபட்டரின் பெயரில் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ந் தேதி ஆர்யபட்டா செயற்கைகோள் சோவியத் யூனியன் நாட்டிலிருந்து கொஸ்மொஸ்-3 என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சொந்தமாக செயற்கைகோள்களை ஏவுவதற்கான முயற்சிகள் நடந்தன.

04. முதல் ராக்கெட்

04. முதல் ராக்கெட்

உள்நாட்டு தொழில்நுட்பத்தில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் SLV-3. இந்த ராக்கெட் தயாரிப்பின் திட்ட இயக்குனராக மறைந்த மக்கள் ஜனாதிபதி ஏபிஜே. அப்துல்கலாம் பணியாற்றினார். 1980ம் ஆண்டு ஜூலை 18ந் தேதி இந்த ராக்கெட் ஏவப்பட்டது. 17 டன் எடை கொண்ட இந்த ராக்கெட்டில் 40 கிலோ வரை சுமந்து செல்லும். இதில், 35 கிலோ எடையுடைய ரோஹிணி செயற்கைகோள் வைத்து விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

05. எஸ்எல்வி ராக்கெட்

05. எஸ்எல்வி ராக்கெட்

துவக்கத்திலிருந்து பல ராக்கெட்டுகளை இஸ்ரோ தொடர்ந்து மேம்படுத்தியும், பயன்பாட்டுக்கு தக்கவாறு புதிய தொழில்நுட்பத்திலும் ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. அந்த வகையில், முதல்முதலில் தயாரித்த எஸ்எல்வி ராக்கெட் 500 கிமீ தொலைவுக்கு விண்ணில் பயணிக்கும். 40 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது நான்கு நிலை எரிபொருள் அமைப்புடையது. எஸ்எல்வி ராக்கெட்டின் மேம்பட்ட வடிவமாக ஏஎஸ்எல்வி தயாரிக்கப்பட்டது. இந்த ராக்கெட்டில் 150 கிலோ எடையுடைய செயற்கைகோளை வைத்து புவியின் தாழ்நிலை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியும்.

06. பிஎஸ்எல்வி

06. பிஎஸ்எல்வி

அடுத்து பிஎஸ்எல்வி ராக்கெட். இஸ்ரோவின் இன்றைய வணிக ரீதியில் வருவாய் ஈட்டித் தரும் முக்கிய ஏவுகலமாக விளங்குகிறது. இது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு தற்போது ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது. சூரிய இணைவு சுற்றுப்பாதையில் செயற்கைகோள்களை செலுத்துவதற்கு இந்த பிஎஸ்எல்வி ராக்கெட் உதவுகிறது.

 07. ஜிஎஸ்எல்வி

07. ஜிஎஸ்எல்வி

புவி இணக்க சுற்றுப்பாதையில் அதிக எடையுடைய செயற்கைகோள்களை செலுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. 5 டன் எடையுடைய செயற்கைகோள்களை இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்த முடியும். தாழ்நிலை புவி சுற்றுப்பாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்த இந்த ராக்கெட் உதவிகரமாக இருக்கிறது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் ஏவப்படுகின்றன.

08. ராக்கெட் ஏவுதளம்

08. ராக்கெட் ஏவுதளம்

கேரள மாநிலம், தும்பாவில்தான் முதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள கன்னியாகுமரியும் கூட ஏவுதளத்திற்கான இட தேர்வில் இடம்பெற்று, கடைசியில் தும்பா தேர்வு செய்யப்பட்டது. சென்னை அருகேயுள்ள ஆந்திர மாநில எல்லைக்குட்பட்ட ஸ்ரீஹரிகோட்டாதான் தற்போது இஸ்ரோவின் முக்கிய ராக்கெட் ஏவுதளமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏவுதளங்கள் உள்ளன. இந்த நிலையில், மூன்றாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனை தமிழகத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

09. கேலி, கிண்டல்...

09. கேலி, கிண்டல்...

ஆரம்ப காலத்தில் இஸ்ரோவின் ராக்கெட் பாகங்கள் மாட்டு வண்டியிலும், சைக்கிளிலும் வைத்து கொண்டு வரப்பட்டன. இந்த படங்களை பல வெளிநாட்டு ஊடகங்கள் கிண்டலாக சித்தரித்து வெளியிட்டன. ஆனால், அதே ஊடகங்கள் இன்று இஸ்ரோவின் வளர்ச்சியை வாயார புகழ்ந்து தள்ளி வருகின்றன.

10. செலவீனம்

10. செலவீனம்

கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் இஸ்ரோவின் ஆரம்ப காலம் அமைந்தது. அதாவது, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையான நாசா ஓர் ஆண்டில் செலவிடும் தொகைதான், இஸ்ரோவிற்கு 40 ஆண்டுகளுக்கான நிதியாக செலவிடப்பட்டுள்ளது.

 11. பட்ஜெட்

11. பட்ஜெட்

மத்திய அரசின் செலவில் வெறும் 0.34 சதவீதம்தான் இஸ்ரோவிற்கான செலவீனமாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறனில் 0.08 சதவீதத்தை இஸ்ரோ பெற்றிருக்கிறது.

12. கூகுளுக்கு உதவி

12. கூகுளுக்கு உதவி

இந்தியாவுக்கான கூகுள் எர்த் சேவைக்கான முப்பரிமாண படங்களை தருவதற்கான புவன் என்ற செயற்கைகோள் கருவியை இஸ்ரோதான் வடிவமைத்து கொடுத்துள்ளது.

 13. மையங்கள்

13. மையங்கள்

பெங்களூரை முக்கிய தலைமையிடமாக கொண்டு இயங்கும் இஸ்ரோவிற்கு நாடு முழுவதும் 13 விண்வெளி ஆய்வு மையங்கள் உள்ளன. தமிழகத்தில் மகேந்திரகிரி என்ற இடத்தில்தான் ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் எஞ்சின் தயாரிக்கப்படுகிறது.

14. விண்வெளிக்கு மனிதர்கள்...

14. விண்வெளிக்கு மனிதர்கள்...

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலத்தை தயாரிக்கும் பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இரண்டு விண்வெளி வீரர்களுடன், குறைந்த தூர புவி வட்டப்பாதைக்கு சென்று விட்டு திரும்பும் வகையில், இந்த திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பெங்களூரில் பயிற்சி மையமும் அமைக்கப்பட உள்ளது. புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில், எவ்வாறு தற்காத்து வாழ்வது என்பதற்கான பயிற்சிகளும், சிமுலேட்டர் உதவியுடன் வழங்கப்பட உள்ளன.

15. பெருமைமிகு தருணங்கள்

15. பெருமைமிகு தருணங்கள்

நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலத்தை செலுத்தியது, செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான்-1 விண்கலத்தை செலுத்தியது உள்ளிட்டவை இஸ்ரோவின் மிகப்பெரிய சாதனைகளாக உலக நாடுகளை வியந்து பாராட்ட செய்தன. வானிலை, தொலைத்தொடர்பு, ஒலி-ஒளிபரப்பு சேவைகளுக்கான இன்சாட் வரிசை செயற்கைகோள்கள் நாட்டு மக்களுக்கு அளப்பரிய சேவைகளை வழங்கி வருகின்றன.

16. மங்கள்யான் திட்டம்

16. மங்கள்யான் திட்டம்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன்-1 என்ற ஆளில்லா விண்கல திட்டத்தை ரூ.390 கோடியில் இஸ்ரோ செயல்படுத்தியது. இது நாசாவின் செவ்வாய் கிரக ஆய்விற்கான அனுப்பப்பட்ட விண்கலத்தைவிட 9 மடங்கு வரை செலவீனம் குறைவானது.

 17. வருவாய்

17. வருவாய்

கடந்த ஆண்டு 14 பில்லியன் வருவாயை இஸ்ரோ ஈட்டியிருக்கிறது. வெளிநாட்டு செயற்கைகோள்களை அனுப்புவதன் மூலமாக, இஸ்ரோவுக்கு அதிக அளவு வருவாய் கிடைத்து வருகிறது.

18. தமிழர்களின் பங்களிப்பு

18. தமிழர்களின் பங்களிப்பு

ஆரம்ப காலத்தில் இஸ்ரோவின் முதுகெலும்பாக விளங்கிய விஞ்ஞானிகளில் முக்கியமானவர் தமிழகத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆவார். அவர் தவிர்த்து, மயில்சாமி அண்ணாதுரை, அருணன், வளர்மதி போன்ற தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல பணியாளர்களின் பங்களிப்பும் இஸ்ரோவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக அமைந்தது.

20 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய காத்திருக்கும் பிஎஸ்எல்வி பற்றிய சுவாரஸ்யங்கள்!

20 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய காத்திருக்கும் பிஎஸ்எல்வி பற்றிய சுவாரஸ்யங்கள்!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Interesting Facts About ISRO.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X