உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!

கிரேன் (Crane)கள், இது இல்லை என்றால் கப்பல்துறையே இல்லை என இல்லை என கூறலாம். குறிப்பாக, துறைமுகங்கள் இது இல்லை எனில் ஸ்தம்பித்து போய்விடும். அந்த அளவிற்கு இன்றியமையாத எந்திரங்களாக கிரேன்கள் உள்ளன. இந்த எந்திரத்தையே மெக சைஸில் தயார் செய்து ஓர் நிறுவனம் உலக புகழ்பெற்ற துறைமுகம் ஒன்றிற்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் லைபெர் (Liebherr). இது ஓர் ஜெர்மன்-சுவிஸ் பன்னாட்டு உபகரண உற்பத்தி நிறுவனம் ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த நிறுவனம் பலுதூக்கும் எந்திரங்களை தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனம் ஆகும். கப்பல் மற்றும் துறைமுகங்களுக்கு தேவையான கிரேன்கள் தொடங்கி கட்டுமான துறைக்கு தேவையான கிரேன்களையும் இந்த நிறுவனம் தயார் செய்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

liebherr lhm 800

இந்த நிறுவனமே உலகின் மிகப் பெரிய கிரேன் ஒன்றை தயார் செய்து நெதர்லாந்தின் மாஸ்லக்டேவில் உள்ள ஹார்டெல் துறைமுகத்திற்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்எச்எம் 800இ (LHM 800E) கிரேனையே அது தயார் செய்து வழங்கி இருக்கின்றது. இது ஓர் மொபைல் எலெக்ட்ரிக் கிரேன் ஆகும்.

அதாவது துறைமுகங்களில் பயன்படுத்துவதற்கான நடமாடும் கிரேன் இதுவாகும். இது மின்சாரத்தில் இயங்கும். மேலும், இடம் விட்டு இடம் இதை மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக நூற்றுக் கணக்கில் வீல்கள் இந்த கிரேனில் வழங்கப்பட்டு இருக்கின்றன. முன் பக்க முதல் வரிசையில் மட்டும் 16 வீல்கள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

liebherr lhm 800 full view

இதுபோன்று பத்துக்கும் மேற்பட்ட வீல் வரிசையை அது கொண்டிருக்கின்றது. இதைக் கொண்டே இடம் விட்டு இடம் பெயரும். மேலும், இதுவே உலகின் மிகவும் பவர்ஃபுல் மொபைல் ஹார்பர் கிரேன் ஆகும். இதனால் 300 டன் வரையிலான எடையுள்ள பொருட்களை தூக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கு அதன் மிகப் பெரிய உருவமே காரணமாக இருக்கின்றது. 2,300 டன் எடையுள்ள பொருட்களை வெறும் ஒரு மணி நேரத்திலேயே இது இடம் மாற்றிவிடும். இதனால்தான் இந்த கிரேன் உலகின் பவர்ஃபுல் கிரேனாக பார்க்கப்படுகின்றது. இந்த கிரேன் 210 அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

liebherr lhm 800 top view

மிகப் பெரிய எடையுள்ள பொருட்களை ஏற்றிக் கொண்டு வேறு இடத்திற்கு தடையின்றி நகர்ந்து செல்லும் நோக்கிலேயே இந்த அளவு பெரிய உருவம் எல்எச்எம் 800இ-க்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. முழுக்க முழுக்க மின்சாரத்திலேயே இது இயங்கும் என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும்.

உலகின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஹார்டெல் டெர்மினலும் ஒன்றாகும். இது சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் சதுர பரப்பளவில் பரந்து விரிந்துக் காணப்படுகின்றது. இந்த துறைமுகத்தின் க்யூவே (Quay) ஆனது 600 மீட்டர் நீளம் கொண்டதாகும். இதன் அகலம் 16 மீட்டர் ஆகும். நெதர்லாந்தின் முக்கிய துறைமுகங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த துறைமுகத்தின் வாயிலாக நெதர்லாந்து நாட்டிற்கு பெரும்பாலான சரக்குகள் அந்நாட்டிற்கு வந்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன், அந்நாட்டு தயாரிப்புகள் உலக நாடுகளைச் சென்று சேரவும் இந்த துறைமுகமே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதனாலேயே துறைமுகத்தின் அவசிய தேவையை உணர்ந்து உலகின் மிகவும் பெரிய கிரேன் அங்கு பயன்பாட்டிற்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.

உலக நாடுகள் பல மின்சார வாகன பயன்பாட்டை காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்தமாதிரியான சூழலிலேயே இந்த கிரேன் மின்சார இயக்க திறனுடன் பயன்பாட்டிற்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக நெதர்லாந்து ஹார்டெல் துறைமுகம் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் பொருட்டு எத்தகைய பணிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மெகா சைஸ் ஹார்பர் கிரேன் பொருட்களை ஏற்றி அனுப்பி வைப்பதில் மாடுபோல் உழைக்கும். அதேவேளையில், சிறிதளவும் சுற்றுச் சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தாது. இந்த துறைமுகம் ஆண்டுதோறும் சுமார் 6 மில்லியன் டன் சரக்குகளை கையாளும். இத்தகைய சூழலிலேயே மின்சாரத்தில் இயங்கும் எல்எச்எம் 800இ கிரேன் பயன்பாட்டிற்கு களமிறக்கப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2024, 5:00 [IST]
English summary
Interesting facts about massive liebherr lhm 800 mobile electric harbor crane
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X